Posts

Showing posts from August, 2023

கடவுளிடம் நாம் செய்யும் ஜெபம் சில வேளைகளில் கேட்கப்படுவதில்லையே ஏன்?

Image
கடவுள் நம்மைவிட ஞானம் மிக்கவர். யார் யாருக்கு என்ன தேவை எப்போது தேவை என்பதை அவர் அறிவார். அவர் எப்போழுதும் நமக்கு நன்மையே செய்வார். சிலவேளைகளில் கடவுளின் திட்டம் மனித ஞானத்திற்கு எட்டுவதில்லை. ஆகவே கடவுள் நம் ஜெபத்தை கேட்காதவர் போல் நமக்குத் தெரிகிறது. சிலவேளைகளில் சுயநலத்தோடு ஜெபம் செய்கிறோம். அரசர் சாலமோன் கடவுளிடம் ஞானத்தைக் கேட்டார். பொருட்செல்வமோ அல்லது படையோ, மேலும் அதிகாரத்தையோ அல்லது மேலும் அரசுகளையோ கேட்காததால் கடவுள் அனைத்தையும் அவருக்குக் கொடுத்தார். அல்லது கடவுளின் திட்டத்திற்கு மாறுபட்டு நம் எண்ணங்கள் அமைவதால் நம் ஜெபம் கேட்கப்படுவதில்லை. சில சமயங்களில் நம் ஜெபம் நேரடியாகக் கேட்கப்படாமல் வேறுவிதமாக நிறைவேற்றப்படுகிறது. எல்லாவற்றிற்கும் மேலாக கடவுள் நம் ஜெபங்களைக் கேட்டருள்வார் என்ற ஆழ்ந்த விசுவாசமும் கடவுளின் அன்பும் பராமரிப்பும் நம் வாழ்வில் நிலைபெறும் என்ற உறுதியான நம்பிக்கையும் அனைத்திலும் கடவுளின் சித்தம் நிறைவேற்றப்படவும் தொடர்ந்து ஜெபிக்க வேண்டும்.

எந்த நிலையில் ஜெபம் செய்யவேண்டும்? முழந்தாள்படியிட்டு? கைகூப்பி?

Image
விவிலியத்தில் மக்கள் ஜெபம் செய்யும் போது பல்வேறு நிலைகளில் ஜெபிக்கின்றதைக் காண்கிறோம். நின்றுகொண்டு, கைகளை உயர்தி, கவிழ்ந்து, உட்கார்ந்து, முழந்தாள்படியிட்டு ஜெபித்திருக்கிறார்கள். எந்நிலையிலும் ஜெபிக்கலாம் என்றாலும் முடிகின்ற சூழ்நிலைகளில் முழந்தாள் படியிட்டு கைகூப்பி ஜெபிப்பது கடவுளுக்கு முன் நமது தாழ்ச்சியையும் பணிவையும் எடுத்துக்காட்டும் வண்ணமாக அமைகிறது. எல்லாவற்றிற்கும் மேலாக உண்மையாக, பயபக்தியோடு ஜெபிப்பது உகந்தது.

கடவுள் நம் தேவைகளையும் அறிந்திருப்பவர். பின்னர் நாம் ஏன் நம் தேவைகளுக்ககாக ஜெபிக்க வேண்டும்? ஏன்

Image
நாம் ஜெபம் செய்யும் போது தாழ்ச்சியான உள்ளத்தையும் கடவுள் முன் நம்முடைய இயலாமையையும் வெளிப்படுத்துகிறோம். இவ்வாறு செய்வது கொடுத்துக்கொண்டே இருக்கின்ற கடவுளின் கொடைகளை நாம் பெறுவதற்கு நம்மைத் தகுதியாக்கிக் கொள்ளும் கருவியாக ஜெபம் அமைகின்றது. ஆகவே நாம் தொடாந்து ஜெபம் செய்ய வேண்டும்.

கடவுளாகிய இயேசு ஏன் ஜெபம் செய்தார்?

Image
இயேசு கடவுளும் மனிதனுமானவர்.  இந்த உலகில் இயேசு முழு மனிதனாக அவதரித்தார். அவர் கடவுளாயிருந்தாலும் இந்த உலகின் மனிதரைப் போல் மனிதராக வாழ்ந்தார். அவர் இறை தந்தையைச் சார்ந்து வாழ்ந்தார். எல்லாவற்றிலும் இறை தந்தையின் சித்தத்தையே நிறைவேற்றுகின்றார். இறை தந்தையை முழுமையாக அன்பு செய்து அவரில் வாழ்வதே வாழ்வாகக் கொண்டிருந்தார். ஆகவே அவரோடு உரையாடுவதில் அதிக நேரத்தை கழிக்கின்றதை நாம் நற்செய்திகளில் காண்கின்றோம்.

கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் சிலை வழிபாடு செய்கிறார்களா?

Image
இல்லை. சிலைவழிபாடு என்பது ஒரு குறிப்பிட்ட சிலைக்கு சக்தி இருக்கிறது என்று நம்பி அந்த சிலையை தெய்வமாக வழிபடுவது. கத்தோலிக்க ஆலயங்களில் நிறுபப்பட்டிருக்கும் சுரூபங்கங்கள் (சொரூபம் - மாதிரி) இயேசுவை அல்லது அந்தந்த புனிதர்களை நம் நினைவில் கொண்டுவர, தியானிக்க, அடையாளமாக பயன்படுத்தப்படுகிறது. அந்த சுரூபங்களுக்கு சக்தி இருப்பதாகவோ அல்லது அவைகளையே கடவுளாகவோ நாம் வழிபடுதில்லை. புனிதர்களை நாம் நம் வாழ்வின் முன்மாதிரியாகக் கொள்ளவேண்டும். புனிதர்கள் கடவுள் அல்ல. புனிதர்களுக்கு, அன்னை கன்னிமரியாள் உட்பட அனைவருக்கும் நாம் வணக்கம் மட்டுமே செலுத்துகிறோம். புனிதர்கள் இந்த உலகில் வாழ்ந்தபோது இறைவனுக்கு ஏற்புடைய வாழ்கை வாழ்ந்து மரித்தவர்கள்(உம் - அன்னை தெரசா). புனிதர்கள் இறைவனோடு விண்ணகத்தில் இருப்பதால் புனிதர்களிடம் நாம் நமக்காக இறைவனிடம் பரிந்துபேச அழைப்பு விடுவிக்கின்றோம்.

