Posts

Showing posts from June, 2023

இல்லாமல் செய்வேன் என்று சொன்னோர் – Illamal Seiven Endru Sonnor

Image
இல்லாமல் செய்வேன் என்று சொன்னோர் முன் இடம் கொள்ளாமல் பெருகச்செய்யும் தேவன் உன்னை இல்லாமல் செய்வேன் என்று சொன்னோர் முன் இடம் கொள்ளாமல் பெருகச்செய்யும் தேவன் நேராகும் வாய்ப்பில்லா உன் வாழ்வை சீராக மாற்றிட வருவாரே Chorus: சீர்படுத்துவார் ஸ்திரப்படுத்துவார் பெலப்படுத்தி நிலைநிறுத்துவார் உன்னை சீர்படுத்துவார் ஸ்திரப்படுத்துவார் பெலப்படுத்தி நிலைநிறுத்துவார் உன்னை பெலப்படுத்தி நிலைநிறுத்துவார் Stanza -1 கொஞ்சகாலம் கண்ட பாடுகள் எல்லாமே பனிபோல உந்தன் முன்னே உருகிப்போகும் கொஞ்சகாலம் கண்ட பாடுகள் எல்லாமே பனிபோல உந்தன் முன்னே உருகிப்போகும் உன் கஷ்டங்கள் நஷ்டங்கள் எல்லாமே மாறும் உன் கஷ்டங்கள் நஷ்டங்கள் எல்லாமே மாறும் புது நன்மைகள் உன்னை சேரும் Chorus: சீர்படுத்துவார் ஸ்திரப்படுத்துவார் பெலப்படுத்தி நிலைநிறுத்துவார் உன்னை சீர்படுத்துவார் ஸ்திரப்படுத்துவார் பெலப்படுத்தி நிலைநிறுத்துவார் உன்னை பெலப்படுத்தி நிலைநிறுத்துவார் Stanza -2 மேன்மையை தடுக்க நின்ற கூட்டங்கள் எல்லாமே தேவன் உன் கூட என்று வணங்கி நிற்கும் மேன்மையை தடுக்க நின்ற கூட்டங்கள் எல்லாமே தேவன் உன் கூட என்று வணங்கி நிற்கும் உனை ...

இதுவரை நடத்தி குறைவின்றி காத்து மகிழ்வை தந்தீரே நன்றி ஐயா, Ithuvarai Naadathi Kuraivintri Kaathu

Image
இதுவரை நடத்தி குறைவின்றி காத்து மகிழ்வை தந்தீரே நன்றி ஐயா (2) தண்ணீரை கடந்தேன் சோதனை ஜெயித்தேன் மதிலை தாண்டினேன் உம் பலத்தால் (2) நன்றி நன்றி ஐயா உம்மை உயர்த்திடுவேன் 1. ஆபத்து நாளில் அனுகூலமான துணையுமானீரே நன்றி ஐயா (2) நன்றி நன்றி 2. உம் கரம் நீட்டி ஆசீர்வதித்து எல்லையை பெருக்கினீர் நன்றி ஐயா (2) நன்றி நன்றி 3. அபிஷேகம் தந்து வரங்களை ஈந்து பயண்படச் செய்தீரே நன்றி ஐயா (2) நன்றி நன்றி 4. கிருபைகள் தந்து ஊழியம் தந்து உயர்த்தி வைத்தீரே நன்றி ஐயா (2) நன்றி நன்றி

எல்லாம் இயேசுவே – எனக்கெல்லா மேசுவே தொல்லைமிகு மிவ்வுலகில் – தோழர் யேசுவே, ellaam Yesuvae - enakkellaa maesuvae thollaimiku mivvulakil - tholar yaesuvae

Image
எல்லாம் இயேசுவே – எனக்கெல்லா மேசுவே தொல்லைமிகு மிவ்வுலகில் – தோழர் யேசுவே 1. ஆயனும் சகாயனும் நேயனும் உபாயனும் நாயனும் எனக்கன்பான ஞானமண வாளனும் — எல்லாம் 2. தந்தை தாய் இனம்ஜனம் பந்துளோர் சிநேகிதர் சந்தோட சகலயோக சம்பூரண பாக்யமும் — எல்லாம் 3. கவலையில் ஆறுதலும் கங்குலிலென் ஜோதியும் கஷ்டநோய்ப் படுக்கையிலே கைகண்ட அவிழ்தமும் — எல்லாம் 4. போதகப் பிதாவுமென் போக்கினில் வரத்தினில் ஆதரவு செய்திடுங் கூட்டாளிமென் தோழனும் —எல்லாம் 5. அணியும் ஆபரணமும் ஆஸ்தியும் – சம்பாத்யமும் பிணையாளியும் மீட்பருமென் பிரிய மத்தியஸ்தனும் — எல்லாம் 6. ஆன ஜீவ அப்பமும் ஆவலுமென் காவலும் ஞானகீதமும் சதுரும் நாட்டமும் கொண்டாட்டமும் — எல்லாம்

அர்ச்சியசிஷ்ட சிலுவை மந்திரம்:

Image
அர்ச்சியசிஷ்ட சிலுவை அடையாளத்தினாலே எங்கள் சத்துருக்களிடத்திலே நின்று எங்களை இரட்சித்துக்கொள்ளும். எங்கள் சர்வேசுவரா!  பிதா, சுதன், பரிசுத்த ஆவியின் பெயராலே ஆமேன் 

