இஸ்ரவேலின் துதிகளில் வாசம் செய்யும் எங்கள் தேவன் நீர் பரிசுத்தரே, Isravelin Thuthigalil Vasam Seyyumengal devan neer parisuthare
இஸ்ரவேலின் துதிகளில் வாசம் செய்யும்
எங்கள் தேவன் நீர் பரிசுத்தரே
ஓஹோ.. வாக்குகள் பல தந்து அழைத்துவந்தீர்
ஒரு தந்தை போல எம்மை தூக்கி சுமந்தீர்
இனி நீர் மாத்ரமே எங்கள் சொந்தமானீர்
உம்மை ஆராதிப்போம் ஆர்ப்பரிப்போம்
உம் நாமத்தினால் என்றும் ஜெயமெடுப்போம்
1. எதிர்காலம் இல்லாமல் ஏங்கி நின்றோம்
காலத்தைப் படைத்தவர் தேடிவந்தீர்
சிறையிருப்பை மாற்றி தந்தீர்
சிறுமையின் ஜனம் எம்மை உயர்த்திவைத்தீர் – இனி நீர் மாத்ரமே
2. செங்கடலைக் கண்டு சோர்ந்துபோனோம்
யோர்தானின் நிலை கண்டு அஞ்சி நின்றோம்
பயப்படாதே முன் செல்லுகிறேன்
என்றுரைத்து எம்மை நடத்திவந்தீர் – இனி நீர் மாத்ரமே
3. எதிரியின் படை எம்மை சூழும்போது
ஓங்கிய புயங் கொண்டு யுத்தம் செய்தீர்
பாடச் செய்தீர் துதிக்கச் செய்தீர்
எரிகோவின் மதில்களை இடிக்கச் செய்தீர் – இனி நீர் மாத்ரமே
Comments