பாவாலும் மனப்பூவாலும் சூசை தாதாவை ஸ்துதிப்போம்| Paavaalum Manaipoovalum Soosai Thathavai Thuthiipoovom
பாவாலும் மனப்பூவாலும்
சூசை தாதாவை ஸ்துதிப்போம்
பாதார விந்தம் தாள் பணிந்தே அவர்
சீரோங்கிய பேராதரவை பெறுவோம்
பூவாலும் புண்ணிய பூமான்யாரிலும்
மேலான வரம் பூண்டவரை
வேதாகமே நீதிமானென மிகவே
மதிக்கும் மாதவரை
வாசத் தண்மலர் சேர்க்கையின் தண்டமே
வன்மையாகவே பூத்திலங்க
மாசில்லாத மாமரியின் மணவாளனாக
தகை பூண்டவரை
Comments