என் ஜீவன் பாடுது உன் வரவை நாடுது, Yen Jeevan Paaduthu Unn Varavai Naaduthu
என் ஜீவன் பாடுது உன் வரவை நாடுது
அன்பே அருட்செல்வமே
1. காலம் கடந்தாலும் கோலம் அழிந்தாலும்
உன் வாக்கு மாறாது இறைவா
புதுமை பிறந்தது பாவம் அழிந்தது
புனிதம் சேர்ந்திட வா
2. இராகம் ஓய்ந்தாலும் தாளம் மாய்ந்தாலும்
என் பாடல் மாறாது இறைவா
நாளும் மலர்ந்தது தீபம் எரிந்தது
வாழ்வை வளமாக்க வா
Comments