தெய்வம் உன்னைத் தேடி நெஞ்சில் இராகம் கோடி| Deivam Unnai Thedi Nenjil Raagam Koodii

தெய்வம் உன்னைத் தேடி நெஞ்சில் இராகம் கோடி
நீயே என் வாழ்வின் தெய்வம் நீயின்றி வேறேது சொந்தம்
தங்கும் எந்தன் உள்ளம் பொங்கும் அன்பின் வெள்ளம்

1. வானில் உலவும் நிலவும் இங்கு தேய்ந்து போகலாம்
தேனில் கலந்த மலரும் இங்கு காய்ந்து வீழலாம்
உயிரில் கலந்த உணவும் இங்கு உடைந்து போகலாம்
விழியில் விழுந்த நினைவும் இங்கு வழிகள் மாறலாம்
காலம் தேயலாம் உன் கருணை மாறுமோ
வாசம் போகலாம் உன் பாசம் தீருமோ இயேசுவே

2. சாய்ந்து கொள்ளத் தோள்கள் தினம் தந்த தெய்வமே
சோர்ந்து போகும் கால்கள் பலம் தந்த செல்வமே
முள்ளில் விழுந்து தொழுதேன் நீ உறவில் தேடினாய்
அள்ளி அன்னையாய் எடுத்தாய் உன் சிறகில் மூடினாய்
நதிகள் காயலாம் உன் நட்பு காயுமோ
நண்பர் பிரியலாம் உன் அன்பு மாறுமோ இயேசுவே

Comments

Popular posts from this blog

மனசெல்லாம் மெல்ல மெல்ல மரியே உன் பேரைச் சொல்ல Manasellam mella mella maraiaye un Perai Solla

இறைவனிடம் பரிந்து பேசும் புனித அந்தோணியிரே -Iraivanidam Parinthu Pesum Punitha Anthoniyarey

இறை அன்னையை நோக்கிப் புனித பெர்நார்துவின் மன்றாட்டு