வேதசாட்சி தேவசகாயம்பிள்ளை செய்து வந்த ஜெபம்

  *நித்திய நரகத்தில் விழும் திரளில் நின்று என்னைக் காத்திட திருவுளமான என் இயேசுவே!* 

*மனிதரின் மீட்பிற்காய் கல்வாரி மலையில் சிலுவையில் இறந்த என் இயேசுவே! உமது அன்பிரக்கத்திற்காக உமக்கு நன்றி கூறுகிறேன்.*

 *வசந்த காலத்தில் தென்றல் காற்றில் அசைந்தாடும் மணமிகும் ரோஜா மலரைப்போன்று எனது இதயத்தைத் தூயதாக்கி, அதனை உம் தூய அடிகளில் அர்ப்பணிக்கின்றேன்.*
  
.*தண்ணீர் பாய்ந்தோடும் நீர்மிகு நதியினைப்போல் என் வாய் மொழியால் உம்மை புகழ்வேன். எனது நன்றியறிதல் அணுவினைப்போல் மிகவும் சிறியதானதே.*

*திருக்கன்னி மரியாயின் திருக்கரங்களால் சீராட்டப்பெறும் பாலனான இயேசுவே! உமது புன்னகையால் என் பாவங்களனைத்தையும் அகற்றிடும். நான் உடலிலும் மனதிலும் ஆவியிலும் இப்பொழுது துயருறுகிறேன்.*
  
  *சாவின் கொடூரப்பிடியிலும் உம்மைப் பின் செல்வதற்கான அருளைத் தாரும் ஆண்டவரே!*

*ஆமென்.*
    
*மறைசாட்சி தேவசகாயம் பிள்ளை அவர்களே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்*

🔺🔺🔺🔺🔺🔺🔺🔺🔺

Comments

Popular posts from this blog

மனசெல்லாம் மெல்ல மெல்ல மரியே உன் பேரைச் சொல்ல Manasellam mella mella maraiaye un Perai Solla

இறைவனிடம் பரிந்து பேசும் புனித அந்தோணியிரே -Iraivanidam Parinthu Pesum Punitha Anthoniyarey

இறை அன்னையை நோக்கிப் புனித பெர்நார்துவின் மன்றாட்டு