யாரிடம் ஜெபம் செய்ய வேண்டும்? கடவுளிடமா? இயேசுவிடமா? தூய ஆவியிடமா? புனிதர்களிடமா?

Image
நாம் கடவுளிடமோ அல்லது யேசுவிடமோ அல்லது தூய ஆவியிடமோ ஜெபம் செய்யலாம்.இந்த மூவரிடமும் எழுப்பப்படும் ஜெபங்கள் விவிலியத்தில் அனேக இடங்களில் காணப்படுகின்றன. கடவுள் ஒருவர்தான். இயேசுவிடம் ஜெபம் செய்யும் போது இறைத் தந்தையிடமும் நாம் ஜெபம் செய்கிறோம். நாம் ஜெபம் செய்யும் வார்த்தைகளையும் கடந்து கடவுள் நம் உள்ளத்தையும் எண்ணங்களையும் அறியக்கூடியவர். புனிதர்கள் கடவுள் அல்ல. அவர்கள் கடவுளின் விருப்பத்தின்படி இவ்வுலகில் வாழ்ந்த மனிதர்கள். தங்களின் தூய வாழ்வால் விண்ணகத்தை சுதந்தரித்துக் கொண்டவர்கள். அவர்கள் இறைவனின் அருகில் அமர்ந்திருக்கிறார்கள், நமக்காக கடவுளிடம் பரிந்து பேசுகிறார்கள், நாம் செய்யும் வேண்டுதல்களை கடவுளிடம் மன்றாடி நமக்குப் பெற்றுத் தருகிறார்கள் என்பதே நமது விசுவாசம்.

எதற்காக ஜெபம் செய்ய வேண்டும்?

Image
கடவுளின் அருகில் நாம் நெருங்கிவர ஜெபம் நமக்குத் துணைசெய்கிறது. கடவுளிடம் நாம் பெற்ற நன்மைகளுக்கு நன்றிசொல்லும் போதும், அவர் புகழ் பாடும் போதும், நமது பாவங்களுக்காக மனம் வருந்தும் போதும், நமது பலகீனத்தில் அவரது உதவியை நாடும் போதும், அவர் சித்தத்தை நிறைவேற்றும் போதும், கடவுள் நம்மோடு பேசுகிறார். கடவுள் நமது சிந்தனைகளையும் எண்ணங்களையும் மாற்றி நாம் என்ன செய்ய வேண்டும் என்று அவர் விரும்புகிறாரோ அதைச் செய்யத் தூண்டுகிறார். நாம் ஜெபம் செய்வதன் மூலம் கடவுளின் சித்தத்தை நிறைவேற்ற அதிக வாய்ப்பை நமக்குக் கொடுக்கின்றார். இதன் மூலம் நாம் கடவுளில் இணைந்து வாழும் பேற்றைப் பெறுகிறோம். முத்திப்பேறு பெற்ற அன்னைத் தெராசாவும் மற்ற புனிதர்களும் இப் பேற்றைப் பெற்றவர்களே.

ஜெபம் என்பது என்ன?

Image
கடவுளோடு உரையாடுவது ஜெபம். ஒரு நல்ல நண்பர் நமக்கு இருந்தால் நம் எல்லா விஷயங்களையும் மனம் விட்டு பகிர்ந்து கொள்வது நட்புக்கான இலக்கணம். கடவுளிடம் நாம் நம் வாழ்க்கையை பற்றி பேசுவதே ஜெபம். நாம் கடவுளிடம் நமது இதயத்தை திறந்து பேசுவதும், நம்மோடு பேசும் கடவுளின் வார்த்தைக்கு திறந்த மனத்துடன் செவிமடுப்பதுமே ஜெபம்.

திருச்சபையின் மேன்மைக்காக பிதாவாகிய சர்வேசுரனை நோக்கி ஜெபம்

Image
நித்திய பிதாவே!  தேவரீர் ஆதியிலேதானே உமக்குச் சொந்தமாய் ஏற்றுக் கொண்ட திருச்சபையை நினைத்தருளும் சுவாமி.  உம்முடைய ஏக சுதனாகிய சேசுகிறீஸ்துநாதர் தமது திரு இரத்தமெல்லாம் சிந்திச்  சுதந்தரித்துக் கொண்ட பரிசுத்த திருப்பத்தினி அதுதான் என்று எண்ணுவீராக.  அது தன்னுடைய திவ்விய பத்தாவுக்கும், தன்னை மீட்ட விலைமதியாத கிரயத்துக்கும் பாத்திரமானதாய் விளங்கத்தக்கதாக, தேவரீர் அதை மேன்மைப்படுத்தி, அர்ச்சியசிஷ்டதன சோதிக்கதிரால் பிரகாசிக்கச் செய்து, மிகுதியான தேவ இஷ்டப்பிரசாதங்களால் பூரிப்பித்தருள வேண்டுமென்று தேவரீரை ஆசைப் பெருக்கத்துடனே மன்றாடுகிறோம். அதன் பிள்ளைகளான சகலரும் பற்றுதலுள்ள விசுவாசத்துடனே தேவரீரை அறிந்து அனுசரித்து, உறுதியான நம்பிக்கையுடனே தொழுது மன்றாடி, உத்தம சிநேகத்துடனே நேசித்துச் சேவிக்கச் செய்தருளும் சுவாமி.   ஆமென். 

