எங்கள் காவலாம் சூசை தந்தையின் | Engal Kavalam Soosai Thanthaiyin

எங்கள் காவலாம் சூசை தந்தையின்
மங்களங்கள் எங்கும் சொல்லி இங்குப் பாடுவோம் -2
செங்கை அதிலே தங்க புஷ்பம்
தங்கும் கோலை ஏந்திடும் -2

கன்னித் தாயாரின் பர்த்தா நீயல்லோ
உன்னதமார் பேறும் மாட்சி உற்ற பாக்கியனே  -2
சென்னி மகுட முடி புனைந்த
மன்னர் கோத்ர மாதவா  -2

இயேசு நாதரின் செல்வத் தாதை நீ
நேச புத்திர துதியாம் பாடக் கூடி வந்தோமே -2
தேசம் ஒருங்கும் திசைகள் எங்கும்
ஆசைகொண்டு பாடவே  -2

தந்தை என்றுன்னை வந்து பாடினோம்
உந்தன் மைந்தன் சொந்தமென்று எம்மை காத்திட்டாய்  -2
அந்திக்காலை வந்த வேளை
வந்து உதவி செய்திட்டாய்   -2

Comments

Popular posts from this blog

மனசெல்லாம் மெல்ல மெல்ல மரியே உன் பேரைச் சொல்ல Manasellam mella mella maraiaye un Perai Solla

இறைவனிடம் பரிந்து பேசும் புனித அந்தோணியிரே -Iraivanidam Parinthu Pesum Punitha Anthoniyarey

வெற்றி தரும் ஜெபமாலை அன்னை கற்று தந்த ஜெபமாலை பாடல் வரிகள் Vetri Tharum Jebamalai Lyrics