பரிசுத்தத்திற்காக இளைஞரின் மன்றாட்டு

எல்லாம் வல்லவரும், அனைத்தையும் காண்கிறவருமான இறைவா, என் ஆத்துமத்தை உமது திவ்விய இலட்சண சாயலாக உண்டாக்கினீரே, அதை நான் களங்கப்படுத்தாதபடி எனக்கு அனுக்கிரகம் செய்தருளும். நமது ஆலயத்தை யாராவதொருவன் அசுத்தப்படுத்தினால் அவனைச் சிதைப்போம் என்று திருவுளம்பற்றினீரே, சுவாமி! உமது அருள் வாக்கின்படியே என் உடலே உமது தேவாலயமாயிற்று, இதிலே உமது திருவருளினால் தேவரீருடைய பரிசுத்த ஆவியார் உறைந்திடத் திருவுளம் கொண்டதுமன்றி அநேக முறை உம்முடைய திருக்குமாரனுமாகிய இயேசுநாதரும் தேவநற்கருணை வழியாக எழுந்தருளி வந்து இதனை அர்ச்சித்தருளினார். ஆகையால் தூய்மையின் உருவான இறைவா, உமக்குச் சொந்தமாகிய இத்தேவாலயத்தில் தேவரீர் மிகுந்த அருவருப்புடனே வெறுக்கிற பாவ அக்கிரமங்களை வரவிடாதேயும். தூய்மைக்கு விரோதமான ஓர் அர்ப்ப மாசும் என் ஆத்துமத்திலாவது உடலிலாவது உண்டாகாதபடி கிருபை செய்தருளும். என் திவ்விய இரட்சகரான இயேசுவே! இந்த விலைமதியாத புண்ணியத்தை அனுசரிக்க உமது சிறப்பான உதவி வேண்டியிருக்கிறதினால், தூய்மையை விரும்புகிறவரும் கன்னியர்களுக்கு நிறைந்த தயையுள்ள அரசருமாகிய தேவரீர் பாதத்தில் இந்தத் தூய்மையான புண்ணியத்தைக் கேட்க...

கணவன் மனைவியரின் செபம்

Image
  கிறிஸ்துவுக்கும், திருச்சபைக்கும் உள்ள நேச ஐக்கியத்தை குறிக்கவும், உலக பரம்புதலுக்காகவும், நெருங்கிய அன்புக்காகவும் புனித திருமணவாழ்வை அர்ச்சித்தருளின இறைவா, அதன் ஆசீர்வாதத்தை இருவரும் வணக்கத்தோடு ஏற்றுக் கொண்டு அதன் கடமைகளை நடத்தக் கிருபைபுரியும். எங்களுடைய ஒன்றிப்பை இடைவிடாமல் ஆசீர்வதிக்கவும், அதனால் நாங்கள் இருவரும் எல்லா கடமைகளையும் சமாதானத்தோடும் அன்போடும் நிறைவேற்றவும், பிரமாணிக்கமாய் எங்களில் ஒருவருக்கொருவர் நடக்கவும் உம்மை மன்றாடுகிறேன். பிரிபடக்கூடாத கட்டினால் கட்டின அந்தப் புனித பந்தத்தை பலவீனப்படுத்தக்கூடிய எவ்விதக் கெட்ட குணத்திலும் பாவச் செயலிலும் இருந்து என்னை விடுவித்தருளும். தன்னலத்தை மறந்து, தியாக உள்ளத்தோடு வாழ்ந்து நான் உமக்குப் பிரியப்பட நடக்க சுறுசுறுப்புள்ளவனாகவும் ஆசையுள்ளவனாகவும் செய்தருளும். இவ்வுலக சோதனை துன்பங்களினால் உமது பேரில் முறுமுறுத்து எல்லாவற்றிற்கும் காரணரும் ஈகிறவருமாயிருக்கிற உம்மை உலக வாழ்வின் நிறைவால் மறந்து விடாமலிருக்கச் செய்தருளும். பொறுமையாலும் கடன் சாந்த குணத்தாலும், செபத்தாலும், நன்றியறிதலாலும் உமக்குக் கீழ்படிந்திருக்க என...

தூய மிக்கேல் அதிதூதர் மன்றாட்டு

Image
வானுலக சேனைத் தளங்களின் அதிபதியே / சதா ஜீவ அரூபிகளில் மகிமைப் பிரதாபம் நிறைந்த சம்மனசானவரே / அவர்களிலும் உத்தமமானவரே / உன்னத கடவுளின் மந்திராலோசனை நிர்ணயப் பெட்டகமே / தேவ கட்டளைப்படியே பரலோக வாசலைத் திறக்கவும் பூட்டவும் அதிகாரம் உள்ள வானவரே / தேவநீதி சிம்மாசனத்தண்டையில் எங்கள் ஆத்துமாக்களைச் சேர்ப்பிக்கும் தூதாதி தூதரே / மரண அவஸ்தப்பைடுகிறவர்களுக்கு உதவி செய்ய தீவி ரித்தோடிவரும் உபகாரியே / மரித்தவர்களின் ஆத்துமங்களை அழைத்துக் கொண்டு போய் திவ்ய கர்த்தரின் சந்நிதியில் சேர்ப்பிக்கும் காவலரே / பலவீனனும் நிர்ப்பாக்கி யனுமாகிய அடியேனைக் கிருபாகடாட்சமாய் பார்த்து என் ஜீவிய காலம் முற்றிலும் விஷேசமாய் மரண தருவாயிலும் எனக்கு உமது தயை நேச உதவி புரிந்தருள வேண்டுமென்று மன்றாடுகிறேன். ஆமென்..