காணிக்கை ஜெபம்

Image
இயேசுவின் திரு இருதயமே! நாங்கள் கட்டிக்கொள்ளும் துரோகங்களுக்குப் பரிகாரமாகவும் தேவரீர் திருப்பீடத்தில் ஓயாமல் உம்மைத்தானே பலியாக ஒப்புக்கொடுக்கும் சகல கருத்துக்களுக்காகவும், அடியேல் இன்று செய்யும் ஜெபங்களையும், கிரியைகளையும், படுந்துன்ப வருத்தங்களையும், தூய கன்னிமரியாயின் மாசில்லாத திரு இருதயத்தின் வழியாக உமக்கு ஒப்புக்கோடுக்கிறேன் சுவாமி. இந்த மாதத்திற்கும் இந்த நாளுக்கும் சபையாருக்கும் குறிக்கப்பட்ட சகல கருத்துக்களுக்காகவும் விசேஷமாய் அவைகளை ஒப்புக்கொடுக்கிறேன் சுவாமி -ஆமென்.

திருச்சிலுவை அடையாள செபம்

Image
அர்ச்சியசிஷ்ட சிலுவை அடையாளத்தினாலே எங்கள் சத்துருக்களிடமிருந்து எங்களை இரட்சித்தருளும். எங்கள் சர்வேசுரா, பிதா, சுதன் பரிசுத்த ஆவியின் பெயராலே. -ஆமென்.

இரத்த கோட்டைக்குள்ளே நான் நுழைந்து விட்டேன்இனி எதுவும் அணுகாது| Raththa Kottaikullae NaanbNuzhaindhu Vittaen Yini Yedhuvum Annugaadhu

Image
இரத்த கோட்டைக்குள்ளே நான் நுழைந்து விட்டேன் இனி எதுவும் அணுகாது எந்தத் தீங்கும் தீண்டாது 1. நேசரின் இரத்தம் என் மேலே நெருங்காது சாத்தான் பாசமாய் சிலுவையில் பலியானார் பாவத்தை வென்று விட்டார் 2. இம்மட்டும் உதவின எபினேசரே இனியும் காத்திடுவார் உலகிலே இருக்கும் அவனை விட என் தேவன் பெரியவரே 3. தேவனே ஓளியும் மீட்புமானார் யாருக்கு அஞ்சிடுவேன் அவரே என் வாழ்வின் பெலனானார் யாருக்கு பயப்படுவேன் 4. தாய் தன் பிள்ளையை மறந்தாலும் மறவாத என் நேசரே ஆயனைப் போல நடத்துகிறீர் அபிஷேகம் செய்கின்றீர் 5. மலைகள் குன்றுகள் விலகினாலும் மாறாது உம் கிருபை அனாதி சிநேகத்தால் இழுத்துக் கொண்டீர் அணைத்து சேர்த்துக் கொண்டீர்

இயேசுவாலே பிடிக்கப்பட்டவன் அவர் இரத்தத்தாலே கழுவப்பட்டவன்| Yesuvale Pidikkappattavan AvarIraththathaalae Kaluvappattavan

Image
இயேசுவாலே பிடிக்கப்பட்டவன் – அவர் இரத்தத்தாலே கழுவப்பட்டவன் எனக்கென்று எதுவுமில்ல இப்பூமி சொந்தமில்ல எல்லாமே இயேசு என் இயேசு எல்லாம் இயேசு இயேசு இயேசு – 2 1. பரலோகம் தாய் வீடு அதைத் தேடி நீ ஓடு ஒருவரும் அழிந்து போகாமலே தாயகம் வரவேணும் தப்பாமல் 2. அந்தகார இருளினின்று ஆச்சரிய ஒளிக்கழைத்தார் அழைத்தவர் புண்ணியங்கள் அறிவித்திட அடிமையை தெரிந்தெடுத்தார் 3. லாபமான அனைத்தையுமே நஷ்டமென்று கருதுகின்றேன் இயேசுவை அறிகின்ற தாகத்தினால் எல்லாமே இழந்து விட்டேன் 4. பின்னானவை மறந்தேன் முன்னானவை நாடினேன் என் நேசர் தருகின்ற பரிசுக்காக இலக்கை நோக்கி தொடருகின்றேன் 5. பாடுகள் அனுபவிப்பேன் பரலோக தேவனுக்காய் கிறிஸ்துவின் மகிமை வெளிப்படும் நாளில் களிகூர்ந்து மகிடிநந்திருப்பேன்

பூமியின் குடிகளே வாருங்கள் கர்த்தரை கெம்பீரமாய் பாடுங்கள்|Bhoomiyin Kutikalae Vaarungal Karththarai Kempeeramaay Paadungal

Image
பூமியின் குடிகளே வாருங்கள் கர்த்தரை கெம்பீரமாய் பாடுங்கள் 1. மகிழ்வுடனே கர்த்தருக்கு ஆராதனை செய்யுங்கள் ஆனந்த சப்தத்தோடே திருமுன் வாருங்கள் – அவர் 2. கர்த்தரே நம் தேவனென்று என்றும் அறிந்திடுங்கள் அவரே நம்மை உண்டாக்கினார் அவரின் ஆடுகள் நாம் 3. துதியோடும் புகழ்ச்சியோடும் வாசலில் நுழையுங்கள் அவர் நாமம் துதித்திடுங்கள் ஸ்தோத்திர பலியிடுங்கள் 4. நம் கர்த்தரோ நல்லவரே கிருபை உள்ளவரே அவர் வசனம் தலைமுறைக்கும் தலைமுறைக்கும் உள்ளது

நாதா உம் திருக்கரத்தில் இசைக்கருவி நான் நாள்தோறும் பயன்படுத்தும| Naathaa Um Thirukkaraththil Isaikkaruvi Naan Naalthorum Payanpaduththum

