கத்தோலிக்க திருச்சபையின் அருட்பணியாளர்கள் அணியும் திருப்பலி உடைகள் வெவ்வேறு நிறங்கள் மற்றும் விளக்கம்
வெள்ளை (பொன், வெள்ளி): தூய்மை, மாசின்மை, மகிமை மற்றும் வெற்றியின் அடையாளம். இயேசு, மரியன்னை, மறைசாட்சிகளாக இறக்காத புனிதர்களின் விழா நாட்களில் அணியப்படுகிறது.
பச்சை: வளர்ச்சி மற்றும் நம்பிக்கையின் அடையாளம். பொதுக்காலத்தின் திருவழிபாட்டுக் கொண்டாட்டங்களில், வார நாள்களிலும் ஞாயிறன்றும் அணியப்படுகிறது.
சிவப்பு: நெருப்பு மற்றும் இரத்தத்தின் அடையாளம். மறைசாட்சிகளாக இறந்த புனிதர்களின் விழாக்கள், புனித வெள்ளி, குருத்து ஞாயிறு, தூய ஆவியின் வருகைப் பெருவிழாக் கொண்டாட்டங்களில் அணியப்படுகிறது.
ஊதா: தவம் மற்றும் பரிகாரத்தின் அடையாளம். திருவருகைக்காலம், தவக்காலத்தின் திருவழிபாட்டுக் கொண்டாட்டங்களிலும், துக்க நிகழ்வுகளிலும் அணியப்படுகிறது.
Comments