பொன்மாலை நேரம் பூந்தென்றல் காற்றில் என் ஜீவராகம் கரைந்தோடுதே, Ponn Malai neram Poothenral kartil

பொன்மாலை நேரம் பூந்தென்றல் காற்றில்
என் ஜீவராகம் கரைந்தோடுதே
என் இயேசு உன்னில் உறவாடும் நேரம்
என் துன்ப மேகம் கலைந்தோடுதே
உன் வாழ்வு ஒன்றே என் தேடலாகும்
உன் அன்பு ஒன்றே என் பாடலாகும்

1. நீயில்லாத நாளெல்லாம் நிலவில்லாத வானம்தான்
உன் நினைவில்லாத வாழ்வெல்லாம் மழையில்லாத மேகம்தான்
காலம் தோறும் கண்ணின் மணிபோல் காக்கும் தெய்வமே
சுமைசுமந்து சோர்ந்த வாழ்வை தேற்றும் இறைவனே
என் இயேசுவே உன் அபயம் நீ தரவேண்டுமே
என் தெய்வமே அருகில் நீ வரவேண்டுமே
காற்றில் ஆடும் தீபம் என்னை சிறகில் மூடுமே

2. ஒரு கணம் என் அருகினில் நீ அமரும்போது ஒருயுகம்
உனை தினம் நான் புகழ்கையில் எனக்குள் தோன்றும் புதுயுகம் (2)
முள்ளில் பூக்கும் ரோஜா என்னைப் அள்ளிப் பறிப்பதேன்
சொல்ல முடியா அன்பில் என்னைச் சூடி மகிழ்ந்ததேன்
என் இயேசுவே என் அன்புக்கு வானம் எல்லை
என் தெய்வமே உன் அன்புக்கு எல்லை இல்லை
அன்பின் இதழில் இன்ப இதயம் உன் அன்பைப் பாடுதே

Comments

Popular posts from this blog

மனசெல்லாம் மெல்ல மெல்ல மரியே உன் பேரைச் சொல்ல Manasellam mella mella maraiaye un Perai Solla

இறைவனிடம் பரிந்து பேசும் புனித அந்தோணியிரே -Iraivanidam Parinthu Pesum Punitha Anthoniyarey

இறை அன்னையை நோக்கிப் புனித பெர்நார்துவின் மன்றாட்டு