Image
நாதா உம் திருக்கரத்தில் இசைக்கருவி நான் நாள்தோறும் பயன்படுத்தும் உந்தன் சித்தம் போல் 1. ஐயா உம் பாதம் என் தஞ்சமே அனுதினம் ஓடி வந்தேன் ஆனந்தமே ஆனந்தமே 2. எங்கே நான் போக உம் சித்தமோ அங்கே நான் சென்றிடுவேன் உம் நாமத்தில் ஜெயம் எடுப்பேன் 3. புதுப்பாடல் தந்து ஆசீர்வதியும் பரவசமாகிடுவேன் எக்காளம் நான் ஊதிடுவேன் 4. நிந்தைகள் நெருக்கம் துன்பங்களில் துதி பாடி மகிழ்ந்திருப்பேன் கிருபை ஒன்றே போதுமைய்யா 5. ஊரெல்லாம் செல்வேன் பறைசாற்றுவேன் உம் நாமம் உயர்த்திடுவேன் சாத்தான் கோட்டை தகர்த்திடுவேன்

அழகோவியமே எங்கள் அன்னை மரியே | Azlagoviyamey yenkal annai mariaye Lyrics

Image
அழகோவியமே எங்கள் அன்னை மரியே உயிரோவியமே எங்கள் உள்ளங் கவர்ந்தவளே உன் பார்வை சொல்லும் கருணையும் பாத மலரின் அருமையும் அழகே அழகே எங்கள் அம்மா நீ அழகே 1. கோடான கோடி மக்கள் குறைகளைத் தீர்ப்பவளே கொள்ளை அழகோடு எங்கள் ஆலயம் அமர்ந்தவளே அம்மா நீ தேரினிலே பவனி வரும் போதினிலே ஒய்யாரமாக மனம் ஊர்வலமும் போகிறதே யாரும் இல்லா ஏழை எங்கள் தஞ்சம் நீயே தாயே உம்மை நம்பி வந்தோம் இங்கு உள்ளதெல்லாம் தந்தோம் உந்தன் முகத்தைப் பார்க்கும்போது உள்ளம் மகிழுதே உந்தன் நாமத்தைச் சொல்லும் போது நெஞ்சம் இனிக்குதே 2. ஆதாரம் நீயே என்று அண்டி வருவோர்க்கு எல்லாம் ஆதரவு தருபவளே அன்னை தாய்மரியே அம்மா உன் காட்சிகளெல்லாம் ஏழைகளின் பாக்கியமே எந்நாளும் இவர்களுக்கு உதவிடும் திருக்கரமே கண்ணின் மணியைப் போல என்னைக் காத்திடும் தெய்வத் தாயே மண்ணின் மைந்தர்கள் நாங்கள் உந்தன் பாதம் பற்றியே வாழ்வோம் இன்னும் ஒருமுறை என் தாயே இனி இந்த உலகினில் பிறந்தால் ஏழை எளியவர் முன்னாடி இங்கு புது உலகம் படைப்பாய்

தேவனுக்கே மகிமை தெய்வத்திற்கே மகிமை தேடி வந்து மீட்டவரே | Devanukkae Makimai Devaththirkae Makimai Thaeti Vanthu Meettavarae

Image
தேவனுக்கே மகிமை தெய்வத்திற்கே மகிமை தேடி வந்து மீட்டவரே தினம் உமக்கே மகிமை ஐயா வாழ்க வாழ்க உம் நாமம் வாழ்க உன்னதத்தில் தேவனுக்கே மகிமை உண்டாகட்டும் பூமியிலே சமாதானமும் பிரியமும் உன்டாகட்டும் – இந்தப் செவிகளை நீர் திறந்து விட்டீர் செய்வோம் உம் சித்தம் புவிதனிலே உம் விருப்பம் பூரணமாகட்டுமே – இந்தப் எளிமையான எங்களையே என்றும் நினைப்பவரே ஒளிமயமே துணையாளரே உள்ளத்தின் ஆறுதலே – எங்கள் தேடுகிற அனைவருமே மகிழ்ந்து களிகூரட்டும் பாடுகிற யாவருமே பரிசுத்தம் ஆகட்டுமே – இன்று குறை நீக்கும் வல்லவரே கோடி ஸ்தோத்திரமே கறை போக்கும் கர்த்தாவே கல்வாரி நாயகனே – பாவக்

திராட்சை செடியே இயேசு ராஜா உம்மோடு இணைந்திருக்கும் கிளை நாங்கள் | Thiraatcha Setiyae Yesu Raajaa Ummodu Innainthirukkum Kilai Naangal Lyrics

Image
திராட்சை செடியே இயேசு ராஜா உம்மோடு இணைந்திருக்கும் கிளை நாங்கள் உமக்காய் படருகின்ற கொடி நாங்கள் திராட்சை செடியே இயேசு ராஜா பசும்புல் மேய்ச்சலிலே நடத்திச் செல்பவரே பரிசுத்தமானவரே – ஐயா உள்ளமே மகிழுதையா உம்மோடு இருப்பதனால் கள்ளம் நீங்குதையா – எனக்கு குயவன் கையில் உள்ள களிமண்நாங்கள் ஏந்தி வனைந்திடுமே ஐயா சித்தம் போல் உருவாக்கும் சுத்தமாய் உருமாற்றம் நித்தம் உம் கரத்தில் – நாங்கள் வார்த்தையில் நிலைத்திருந்து தினமும் கனி கொடுக்கும் சீடர்கள் நாங்கள் வேதத்தை ஏந்துகிறோம் வாசித்து மகிழுகின்றோம் தியானம் செய்கின்றோம் – நாங்கள்

கர்த்தர் நாமம் என் புகலிடமே கருத்தோடு துதித்திடுவேன் | Karththar Naamam En Pukalidamae Karuththodu Thuthiththiduvaen

Image
கர்த்தர் நாமம் என் புகலிடமே கருத்தோடு துதித்திடுவேன் யேகோவாயீரே எல்லாமே பார்த்துக் கொள்வீர் கலங்கலப்பா நாங்க கலங்கலப்பா யேகோவா நிசியே எந்நாளும் வெற்றி தருவீர் ஸ்தோத்திரமே அப்பா ஸ்தோத்திரமே யேகோவா ரஃப்பா சுகம்தரும் தெய்வமே கலங்கலப்பா நாங்க கலங்கலப்பா யேகோவா ரூவா எங்கள் நல்லமேய்ப்பரே ஸ்தோத்திரமே அப்பா ஸ்தோத்திரமே யேகோவா ஷம்மா கூடவே இருக்கிறீர் கலங்கலப்பா நாங்க கலங்கலப்பா யேகோவா ஷாலோம் சமாதானம் தருகின்றீர் ஸ்தோத்திரமே அப்பா ஸ்தோத்திரமே