பேய் ஓட்டுகிறதற்கு செபம்

Image
அதிதூதரான புனித மிக்கேலே, எங்கள் போராட்டத்தில் எங்களைக்காத்தருளும். பசாசின் வஞ்சக சூழ்ச்சிகளில் எங்கள் துணையாயிரும். தாழ்மையான எங்கள் மன்றாட்டைக்கேட்டு இறைவன் பசாசைக்கண்டிப்பாராக! நீரும், விண்ணகப்படையின் தலைவரே, மக்களைக்கெடுக்க உலகில் சுற்றித்திரியும் பேயையும் மற்ற கெட்ட அரூபிகளையும் இறைவலிமையால் நரகத்தில் தள்ளுவீராக. ஆமென்..

பொன்மாலை நேரம் பூந்தென்றல் காற்றில் என் ஜீவராகம் கரைந்தோடுதே, Ponn Malai neram Poothenral kartil

Image
பொன்மாலை நேரம் பூந்தென்றல் காற்றில் என் ஜீவராகம் கரைந்தோடுதே என் இயேசு உன்னில் உறவாடும் நேரம் என் துன்ப மேகம் கலைந்தோடுதே உன் வாழ்வு ஒன்றே என் தேடலாகும் உன் அன்பு ஒன்றே என் பாடலாகும் 1. நீயில்லாத நாளெல்லாம் நிலவில்லாத வானம்தான் உன் நினைவில்லாத வாழ்வெல்லாம் மழையில்லாத மேகம்தான் காலம் தோறும் கண்ணின் மணிபோல் காக்கும் தெய்வமே சுமைசுமந்து சோர்ந்த வாழ்வை தேற்றும் இறைவனே என் இயேசுவே உன் அபயம் நீ தரவேண்டுமே என் தெய்வமே அருகில் நீ வரவேண்டுமே காற்றில் ஆடும் தீபம் என்னை சிறகில் மூடுமே 2. ஒரு கணம் என் அருகினில் நீ அமரும்போது ஒருயுகம் உனை தினம் நான் புகழ்கையில் எனக்குள் தோன்றும் புதுயுகம் (2) முள்ளில் பூக்கும் ரோஜா என்னைப் அள்ளிப் பறிப்பதேன் சொல்ல முடியா அன்பில் என்னைச் சூடி மகிழ்ந்ததேன் என் இயேசுவே என் அன்புக்கு வானம் எல்லை என் தெய்வமே உன் அன்புக்கு எல்லை இல்லை அன்பின் இதழில் இன்ப இதயம் உன் அன்பைப் பாடுதே

கடவுளை நாம் எவ்வாறு அடையலாம்

Image
கடவுளை அறிந்து, அவரை அன்பு செய்து, அவருடைய பிள்ளைகளாகிய எல்லா மனிதரையும் அன்பு செய்து வாழ்ந்தால் நாம் கடவுளை அடையலாம்.

தந்தானைத் துதிப்போமே – திருச்சபையாரே கவி பாடிப்பாடிதந்தானைத் துதிப்போமே, Thandhaanai thudhipoamae – thiruSabaiyaarae kavi – paadippaadiThandhaanai thudhipoamae

Image
தந்தானைத் துதிப்போமே – திருச் சபையாரே கவி – பாடிப்பாடி தந்தானைத் துதிப்போமே விந்தையாய் நமக்கனந்தனந்தமான விள்ளற்கரியதோர் நன்மை மிக மிக (2) – தந்தானை 1. ஒய்யாரத்துச் சீயோனே – நீயும் மெய்யாகக் களிகூர்ந்து நேர்ந்து ஒய்யாரத்துச் சீயோனே ஐயனேசுக்குனின் கையைக் கூப்பித் துதி செய்குவையே மகிழ் கொள்ளுவையே நாமும் (2) – தந்தானை 2. கண்ணாரக் களித்தாயே – நன்மைக் காட்சியைக் கண்டு ருசித்துப் புசித்து கண்ணாரக் களித்தாயே எண்ணுக்கடங்காத எத்தனையோ நன்மை இன்னுமுன்மேற் சோனா மாரிபோற் பெய்துமே (2) – தந்தானை 3. சுத்தாங்கத்து நற்சபையே – உனை முற்றாய்க் கொள்ளவே அலைந்து திரிந்து சுத்தாங்கத்து நற்சபையே சத்துக் குலைந்துனைச் சக்தியாக்கத் தம்மின் ரத்தத்தைச் சிந்தி எடுத்தே உயிர் வரம் (2) – தந்தானை 4. தூரம் திரிந்த சீயோனே – உனைத் தூக்கியெடுத்துக் கரத்தினிலேந்தி தூரம் திரிந்த சீயோனே ஆரங்கள் பூட்டி அலங்கரித்து நின்னை அத்தன் மணவாட்டி யாக்கினது என்னை! (2) – தந்தானை 5. சிங்காரக் கன்னிமாரே – உம் அலங்காரக் கும்மி அடித்துப் படித்து சிங்காரக் கன்னிமாரே மங்காத உம் மணவாளன் இயேசுதனை வாழ்த்தி வாழ்த்தி ஏத்திப் பணி...

