தெய்வீக இராகம் தேன் சிந்தும் இராகம், Deiveega Raagam Thean Sindum Raagam
தெய்வீக இராகம் தேன் சிந்தும் இராகம்
தேவா உன் நினைவாக உருவான இராகம்
என் பாடல்தானே உன் கோவில் நாளும்
அரங்கேறும் வேளை ஆனந்தமே
உயிரே வருக உறவைத் தருக
உயிரே உனக்காக உருவான பாடல்
உறவே உனக்காக நான் பாடும் பாடல்
1. உன் நாமம் சொல்லாத நாவில்லையே
எந்நாளும் நினைக்காத நெஞ்சில்லையே
உன் நாமம் தானே நெஞ்சாரப் பாட
சுகமான இராகம் நான் பாடும் பாடல்
2. உன்னாட்சி உயராத இடமில்லையே
உன்னாட்சி மலராத மனமில்லையே
உன் அன்பைத் தானே நாள்தோறும் பாட
மேலான இராகம் நான் பாடும் பாடல்
Comments