என்னை நிரப்பும் இயேசு தெய்வமே இன்று நிரப்பும் உந்தன் ஆவியால் | Ennai Nirappum Yesu Theyvamae Intru Nirappum Unthan Aaviyaal

Image
என்னை நிரப்பும் இயேசு தெய்வமே இன்று நிரப்பும் உந்தன் ஆவியால் பேய்களை ஓட்டி நோய்களைப் போக்கும் பெலனே வாருமே பெலவீனம் நீக்கி பலவானாய் மாற்றும் வல்லமையே வாருமே தேற்றரவாளர் பரிசுத்த ஆவி தேற்றிட வாருமே ஆற்றலைக் கொடுத்து அன்பால் நிரப்பும் ஆவியே வாருமே வரங்களைக் கொடுத்து வாழ்வை அளிக்கும் வள்ளலே வாருமே கனிகளால் நிரப்பி காயங்கள் ஆற்றும் கருணையே வாருமே கோபங்கள் போக்கி சுபாவங்கள் மாற்றும் சாந்தமே வாருமே பாவங்க்ள கழுவிப் பரிசுத்தமாக்கம் பரமனே வாருமே

எப்படி நான் பாடுவேன்என்ன சொல்லி நான் துதிப்பேன் |Eppadi Naan Paaduvaen Enna Solli Naan Thudhippaen

Image
எப்படி நான் பாடுவேன் என்ன சொல்லி நான் துதிப்பேன் – உம்மை இரத்தம் சிந்தி மீட்டவரே இரக்கம் நிறைந்தவரே அபிஷேகித்து அணைப்பவரே ஆறுதல் நாயகனே உந்தன் பாதம் அமர்ந்திருந்து ஓயாமல் முத்தம் செய்கிறேன் என்னை விட்டு எடுபடாத நல்ல பங்கு நீர்தானையா வருகையில் எடுத்துக் கொள்வீர் கூடவே வைத்துக் கொள்வீர்  உளையான சேற்றினின்று தூக்கி எடுத்தவரே உந்தன் நாமம் உயர்த்திடுவேன் உம் விருப்பம் செய்திடுவேன்

உன்னையே வெறுத்துவிட்டால் ஊழியம் செய்திடலாம்| Unnaiyae Veruththuvittal Ooliyam Seythidalaam Suyaththai Saakatiththaal

Image
உன்னையே வெறுத்துவிட்டால் ஊழியம் செய்திடலாம் சுயத்தை சாகடித்தால் சுகமாய் வாழ்ந்திடலாம் சிலுவை சுமப்பதனால் சிந்தையே மாறிவிடும் நீடிய பொறுமை வரும் நிரந்தர அமைதிவரும் பெயர் புகழ் எல்லாமே இயேசுவின் நாமத்திற்கே கிறிஸ்து வளரட்டுமே நமது மறையட்டுமே நாளைய தினம் குறித்து கலங்காதே மகனே இதுவரை காத்த தெய்வம் இனியும் நடத்திடுவார் சேர்த்து வைக்காதே திருடன் பறித்திடுவான் கொடுத்திடு கர்த்தருக்கே குறைவின்றி காத்திடுவார் தன்னலம் நோக்காமல் பிறர் நலம் தேடிடுவோம் இயேசுவில் இருந்த சிந்தை என்றுமே இருக்கட்டுமே

உமக்கு மகிமை தருகிறோம் உம்மில் தான் மகிழ்ச்சி அடைகிறோம்| Umaku Mahimai Tharugirom Ummil Thaan Mahilchi Adaigirom

Image
உமக்கு மகிமை தருகிறோம் உம்மில்தான் மகிழ்ச்சி அடைகிறோம் அல்லேலூயா அல்லேலூயா தாழ்மையில் அடிமையை நோக்கிப் பார்த்தீரே உயர்த்தி மகிழ்ந்தீரே ஒரு கோடி ஸ்தோத்திரமே வல்லவரே மகிமையாய் அதிசயம் செய்தீர் உந்தன் திருநாமம் பரிசுத்தமானதே வலியோரை அகற்றினீர் தாழ்ந்தோரை உயர்த்தினீர் பசித்தோரை நன்மைகளால் திருப்தியாக்கினீர் கன்மலையின் வெடிப்பில் வைத்து கரத்தால் மூடுகிறீர் என்ன சொல்லிப் பாடுவேன் என் இதய வேந்தனே

இயேசுவின் கரங்களைப் பற்றிப் கொண்டேன் நான்| Yesuvukkaay Avamaanam Aettuk Kontaen Inivarum Palan Mael Nokkamaanaen Lyrics

Image
இயேசுவின் கரங்களைப் பற்றிப் கொண்டேன் நான் இயேசுவின் கரங்களை பற்றிக் கொண்டேன் எதற்கும் பயம் இல்லையே இனியும் கவலை எனக்கிலையே அல்லேலூயா அல்லேலூயா இயேசுவுக்காய் அவமானம் ஏற்றுக் கொண்டேன் இனிவரும் பலன் மேல் நோக்கமானேன் அழிந்து போகும் பாராட்டு வேண்டாமே அரவணைக்கும் இயேசு போதும் போதுமே அதிவிரைவில் நீங்கும் இந்த உபத்திரவம் அதிகமான கனமகிமை உண்டாக்கும் காண்கிண்ற எல்லாமே அநித்தியம் காணாதவைகளோ நித்தியம் பகைவர்க்கு அன்பு காட்டிடுவேன் வெறுப்பவர்க்கு நன்மை செய்திடுவேன் சபிப்பவர்க்கு ஆசி கூறிடுவேன் தூற்றுவோருக்காக ஜெபித்திடுவேன் கர்த்தரையே முன் வைத்து ஓடுகிறேன் கடும் புயல் வந்தாலும் அசைவதில்லை எதையும் தாங்குவேன் இயேசுவுக்காய் இனியும் சோர்ந்து போவதே இல்லை ஆட்கொண்ட தேவனை நம்புகிறேன் அவருக்குள் வேர் கொண்டு வளருகிறேன் கோடைக்காலம் வந்தாலும் அச்சமில்லையே வறட்சிக் காலம் வந்தாலும் கவலையில்லையே