நம்பியே வா நல்வேளையிதே உன் நேசர் இயேசுவையே நம்பிடுவாய்

Image
கர்த்தரிடம் விசுவாசமே ககளவு உனக்கிருந்தால் கதறிடும் உன்னை காத்திடுவார் கலங்கிடாமல் நீ நம்பிடுவாய் - நம்பியே திக்கற்றோரின் தகப்பனவர் தவிக்கும் விதவையின் தேவனவர் அமைதியிழந்து கண்ணீரோடே அலைந்திடாமல் நீ நம்பியே வா - நம்பியே கர்த்தரின் கை குறுகவில்லை கர்த்தரின் செவி மந்தமாகவில்லை தேவனின் பின்னே உன் வினைகள் தடுத்து ஜெபத்தைத் தள்ளிடுதே - நம்பியே சூரியனின் கீழ் உள்ளவை சகலமும் வெறும் மாயையல்லோ மானிடர் என்றும் மாறிடுவார் மாறாத இயேசுவை நம்பிடுவாய் - நம்பியே

நான் துள்ளி குதித்து ஓடி ஆடி பாடி மகிழ்வேன்

Image
நான் துள்ளி, குதித்து ஓடி ஆடி பாடி மகிழ்வேன் -4 இயேசு எந்தன் பாவம் முற்றும் மன்னித்தார் நான் துள்ளி, குதித்து ஓடி ஆடி பாடி மகிழ்வேன் -2

பாவியான என்னையும் முன் குறித்தவர், Paaviyane Ennaiyum Mun KurithavarJiva Maarkam Ennil Thanthu

Image
பாவியான என்னையும் முன் குறித்தவர் ஜிவ மார்க்கம் எண்ணில் தந்து அழைத்தவரை ஈந்தேன் சேவைக்காய் ஒன்றும் என்னை நிறுத்தலையே கிருபையால் என்னையும் நீர் நிறுத்தினீரே -2 எண்ணில் மேலான தரிசனம் வைத்தவரே என் நாட்கள் உமக்கென்று என்னை தெரிந்தவரே நீர் தந்த வாக்கொன்றும் இன்றும் மாறலையே ஆகாயம் அழிந்தாலும் ஒன்றும் குறையேலையே  -2 பாவியான என்னையும் முன் குறித்தவர் ஜிவ மார்க்கம் எண்ணில் தந்து அழைத்தவரை ஈந்தேன் சீயக்காய் ஒன்றும் என்னை நிறுத்தலையே கிருபையால் என்னையும் நீர் நிறுத்தினீரே கழுகை போல் உயரத்தில் பறக்கவேண்டி நான் கொண்ட நம்பிக்கை உம் மீதுதான் தகுதி அற்றே என்னை தேடி வந்து நீர் வைத்த திட்டங்கள் உம் மேன்மைதான் எண்ணில் மேலான தரிசனம் வைத்தவரே என் நாட்கள் உமக்கென்று என்னை தெரிந்தவரே நீர் தந்த வாக்கொன்றும் இன்றும் மாறலையே ஆகாயம் அழிந்தாலும் ஒன்றும் குறையேலையே  -2 உலகத்தின் மேன்மையையை அவமாக்கிட இல்லாத என்னை நீர் தெறிந்தீரய்யா ஓடத்தை ஓடிட வலிமை தந்து கரை சேரும் வரை கூட வருவீரய்யா எண்ணில் மேலான தரிசனம் வைத்தவரே என் நாட்கள் உமக்கென்று என்னை தெரிந்தவரே நீர் தந்த வாக்கொன்றும் இன்றும் மாறலையே ஆ...

நம் தேவனைத் துதித்துப்பாடி நம் தேவனைத் துதித்துப்பாடி அவர் நாமம் போற்றுவோம், Nam Devanai Thoothithu paadi

Image
நம் தேவனைத் துதித்துப்பாடி நம் தேவனைத் துதித்துப்பாடி அவர் நாமம் போற்றுவோம் களிகூர்ந்திடுவோம் , அகமகிழ்ந்திடுவோம் துதி சாற்றிடுவோம் , புகழ் பாடிடுவோம் அவர் நாமம் போற்றுவோம் 1. நம் பாவம் யாவும் நீக்கி மீட்டார் அவர் நாமம் போற்றுவோம் துன் மார்க்க வாசம் முற்றும் நீக்கி அவர் நாமம் போற்றுவோம் --- களிகூர்ந்திடுவோம் 2. மெய் ஜீவ பாதை தன்னில் சென்று அவர் நாமம் போற்றுவோம் நல் ஆவியின் கனிகள் ஈந்து அவர் நாமம் போற்றுவோம் --- களிகூர்ந்திடுவோம் 3. மேலோக தூதர் கீதம் பாடி அவர் நாமம் போற்றுவோம் பேரின்ப நாடு தன்னில் வாழ அவர் நாமம் போற்றுவோம் --- களிகூர்ந்திடுவோம்

