எம்மை காத்திடும் சூசை தந்தையே நன்றி பாடியே வாழ்த்துகின்றோம்| Yemmai Kaathidum Soosai Thanthaiaye Nantri Paadiaye Vazlthukintrom
எம்மை காத்திடும் சூசை தந்தையே
நன்றி பாடியே வாழ்த்துகின்றோம்
வளர்ந்து ஏறும் எம் திருச்சபையும்
உந்தன் பாதுகாவலினால்
தொழிலாளர்களின் பாதுகாவலரே சூசை தந்தையே
எங்கள் குடும்பங்களின் பாதுகாவலரே சூசை தந்தையே
உந்தன் பாதுகாவலில் இறைமகன் இயேசுவும்
ஞானத்தில் வளர்ந்தாரே
உம் துணை என்றும் எம்மை தொடர்ந்து வந்தால்
இறைவாழ்வை காண்போமே
கன்னி மேரியின் தூய்மை காத்தவரே சூசை தந்தையே
இறை தந்தையின் திட்டம் ஏற்றவரே சூசை தந்தையே
உழைப்பின் மேன்மை என்னில் உணர்த்திய தந்தையே
உழைப்பால் உயர்வோமே
உம் துணை என்றும் எம்மை தொடர்ந்து வந்தால்
இறைவாழ்வை காண்போமே.
Comments