பரிசுத்த ஆவியே பக்தர்கள் துணையாளரே | Thuuya Aaviaye Bagathargal Thunayanavarey

பரிசுத்த ஆவியே
பக்தர்கள் துணையாளரே
கூட இருப்பவரே
குறைகள் தீர்ப்பவரே

தேற்றிடும் தெய்வமே
திடன் தருபவரே
ஊற்றுத் தண்ணீரே
உள்ளத்தின் ஆறுதலே-எங்கள்

பயங்கள் நீக்கிவிட்டீர்
பாவங்கள் போக்கிவிட்டீர்
ஜெயமே உம் வரவால்
ஜெபமே உம் தயவால் - தினம்

அபிஷேக நாதரே
அச்சாரமானவரே
மீட்பின் நாளுக்கென்று
முத்திரையானவரே-எங்கள்

விடுதலை தருபவரே
விண்ணப்பம் செய்பவரே
சாட்சியாய் நிறுத்துகிறீர்
சத்தியம் போதிக்கிறீர்-தினம்

அயல்மொழி பேசுகிறோம்
அதிசயம் காண்கிறோம்
வரங்கள் பெறுகிறோம்
வளமாய் வாழ்கிறோம்

சத்துரு வரும் போது
எதிராய் கொடி பிடிப்பீர்
எக்காளம் ஊதுகிறோம்
எதிரியை வென்று விட்டோம்

Comments

Popular posts from this blog

மனசெல்லாம் மெல்ல மெல்ல மரியே உன் பேரைச் சொல்ல Manasellam mella mella maraiaye un Perai Solla

இறைவனிடம் பரிந்து பேசும் புனித அந்தோணியிரே -Iraivanidam Parinthu Pesum Punitha Anthoniyarey

இறை அன்னையை நோக்கிப் புனித பெர்நார்துவின் மன்றாட்டு