என்மீது அன்பு கூா்ந்து பலியானீா் சிலுவையிலே எனக்காய் இரத்தம் சிந்தி கழுவினீா் குற்றம் நீ்ங்க || Yen meethu Anbu Koornthu

என்மீது அன்புகூா்ந்து
பலியானீா் சிலுவையிலே
எனக்காய் இரத்தம் சிந்தி
கழுவினீா் குற்றம் நீ்ங்க
பிரித்தெடுத்தீா் பிறக்கும் முன்னால்
உமக்கென்று வாழ்ந்திட -2

ஆராதனை உமக்கே
அனுதினமும் உமக்கே -2

1. பிதாவான என் தேவனே
தகப்பனே என் தந்தையே -2
மாட்சிமையும் மகத்துவமும்
உமக்குத்தானே என்றென்றைக்கும் -2

2. உம் இரத்தத்தால் பிதாவோடு
ஒப்புரவாக்கி மகிழச்செய்தீர் -2
கறைபடாத மகனா(ளா)க
நிறுத்தி தினம் பாா்க்கின்றீா் -2

3. மாம்சமான திரையை
அன்று கிழித்து புது வழி திறந்தீா் -2
மகா மகா பரிசுத்த உம் திருச்சமுகம்
நுழையச் செய்தீா் -2

4. உம் சமூகம் நிறுத்தினீரே
உமது சித்தம் நான் செய்திட -2
அரசராக குருவாக
ஏற்படுத்தினனீா் ஊழியம் செய்ய -2

Comments

Popular posts from this blog

மனசெல்லாம் மெல்ல மெல்ல மரியே உன் பேரைச் சொல்ல Manasellam mella mella maraiaye un Perai Solla

இறைவனிடம் பரிந்து பேசும் புனித அந்தோணியிரே -Iraivanidam Parinthu Pesum Punitha Anthoniyarey

இறை அன்னையை நோக்கிப் புனித பெர்நார்துவின் மன்றாட்டு