மறையோர் புகழும் மாவளனே மாமலர் மகிமையில் கொண்டவரே | Maraiyor Pugalum Mavazlaney Mamalar Mahimaiyil Kondavarey
மறையோர் புகழும் மாவளனே
மாமலர் மகிமையில் கொண்டவரே
தேவமகன் திருத்தந்தையென்றே
தேனுலகார் மரித்துணையென்றே
மாதவம் செய்தாய் மகத்துவம் கொண்டாய்
மானில வாழ்வினில் மேன்மைக் கொண்டாய்
திருச்சபைக்கே பெரும் தந்தையரே
திருஇல்லம் காத்திடும் எந்தையரே
திருமறை வழுவா நீதியின் கருவாய்
திகழ்ந்திடும் எங்கள் காவலரே
Comments