செம்மலர் கரம் தன்னிலே வண்ணமாய் மலர் தாங்கும்
செம்மலர் கரம் தன்னிலே
வண்ணமாய் மலர் தாங்கும்
தந்தையே அருள் வளனே
போற்றுவோம் உமை நிதமே
உன் கரம் இறைமைந்தன்
அன்புடன் அமர்ந்திருந்தார்
உன் துணை வேண்டுமையா
மன்னனை ஏந்துதற்கு
மரியன்னை தூய்மை நெறி
உம் நெறி பயனன்றோ
புண்ணிய நெறிப் பேண
உன் துணை வேண்டுமையா
நீதியின் பாதையிலே
நட்புடன் செல்வதற்கு
அன்பர்க்குன் துணை வேண்டும்
தந்தையே அருள்வளனே
Comments