எல்லாம் இயேசுவே – எனக்கெல்லா மேசுவே தொல்லைமிகு மிவ்வுலகில் – தோழர் யேசுவே, ellaam Yesuvae - enakkellaa maesuvae thollaimiku mivvulakil - tholar yaesuvae

எல்லாம் இயேசுவே – எனக்கெல்லா மேசுவே
தொல்லைமிகு மிவ்வுலகில் – தோழர் யேசுவே

1. ஆயனும் சகாயனும் நேயனும் உபாயனும்
நாயனும் எனக்கன்பான ஞானமண வாளனும் — எல்லாம்

2. தந்தை தாய் இனம்ஜனம் பந்துளோர் சிநேகிதர்
சந்தோட சகலயோக சம்பூரண பாக்யமும் — எல்லாம்

3. கவலையில் ஆறுதலும் கங்குலிலென் ஜோதியும்
கஷ்டநோய்ப் படுக்கையிலே கைகண்ட அவிழ்தமும் — எல்லாம்

4. போதகப் பிதாவுமென் போக்கினில் வரத்தினில்
ஆதரவு செய்திடுங் கூட்டாளிமென் தோழனும் —எல்லாம்

5. அணியும் ஆபரணமும் ஆஸ்தியும் – சம்பாத்யமும்
பிணையாளியும் மீட்பருமென் பிரிய மத்தியஸ்தனும் — எல்லாம்

6. ஆன ஜீவ அப்பமும் ஆவலுமென் காவலும்
ஞானகீதமும் சதுரும் நாட்டமும் கொண்டாட்டமும் — எல்லாம்

Comments

Popular posts from this blog

மனசெல்லாம் மெல்ல மெல்ல மரியே உன் பேரைச் சொல்ல Manasellam mella mella maraiaye un Perai Solla

இறைவனிடம் பரிந்து பேசும் புனித அந்தோணியிரே -Iraivanidam Parinthu Pesum Punitha Anthoniyarey

இறை அன்னையை நோக்கிப் புனித பெர்நார்துவின் மன்றாட்டு