வாதை உந்தன் கூடாரத்தை அணுகாது மகனே| Vaathai Unthan Koodaaraththai Anukaathu Makanae Lyrics

Image
வாதை உந்தன் கூடாரத்தை அணுகாது மகனே பொல்லாப்பு நேரிடாது நேரிடாது மகளே உன்னதமான கர்த்தரையே உறைவிடமாக்கிக் கொண்டாய் அடைக்கலமாம் ஆண்டவனை ஆதாயமாக்கிக் கொண்டாய் ஆட்டுக்குட்டி இரத்தத்தினால் சாத்தானை ஜெயித்து விட்டோம் ஆவி உண்டு வசனம் உண்டு அன்றாடம் வெற்றி உண்டு கர்த்தருக்குள் நம் பாடுகள் ஒரு நாளும் வீணாகாது அசையாமல் உறுதியுடன் அதிகமாய் செயல்படுவோம் அழைத்தவரோ உண்மையுள்ளவர் பரிசுத்தமாக்கிடுவார் ஆவி ஆத்துமா சரீரமெல்லாம் குற்றமின்றி காத்திடுவார் நம்முடைய குடியிருப்பு பரலோகத்தில் உண்டு வரப்போகும் இரட்சகரை எதிர்நோக்கி காத்திருப்போம் அற்பமான ஆரம்பத்தை அசட்டை பண்ணாதே தொடங்கினவர் முடித்திடுவார் சொன்னதை செய்திடுவார் ஆற்றல் அல்ல சக்தி அல்ல ஆவியினால் ஆகும் சோர்ந்திடாமல் நன்மை செய்வோம் துணையாளர் முன் செல்கிறார்

பிரியமானவனே உன் ஆத்துமா வாழ்வது போல்| Piriyamaanavane Un Aaththumaa Vaalvathu Pol Lyrics

Image
பிரியமானவனே உன் ஆத்துமா வாழ்வது போல் நீ எல்லாவற்றிலும் வாழ்ந்து சுகமாய் இரு மகனே (மகளே) வாழ்க்கை என்பது போராட்டமே நல்லதொரு போராட்டமே ஆவிதரும் பட்டயத்தை எடுத்துப் போராடி வெற்றி பெறு பிரயாணத்தில் மேடு உண்டு பள்ளங்களும் உண்டு மிதித்திடுவாய் தாண்டிடுவாய் மான் கால்கள் உனக்குண்டு மறவாதே ஓட்டப் பந்தயம் நீ ஓடுகிறாய் ஒழுங்கின்படி ஓடு மகனே (மகளே) நெருங்கி வரும் பாவங்களை உதறித் தள்ளிவிட்டு ஓடு மகனே (மகளே)

நேசரே உம் திரு பாதம் அமர்ந்தேன் நிம்மதி நிம்மதியே| Naesarae Um Thiru Paatham Amarnthaen Nimmathi Nimmathiyae Lyrics

Image
நேசரே உம் திரு பாதம் அமர்ந்தேன் நிம்மதி நிம்மதியே ஆர்வமுடனே பாடித் துதிப்பேன் ஆனந்தம் ஆனந்தமே அடைக்கலமே அதிசயமே ஆராதனை ஆராதனை உம் வல்ல செயல்கள் நினைத்து நினைத்து உள்ளமே பொங்குதய்யா நல்லவரே நன்மை செய்தவரே நன்றி நன்றி ஐயா வல்லவரே நல்லவரே ஆராதனை ஆராதனை பலியான செம்மறி பாவங்களெல்லாம் சுமந்து தீர்த்தவரே பரிசுத்த இரத்தம் எனக்காக அல்லோ பாக்கியம் பாக்கியமே பரிசுத்தரே படைத்தவரே ஆராதனை ஆராதனை எத்தனை இன்னல்கள் என் வாழ்வில் வந்தாலும் உம்மை பிரியேன் ஐயா சித்தமே செய்து சாட்சியாய் வாழ்வேன் நிச்சயம் நிச்சயமே இரட்சகரே இயேசு நாதா ஆராதனை ஆராதனை

தெய்வீகக் கூடாரமே என் தேவனின் சந்நிதியே தேடி ஓடி வந்தோம்| Theyveekak Koodaaramae En Thaevanin SannithiyaeThaeti Oti Vanthom Lyrics

Image
தெய்வீகக் கூடாரமே என் தேவனின் சந்நிதியே தேடி ஓடி வந்தோம் தெவிட்டாத பாக்கியமே மகிமை மகிமை மாட்சிமை மாறா என் நேசருக்கே கல்வாரி திருப்பீடமே கறை போக்கும் திரு இரத்தமே உயிருள்ள பரிசுத்த ஜீவ பலியாக ஓப்புக் கொடுத்தோம் ஐயா ஈசோப்பினால் கழுவும் இன்றே சுத்தமாவோம் உறைவின்றி பனி போல வெண்மையாவோம் உம் திரு வார்த்தையினால் அப்பா உம் சமூகத்தின் அப்பங்கள் நாங்கள் ஐயா எப்போதும் உம் திருப்பாதம் அமர்ந்திட ஏங்கித் தவிக்கின்றோம் உலகத்தின் வெளிச்சம் நாங்கள் உமக்காய் சுடர் விடுவோம் ஆனந்த தைலத்தால் அபிஷேகியும் ஐயா அனல் மூட்டி எரிய விடும் தூபமாய் நறுமணமாய் துதிகளை செலுத்துகிறோம் எந்நாளும் எப்போதும் எல்லா ஜெபத்தோடும் ஆவியில் ஜெபிக்கின்றோம் ஜீவனுள்ள புதிய மார்க்கம் தந்தீர் ஐயா மகா பரிசுத்த கூடாரத்திற்குள்ளே மகிமையில் நுழைந்து விட்டோம்

