புனித மிக்கேல் அதிதூதரை நோக்கி செபம்

வானுலக சேனை தளங்களின் அதிபதியே, என்றும் வாழும் அரூயஅp;பிகளில் மகிமை பிரதாபம் நிறைந்த வானதூதரே, அவர்களிலும் உத்தமமானவரே! உன்னத கடவுளின் மந்திராலோதனையின் நிர்ணய பெட்டகமே, தேவ சிம்மாசனத்தின் அருகே நிற்கப் பேறுபெற்ற பிரவுவே, தேவ கட்டளைபடி விண்ணுலக வாசலைத் திறக்கவும், பூட்டவும், அதிகாரம் உள்ள வானவரே, தேவ நீதியின் அரியணையின் முன் எங்களைச் சேர்ப்பிக்கும் தூதாதி தூதரே, மரண அவஸ்தை படுகிறவர்களுக்கு உதவி செய்ய விரைந்து வரும் உபகாரியே, மரித்தவர்களை அழைத்து கொண்டுபோய் திவ்விய கர்தரின் சன்னதியில் சேர்க்கும் காவலரே, பலவீனனும் நிர்ப்பக்கியனுமாகிய அடியேனை கிருபாகடாட்சமாய்ப் பார்த்து என் வாழ்நாள் முழுவதிலும் சிறப்பாக எனது மரண தருவாயிலும் எனக்கு உமது தயை நேச உதவி புரிந்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறேன். -ஆமென்

Comments

Popular posts from this blog

மனசெல்லாம் மெல்ல மெல்ல மரியே உன் பேரைச் சொல்ல Manasellam mella mella maraiaye un Perai Solla

இறைவனிடம் பரிந்து பேசும் புனித அந்தோணியிரே -Iraivanidam Parinthu Pesum Punitha Anthoniyarey

இறை அன்னையை நோக்கிப் புனித பெர்நார்துவின் மன்றாட்டு