வேதசாட்சி தேவசகாயம்பிள்ளை செய்து வந்த ஜெபம்

Image
  *நித்திய நரகத்தில் விழும் திரளில் நின்று என்னைக் காத்திட திருவுளமான என் இயேசுவே!*  *மனிதரின் மீட்பிற்காய் கல்வாரி மலையில் சிலுவையில் இறந்த என் இயேசுவே! உமது அன்பிரக்கத்திற்காக உமக்கு நன்றி கூறுகிறேன்.*  *வசந்த காலத்தில் தென்றல் காற்றில் அசைந்தாடும் மணமிகும் ரோஜா மலரைப்போன்று எனது இதயத்தைத் தூயதாக்கி, அதனை உம் தூய அடிகளில் அர்ப்பணிக்கின்றேன்.*    .*தண்ணீர் பாய்ந்தோடும் நீர்மிகு நதியினைப்போல் என் வாய் மொழியால் உம்மை புகழ்வேன். எனது நன்றியறிதல் அணுவினைப்போல் மிகவும் சிறியதானதே.* *திருக்கன்னி மரியாயின் திருக்கரங்களால் சீராட்டப்பெறும் பாலனான இயேசுவே! உமது புன்னகையால் என் பாவங்களனைத்தையும் அகற்றிடும். நான் உடலிலும் மனதிலும் ஆவியிலும் இப்பொழுது துயருறுகிறேன்.*      *சாவின் கொடூரப்பிடியிலும் உம்மைப் பின் செல்வதற்கான அருளைத் தாரும் ஆண்டவரே!* *ஆமென்.*      *மறைசாட்சி தேவசகாயம் பிள்ளை அவர்களே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்* 🔺🔺🔺🔺🔺🔺🔺🔺🔺

கத்தோலிக்க திருச்சபையின் அருட்பணியாளர்கள் அணியும் திருப்பலி உடைகள் வெவ்வேறு நிறங்கள் மற்றும் விளக்கம்

வெள்ளை (பொன், வெள்ளி):  தூய்மை, மாசின்மை, மகிமை மற்றும் வெற்றியின் அடையாளம். இயேசு, மரியன்னை, மறைசாட்சிகளாக இறக்காத புனிதர்களின் விழா நாட்களில் அணியப்படுகிறது. பச்சை:  வளர்ச்சி மற்றும் நம்பிக்கையின் அடையாளம். பொதுக்காலத்தின் திருவழிபாட்டுக் கொண்டாட்டங்களில், வார நாள்களிலும் ஞாயிறன்றும் அணியப்படுகிறது. சிவப்பு:  நெருப்பு மற்றும் இரத்தத்தின் அடையாளம். மறைசாட்சிகளாக இறந்த புனிதர்களின் விழாக்கள், புனித வெள்ளி, குருத்து ஞாயிறு, தூய ஆவியின் வருகைப் பெருவிழாக் கொண்டாட்டங்களில் அணியப்படுகிறது. ஊதா:  தவம் மற்றும் பரிகாரத்தின் அடையாளம். திருவருகைக்காலம், தவக்காலத்தின் திருவழிபாட்டுக் கொண்டாட்டங்களிலும், துக்க நிகழ்வுகளிலும் அணியப்படுகிறது.

அன்புத் தந்தையே கருணை தெய்வமே | Anbu Thanthaiyae Karunai Thaivamae

Image
அன்புத் தந்தையே கருணை தெய்வமே எங்கள் அந்தோணியாரே புனித நகரிலே புதுமை புரிந்திடும் பதுவைப் புனிதரே வாழ்க - 2 வாழ்க வாழ்க வண்ணத் திருவடி புனிதர் பூவடி வாழ்க பணியில் வாழ்வும் பகிர்வில் நிறைவும் வரவும் உம் வரவால் தணியும் நோய்கள் நகரும் பிணிகள் தலைவா உன் தயவால் - 2 தவிக்கும் உள்ளம் தனை உயர்த்த தர்மம் தான் என்றாய் உரிமை வாழ்வை உலகிற்கு உயர்த்த புனித நகரிலே இறைவன் ஒளியில் நாங்கள் செல்ல வழியைச் சொன்னவரே இறை நல்வாழ்வில் நிதமும் வாழப் பாதை தந்தவரே - 2 எந்தன் நெஞ்சில் நீ இருந்து உண்மை நெறி செல்ல இறைவன் வாக்கை வாழ்ந்து காட்டிட புனித நகரிலே

அதிகாலை செபம்

Image
விடியற்காலை கண்விழிக்கும்போது சேசு மரிய சூசையே! உங்கள் அடைக் கலத்திலே நான் கண்விழித்து யாதொரு பொல் லாப்பைக் காணாமலும் நினையாமலும் செய்யாமலும் இருக்கக்கடவேனாக. ஆமென். எழுந்திருக்கிற பொழுது சேசுநாதருடைய திருநாமத்தினாலே எழுந்திருக்கிறேன். படுக்கையிலே நின்று எழுந்தது போல பாவத்தை விட்டு எழுந்து மறுபடியும் நான் பாவத்தில் விழாதபடிக்கு என்னைத் தற்காத் தருளும் சுவாமி. ஆமென். அதிகாலை ஜெபம்  சேசுவே உமதன்பிற்காகவும் பாவிகள் மனந்திரும்பவும் மரியாயின் மாசற்ற இருதயத் திற்கு எதிராகச் செய்யப்படும் பாவங்களுக்குப் பரிகாரமாகவும் இந்நாளை ஒப்புக்கொடுக்கிறேன்.