உந்தன் ஆவி எந்தன் உள்ளம் தங்க வேண்டும்| Undhan Aavi Enthan Ullam Thanga Vaendum lyrics

Image
உந்தன் ஆவி எந்தன் உள்ளம் தங்க வேண்டும் எந்த நாளும் உந்தன் நாமம் பாட வேண்டும் உள்ளம் எல்லாம் அன்பினாலே பொங்கவேண்டும் கள்ளம் நீங்கி காலமெல்லாம் வாழவேண்டும் பாவமான சுபாவம் எல்லாம் நீங்க வேண்டும் தேவ ஆவி தேற்றி என்றும் நடத்த வேண்டும் ஜீவதண்ணீர் நதியாகப் பாய வேண்டும் சிலுவை நிழலில் தேசமெல்லாம் வாழவேண்டும் வரங்கள் கனிகள் எல்லா நாளும் பெருக வேண்டும் வாழ்நாளெல்லாம் பணிசெய்து மடியவேண்டும் ஏதேன் தோட்ட உறவு என்றும் தொடர வேண்டும் இயேசு கிறிஸ்து குரலைக் கேட்டு மகிழ வேண்டும்

இயேசு கிறிஸ்து என் ஜீவன்சாவது ஆதாயமே| Yesu Kiristhu En Jeevan Saavathu Aathaayamae Lyrics

Image
இயேசு கிறிஸ்து என் ஜீவன் சாவது ஆதாயமே வாழ்வது நானல்ல இயேசு என்னில் வாழ்கின்றார் இயேசுவை நான் ஏற்றுக்கொண்டேன் அவருக்குள் நான் வேர்கொண்டேன் அவர்மேல் எழும்பும் கட்டடம் நான் அசைவதில்லை தளர்வதும் இல்லை என்ன வந்தாலும் கலங்கிடாமல் இடுக்கண் நேரம் ஸ்தோத்தரிப்பேன் அறிவைக் கடந்த தெய்வீக அமைதி அடிமை வாழ்வின் கேடயமே எனது ஜீவன் கிறிஸ்துவுடனே தேவனுக்குள்ளே மறைந்தது ஜீவன் கிறிஸ்து வெளிப்படும் நாளில் மகிமையில் நான் வெளிப்படுவேனே கிறிஸ்துவுக்குள்ளே இரத்தத்தினாலே பாவ மன்னிப்பின் மீட்படைந்தேன் அவரை அறியும் அறிவிலே வளர்வேன் அவரின் விருப்பம் செய்தே மகிழ்வேன்

அழிந்து போகின்ற ஆத்துமாக்களை தினமும் தினமும் நினைப்பேன்| Alinthu Pokinta Aaththumaakkalai Thinamum Thinamum Ninaippaen Lyrics

Image
அழிந்து போகின்ற ஆத்துமாக்களை தினமும் தினமும் நினைப்பேன் அலைந்து திரிகின்ற ஆட்டைத் தேடியே ஓடி ஓடி உழைப்பேன் தெய்வமே தாருமே ஆத்தும பாரமே இருளின் ஜாதிகள் பேரொளி காணட்டும் மரித்த மனிதர்மேல் வெளிச்சம் உதிக்கட்டும் திறப்பின் வாசலில் தினமும் நிற்கின்றேன் சுவரை அடைக்க நான் தினமும் ஜெபிக்கின்றேன் எக்காள சப்தம் நான் மௌனம் எனக்கில்லை சாமக்காவலன் சத்தியம் பேசுவேன் கண்ணீர் சிந்தியே விதைகள் தூவினேன் கெம்பீர சப்தமாய் அறுவடை செய்கிறேன் ஊதாரி மைந்தர்கள் உம்மிடம் திரும்பட்டும் விண்ணகம் மகிழட்டும் விருந்து நடக்கட்டும்

புதிய பாடல் பாடி பாடி இயேசு ராஜாவைக் கொண்டாடுவோம், Puthiya Paadal Paati Paati Yesu Raajaavaik Konndaaduvom

Image
புதிய பாடல் பாடி பாடி இயேசு ராஜாவைக் கொண்டாடுவோம் புகழ்ந்து பாடல் பாடி பாடி இயேசு ராஜாவைக் கொண்டாடுவோம் கழுவினார் இரத்தத்தாலே சுகம் தந்தார் காயத்தாலே தேற்றினார் வசனத்தாலே திடன் தந்தார் ஆவியாலே – எனக்கு உறுதியாய் பற்றிக் கொண்டோம் உம்மையே நம்பி உள்ளோம் பூரண சமாதானம் புவிதனில் தருபவரே – தினமும் அதிசயமானவரே ஆலோசனைக் கர்த்தரே வல்லமை உள்ள தேவா வரங்களின் மன்னவனே – எல்லா கூப்பிட்டேன் பதில் வந்தது குறைவெல்லாம் நிறைவானது மகிமையின் ராஜா அவர் மகத்துவமானவரே – இயேசு மாலையில் அழுகை என்றால் காலையில் அக்களிப்பு கோபமோ ஒரு நிமிடம் கிருபையோ நித்தம் நித்தம் – அவர்

மனதுருகும் தெய்வமே இயேசய்யா மனதாரத் துதிப்பேன் ஸ்தோத்தரிப்பேன், Manadhurugum Deivamae Yesaiya Manathaarath Thuthippaen Sthoaththarippaen lyrics

