தூய மிக்கேல் அதிதூதர் மன்றாட்டு
வானுலக சேனைத் தளங்களின் அதிபதியே / சதா ஜீவ அரூபிகளில் மகிமைப் பிரதாபம் நிறைந்த சம்மனசானவரே / அவர்களிலும் உத்தமமானவரே / உன்னத கடவுளின் மந்திராலோசனை நிர்ணயப் பெட்டகமே / தேவ கட்டளைப்படியே பரலோக வாசலைத் திறக்கவும் பூட்டவும் அதிகாரம் உள்ள வானவரே / தேவநீதி சிம்மாசனத்தண்டையில் எங்கள் ஆத்துமாக்களைச் சேர்ப்பிக்கும் தூதாதி தூதரே / மரண அவஸ்தப்பைடுகிறவர்களுக்கு உதவி செய்ய தீவிரித்தோடிவரும் உபகாரியே / மரித்தவர்களின் ஆத்துமங்களை அழைத்துக் கொண்டு போய் திவ்ய கர்த்தரின் சந்நிதியில் சேர்ப்பிக்கும் காவலரே / பலவீனனும் நிர்ப்பாக்கி யனுமாகிய அடியேனைக் கிருபாகடாட்சமாய் பார்த்து என் ஜீவிய காலம் முற்றிலும் விஷேசமாய் மரண தருவாயிலும் எனக்கு உமது தயை நேச உதவி புரிந்தருள வேண்டுமென்று மன்றாடுகிறேன். ஆமென்..
Comments