தூய அந்தோணியாரை நோக்கி பொது மன்றாட்டு

Image
எங்கள் பாதுகாவலரான தூய அந்தோணியாரே, இறைவனின் அன்புள்ள அடியாரே கிறிஸ்து பாலகனை கையில் ஏந்தும் பேறுபெற்ற தூயவரே, திருமறையை ஆர்வமுடன் போதித்த சிறந்த போதகரே தப்பறைகளை தகர்த்தெறிந்த வித்தகரே, இறைவனின் தனி அருளால் அலகையை ஓட்டுபவரே, துன்புறுவோரின் துயர் துடைப்பவரே, பாவியராகிய நாங்கள் உமது உதவியை நாடி உம்மிடம் ஓடி வந்தோம். புதுமை வரம் பெற்றிருக்கும் எம் ஞானத்தந்தையே! நம்பிக்கையுடன் உம்மிடம் ஓடி வந்துள்ள உம் பிள்ளைகளின் மனறாட்டுக்களை கேட்டருளும்.  உமது ஆதரவை நாடி வந்துள்ள உம் அடியார் எம்மீது உம் கருணைக் கண்களைத் திருப்பியருளும். துன்பம், பிணி, வறுமை, சிறுமை ஆகியற்றால் வாடி வந்திருக்கும் எங்களுக்கு உதவியருளும். அழுவோரின் கண்ணீரைத் துடைத்தருளும். நோயாளிகளுக்கு உடல் நலம் கொடுத்தருளும்.   எங்கள் அன்புக்குரிய தூய அந்தோணியாரே! இறைவனின் திருவுளப்படி எப்பொழுதும் நீர் நடந்தது போல நாங்களும் இன்பத்திலும் துன்பத்திலும் எப்பொழுதும் அவரது திருவுளத்துக்கு இசைந்து நடக்கவும், நீர் தூய வாழ்வு வாழ்ந்தது போல, நாங்களும் ஒருவருக்கும் வஞ்சகம் நினையாமலும், செய்யாமலும் தீமையை அகற்றி புனிதராய் வாழவும், திருச்சப...

புனித அந்தோனியார் மன்றாட்டு மாலை

Image
சுவாமி கிருபையாயிரும் கிறிஸ்துவே கிருபையாயிரும் சுவாமி கிருபையாயிரும் கிறிஸ்துவே எங்கள் பிராத்தனையைக் கேட்டருளும் கிறிஸ்துவே எங்கள் பிராத்தனையை நன்றாகக் கேட்டருளும் பரமண்டலங்களிலே இருக்கிற பிதாவாகிய சர்வேசுரா        - எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி உலகத்தை மீட்டு இரட்சித்த சுதானாகிய சர்வேசுரா       - எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவா மி தூய ஆவியாகிய சர்வேசுரா        -எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி புனித தமத்திருத்துவமாய் இருக்கிற ஏக சர்வேசுரா        -எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி புனித மரியாயே .... எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் . பக்தி சுவாலகருக்கு ஒத்தவராகிய புனித பிரான்சிஸ்குவே ... எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் . பதுவைப் பதியரான புனித அந்தோணியாரே .... எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் . விண்ணகத் திருவின் திருப்பெட்டியான புனித அந்தோணியாரே .... எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் . மூப்பின் கீழமைச்சலுக்கு கண்ணாடியான புனித அந்தோணியாரே .... எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் . தர்மத்தை மிகவும் பின்தொடர்ந்...

புனித அந்தோனியார் நவநாள் மன்றாட்டு

Image
1. வருகைப்பா (நிற்கவும்) பதுவை பதியராம் அந்தோனியாரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும், (மும்முறை) குரு: பிதா, சுதன், பரிசுத்த ஆவியின் பெயராலே எல்: ஆமென். குரு: பரிசுத்த திரித்துவத்துக்கு இப்பொழுதும் எப்பொழுதும் தோத்திரம் உண்டாவதாக எல்: ஆமென். குரு: பரிசுத்த தேவதாயே எங்கள் துன்ப வேளையில் நாங்கள் உமது அடைக்கலத்தை தேடி உம்மிடம் வருகின்றோம். மகிமை நிறைந்தவளும் மாசில்லாதவளுமான கன்னிகையே, எங்கள் மன்றாட்டைத் தள்ளிவிடாமல், எல்லா ஆபத்துகளிலிருந்தும் எங்களைக் காத்தருளும். எல்: ஆமென். புனித அந்தோனியாரை நோக்கி வேண்டுதல் ஜெபம் எல்: இப்புண்ணிய ஷேத்திரத்தில் மாட்சிமை தங்கிய மேலான சிம்மாசனத்தில் கிருபாசனங்கொண்டு எழுந்தருளியிருக்கிற புனித அந்தோனியாரே ! பரிசுத்தத்தனம் விளங்கும் லீலியே ! விலைமதிக்கப்படாத மாணிக்கமே ! பரலோக பூலோக காவலரே ! கஸ்தி துன்பப்படுகிறவர்களுக்குப் பரம சஞ்சீவியானவரே ! பாவிகளின் தஞ்சமே ! உமது இன்பமான சந்நிதானம் தேடி வந்தோம். உமது திருமுக மண்டலத்தை அண்ணாந்து பார்த்து உம்மைக் கெஞ்சி மன்றாடுகிறோம். மகா சிரவணம் பொருந்திய புனித அந்தோனியாரே ! சூரத்தனமுள்ள மேய்ப்பரே ! பசாசுகளை மிர...

