பேய் ஓட்டுகிறதற்கு செபம்
அதிதூதரான புனித மிக்கேலே,
எங்கள் போராட்டத்தில் எங்களைக்காத்தருளும்.
பசாசின் வஞ்சக சூழ்ச்சிகளில் எங்கள் துணையாயிரும்.
தாழ்மையான எங்கள் மன்றாட்டைக்கேட்டு
இறைவன் பசாசைக்கண்டிப்பாராக!
நீரும், விண்ணகப்படையின் தலைவரே,
மக்களைக்கெடுக்க உலகில் சுற்றித்திரியும்
பேயையும் மற்ற கெட்ட அரூபிகளையும்
இறைவலிமையால் நரகத்தில் தள்ளுவீராக.
ஆமென்..
Comments