நான் ஆராதிக்கும் இயேசு என்றும் ஜீவிக்கிறாரே, Naan Aarathikum Yesunaan aaraathikkum Yesu entum jeevikkiraarae

Image
நான் ஆராதிக்கும் இயேசு என்றும் ஜீவிக்கிறாரே அவர் தேவனாயினும் என்னோடு பேசுகின்றாரே அவர் சிந்தின இரத்தம் மீட்பை தந்தது அவர் கொண்ட காயங்கள் சுக வாழ்வை தந்தது அவர் என்னோடு இருந்தால் ஒரு சேனைக்குள் பாய்வேன் அவர் என்னோடு இருந்தால் ஒரு மதிலை தாண்டுவேன் 1. உடைந்துபோன என் வாழ்வை சீரமைச்சாரே அரணான பட்டணம்போல் மாற்றி விட்டாரே என் சத்துருக்கள் பின்னிட்டு ஒடச் செய்தாரே என் எல்லையெங்கிலும் சமாதானம் தந்தாரே அவர் செய்த நன்மையை நான் சொல்லி துதிப்பேன் 2. இரட்சிப்பின் வஸ்திரத்த உடுத்துவித்தாரே நீதியென்னும் மார்க்கவசம் எனக்கு தந்தாரே கிருபைய தந்து என்ன உயர்த்தி வச்சாரே -என் நாவின் மேலே அதிகாரம் வச்சாரே 3. உலர்ந்துபோன என் கோலை துளிர்க்கச் செய்தாரே ஜீவனற்று என் வாழ்வில் ஜீவன் தந்தாரே ஒரு சேனையைப்போல என்னை எழும்பச் செய்தாரே என் தேசத்தை சுதந்தரிக்கும் பெலனைத் தந்தாரே

இஸ்ரவேலின் துதிகளில் வாசம் செய்யும் எங்கள் தேவன் நீர் பரிசுத்தரே, Isravelin Thuthigalil Vasam Seyyumengal devan neer parisuthare

Image
இஸ்ரவேலின் துதிகளில் வாசம் செய்யும் எங்கள் தேவன் நீர் பரிசுத்தரே ஓஹோ.. வாக்குகள் பல தந்து அழைத்துவந்தீர் ஒரு தந்தை போல எம்மை தூக்கி சுமந்தீர் இனி நீர் மாத்ரமே எங்கள் சொந்தமானீர் உம்மை ஆராதிப்போம் ஆர்ப்பரிப்போம் உம் நாமத்தினால் என்றும் ஜெயமெடுப்போம் 1. எதிர்காலம் இல்லாமல் ஏங்கி நின்றோம் காலத்தைப் படைத்தவர் தேடிவந்தீர் சிறையிருப்பை மாற்றி தந்தீர் சிறுமையின் ஜனம் எம்மை உயர்த்திவைத்தீர் – இனி நீர் மாத்ரமே 2. செங்கடலைக் கண்டு சோர்ந்துபோனோம் யோர்தானின் நிலை கண்டு அஞ்சி நின்றோம் பயப்படாதே முன் செல்லுகிறேன் என்றுரைத்து எம்மை நடத்திவந்தீர் – இனி நீர் மாத்ரமே 3. எதிரியின் படை எம்மை சூழும்போது ஓங்கிய புயங் கொண்டு யுத்தம் செய்தீர் பாடச் செய்தீர் துதிக்கச் செய்தீர் எரிகோவின் மதில்களை இடிக்கச் செய்தீர் – இனி நீர் மாத்ரமே

அம்மா உந்தன் அன்பினிலே அருள்வாய் எமக்கு அடைக்கலமே, Amma Unthan Annbiniley Arulvaii yenaku Adaikalamey

Image
அம்மா உந்தன் அன்பினிலே  அருள்வாய் எமக்கு அடைக்கலமே  இறைவன் படைத்த எழிலே  ஏசுவை தந்த முகிலே  தூய்மை பொழியும் நிலவே  துணையே வாழ்வில் நீயே -- (அம்மா உந்தன்)  புவியோர் எங்கள் புகழே  புனிதம் பொங்கும் அருளே  உன்மகன் புதிய உறவே  எம்மையும் பதிய செய்வாய் -- (அம்மா உந்தன்)

மனித வாழ்க்கையும் கடவுளும்

Image
மனிதர் இவ்வுலகில் மகிழ்ச்சியாக வாழ விரும்புகின்றனர். உண்மையான மகிழ்ச்சியைத் தருபவரும், அதற்கு ஊற்றாக இருப்பவரும் கடவுளே. எனவே கடவுளை அடைவதில் தான் மனிதர் உண்மையான மகிழ்ச்சியைப் பெற முடியும்.

प्रभु की विनती

Image
हे पिता हमारे, जो स्वर्ग में हैं, तेरा नाम पवित्र किया जावे, तेरा राज्य आवे, तेरी इच्छा जैसे स्वर्ग में है, वैसे इस पृथ्वी पर भी हो. हमारा प्रतिदिन का आहार आज हमें दे, और हमारे अपराध हमें क्षमा कर, जैसे हम भी अपने अपराधियों को क्षमा करते हैं, और हमें परीक्षा में न डाल, परन्तु बुराई से बचा. आमेन.

பழைய மங்கள வார்த்தை செபம்| Old Hail Mary

Image
அருள் நிறைந்த மரியாயே வாழ்க கர்த்தர் உம்முடனே பெண்களுக்குள் ஆசீர்வதிக்கப்பட்டவள் நீரே உம்முடைய திருவயிற்றின் கனியாகிய இயேசுவும் ஆசீர்வதிக்கப்பட்டவரே, அர்ச்சியேஸ்ட மரியாயே சருவேசுரனுடைய மாதாவே பாவிகளாயிருக்கிற எங்களுக்காக இப்பொழுதும் எங்கள் மரண நேரத்திலும் வேண்டிக்கொள்ளும். ஆமென்

ஏத்தி வச்ச மெழுகுவர்த்தி எரியுதம்மா உன்ன சுத்தி பாட வந்தேன் உம்மை பற்றி பிறந்ததம்மா நல்ல புத்தி- Amma Vantitom Vantitom Nerungi Vanthitom

Image
ஏத்தி வச்ச மெழுகுவர்த்தி எரியுதம்மா உன்ன சுத்தி பாட வந்தேன் உம்மை பற்றி பிறந்ததம்மா நல்ல புத்தி மெழுகு ஒளியில் பார்த்தேனம்மா உம் முகத்த ஏழை சிறுவனுக்கு கொடுத்திடும்மா நல்ல வரத்த - (2) அந்தோணியார் கோவிலில் தொடங்கிட்டோம் - பயணத்த முழுசா செலுத்திட்டோம் அம்மா மேல - கவனத்த எங்கள் ஆச நிறைவேத்த தொடங்கிட்டோம் - பயணத்த   அழக பாத்தோமே அடயாரின் சீருபத்த அங்க கூடு ம் ஜெனங்க ஜெபத்த சொல்லுது  அந்த சந்தோஷத்தில அலையும் துள்ளுது அந்த நீல கடலில் நீந்தி செல்லும் மீனும் கூட உயர்த்தி சொல்லுது  மரியே நீ வாழ்கவென்றது அந்த மீனும் கொடி மரத்த ஜெபித்து நின்றது                     ‌‌‌                                       -ஏத்தி  அருள் நிறைந்த மரியாயே வாழ்க கர்த்தர் உம்முடனே பெண்களுக்குள் ஆசீர்வதிக்கப்பட்டவள் நீரே உம்முடைய திருவயிற்றின் கனியாகிய இயேசுவும் ஆசீர்வதிக்கப்பட்டவரே,                 ...

தலையான பாவங்களுக்கு எதிரான ஏழு நற்பண்புகள்

1. தாழ்ச்சி 2. பொறுமை 3. கற்பு 4. தாராள குணம் 5. அளவோடு உண்ணல் 6. பிறரன்பு 7. சுறுசுறுப்பு 

தலையான ஏழு பாவங்கள்

1. தற்பெருமை 2. சீற்றம் 3. காம வெறி 4. பேராசை 5. பெருந்தீனி விரும்பல் 6. பொறாமை 7. சோம்பல் 

மூவேளை மன்றாட்டு

Image
ஆண்டவருடைய தூதர் மரியாளுக்கு தூது உரைத்தார் - மரியா தூய ஆவியாரால் கருவுற்றார் - அருள் மிகப் இதோ ஆண்டவரின் அடிமை. - உமது சொற்படியே எனக்கு நிகழட்டும். வாக்கு மனிதர் ஆனார். - நம்மிடையே குடிகொண்டார். - அருள் மிகப்  கிறிஸ்துவின் வாக்குறுதிகளுக்கு நாங்கள் தகுதி பெறும்படி / இறைவனின் தூய அன்னையே / எங்களுக்காக வேண்டிக்கொள்ளும். - அருள் மிகப்  மன்றாடுவோமாக: இறைவா / உம் திருமகன் மனிதர் ஆனதை / உம்முடைய வானதூதர் வழி யாக / நாங்கள் அறிந்திருக்கிறோம். / அவருடைய பாடுகளினாலும் இறப்பினாலும் / நாங்கள் உயிர்ப்பின் மாட்சி பெற / உமது அருளைப் பொழிவீராக. / எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து வழியாக / உம்மை மன்றாடுகிறோம். / ஆமென் .

இறை அன்னையை நோக்கிப் புனித பெர்நார்துவின் மன்றாட்டு

Image
மிகவும் இரக்கமுள்ள தாயே உம்மிடம் அடைக்கலம் நாடி வந்து ஆதரவைத் தேடி மன்றாடினோர் எவரையும் நீர் கைவிட்டதாக ஒருபோதும் உலகில் சொல்லக் கேட்டதில்லை என்பதை நினைத்தருளும். கன்னியர்களுக்கு அரசியான கன்னியே நீர் அடைக்கலம் தருபவர் என்னும் நம்பிக்கை என்னைத் தூண்டுவதால் நான் உமது திருவடியை நாடி வருகிறேன். பாவியாகிய நான் உமது இரக்கத்திற்காக துயரத்தோடு உம் திருமுன் காத்து நிற்கிறேன். மனிதராகப் பிறந்த வார்த்தையின் தாயே என் மன்றாட்டைப் புறக்கணியாமல் கேட்டருளும். பிறப்புநிலைப் பாவம் இன்றிக் கருவுற்ற தூய மரியே பாவிகளுக்கு அடைக்கலமே இதோ உம்முடைய அடைக்கலம் நாடி ஓடி வந்தோம். உம்முடைய திருமகனிடம் வேண்டிக்கொள்ளும். ஆமென் 

மகிழ்வின் மறை உண்மைகள்

Image
1. கபிரியேல் தூதர் கன்னி மரியாவுக்குத் தூது உரைத்தது. 2. இறை அன்னை எலிசபெத்தைச் சந்தித்தது 3. இயேசு பெத்லகேமில் பிறந்தது  இயேசு கோவிலில் காணிக்கையாக ஒப்புக்கொடுக்கப்பட்டது  காணாமல்போன இயேசுவைக் கோவிலில் கண்டடைந்தது