Image
மனதுருகும் தெய்வமே இயேசய்யா மனதாரத் துதிப்பேன் ஸ்தோத்தரிப்பேன் நீர் நல்லவர் சர்வ வல்லவர் உம் இரக்கத்திற்கு முடிவே இல்லை உம் அன்பிற்கு அளவே இல்லை அவை காலைதோறும் புதிதாயிருக்கும் மெய்யாக எங்களது பாடுகளை ஏற்றுக்கொண்டு துக்கங்களை சுமந்து கொண்டீர் ஐயா எங்களுக்கு சமாதானம் உண்டு பண்ணும் தண்டனையோ உம்மேலே விழுந்ததையா ஐயா சாபமான முள்முடியே தலைமேலே சுமந்து கொண்டு சிலுவையிலே வெற்றி சிறந்தீர் ஐயா எங்களது மீறுதலால் காயப்பட்டீர் நொறுக்கப்பட்டீர் தழும்புகளால் சுகாமானோம் உந்தன் தேடிவந்த மனிதர்களின் தேவைகளை அறிந்தவராய் தினம் தினம் அற்புதம் செய்தீர் ஐயா

மகிமை உமக்கன்றோ மாட்சிமை உமக்கன்றோ, Magimai Umakkandro Maatchimai Umakkandro Thuthiyum Pugalum Sthothiramum lyrics

Image
மகிமை உமக்கன்றோ மாட்சிமை உமக்கன்றோ துதியும் புகழும் ஸ்தோத்திரமும் தூயவர் உமக்கன்றோ ஆராதனை ஆராதனை – என் அன்பர் இயேசுவுக்கே விலையேறப் பெற்ற உம் இரத்தத்தால் விடுதலை கொடுத்தீர் இராஜாக்களாக லேவியராக உமக்கென தெரிந்து கொண்டீர் வழிகாட்டும் தீபம் துணையாளரே தேற்றும் தெய்வமே அன்பால் பெலத்தால் அனல்மூட்டும் ஐயா அபிஷேக நாதரே எப்போதும் இருக்கின்ற இனிமேலும் வருகின்ற எங்கள் ராஜாவே உம் நாமம் வாழ்க உம் அரசு வருக உம் சித்தம் நிறைவேறுக உம் வல்ல செயல்கள் மிகவும் பெரிய அதிசயமன்றோ உம் தூய வழிகள் நேர்மையான சத்திய தீபமன்றோ

கர்த்தாவே உமது கூடாரத்தில் தங்கி வாழ்பவன் யார்குடியிருப்பவன், Karththaavae Umathu Koodaaraththil Thangi Vaalpavan YaarKutiyiruppavan Yaar lyrics

Image
கர்த்தாவே உமது கூடாரத்தில் தங்கி வாழ்பவன் யார் குடியிருப்பவன் யார் – 2 உத்தமனாய் தினம் நடந்து நீதியிலே நிலை நிற்பவன் மனதார சத்தியத்தையே தினந்தோறும் பேசுபவனே நாவினால் புறங்கூறாமல் தோழனுக்குத் தீங்கு செய்யாமல் நிந்தையான பேச்சுக்களை பேசாமல் இருப்பவனே கர்த்தருக்குப் பயந்தவரை காலமெல்லாம் கனம் செய்பவன் ஆணையிட்டு நஷ்டம் வந்தாலும் தவறாமல் இருப்பவனே கைகளில் தூய்மை உள்ளவன் இதய நேர்மை உள்ளவன் இரட்சிப்பின் தேவனையே எந்நாளும் தேடுபவனே

கர்த்தரை நோக்கி அமர்ந்திருப்போம் கவலை மறந்து காத்திருப்போம், Karththarai Nokki Amarnthiruppom Kavalai Maranthu Kaaththiruppom lyrics

Image
கர்த்தரை நோக்கி அமர்ந்திருப்போம் கவலை மறந்து காத்திருப்போம் கர்த்தரை நம்பி நன்மை செய்வோம் நல்லதோர் மேய்ச்சலை கண்டடைவோம் அவரில் நாம் மகிழ்ந்திருப்போம் இதய விருப்பம் நிறைவேற்றுவார் நீதிமான் இரட்சிப்பு நிச்சயமே நித்தம் அடைக்கலம் கர்த்தர் தாமே உதவி செய்து காத்திடுவார் உள்ளத்தில் தங்கி நடத்திடுவார்  வழிகள் அனைத்தும் கர்த்தருக்கே ஒப்புவித்து நாம் மகிழ்ந்திருப்போம் கர்த்தரையே சார்ந்திருப்போம் அவரே அனைத்தும் வாய்க்கச் செய்வார் சுயபுத்தியில் சாய்ந்திடாமல் முழு உள்ளத்தோடு நம்பிடுவோம் வழிகளெல்லாம் நினைத்திடுவோம் வாழ்வின் பாதை காட்டிடுவார்

புனித அருளானந்தர் நவநாள் செபம்

Image
செந்தமிழ் நாட்டிலே இயேசுமறையைப் போதிக்க வந்த மகிமை நிறைந்த அப்போஸ்தலரே! சொல்லிலும், செயலிலும் வல்லமை மிகுந்த புனித அருளானந்தரே, எங்களைக் கருணையுடன் நோக்கியருளும். எங்கள் குடும்பங்கள், உற்றார் உறவினர் மீதும், மாந்தர் அனைவர் மீதும் இரங்கியருளும். இறைவனின் ஏவுதலுக்கு இடைவிடாது செவிசாய்த்த உமது வியப்புக்குரிய பிரமாணிக்கத்தையும், கடின பயணங்களை மேற்கொண்டு. வேதனைகள், துன்பங்களைத் தாங்க உம்மைத் தூண்டின தளராத ஊக்கத்தையும் எண்ணி உம்மைப் புகழுகிறோம். உமது இதயத்தில் பற்றியெரிந்த அன்புத் தீ எங்கள் இதயத்திலும் பற்றியெரியச் செய்தருளும். மீட்புப் பணியினை நாங்களும் மனமுவந்து நிறைவேற்ற எங்களைத் தூண்டியருளும் மகிமை நிறைந்த பாதுகாவலரே! மறவ நாட்டின் நல்ல ஆயரே! உம்முடைய உழைப்புகளையும், செப தவங்களையும், வீரத் தியாகத்தையும் முன்னிட்டு இறைவனிடமிருந்து நாங்கள் கேட்கும் மன்றாட்டைப் பெற்றுத் தந்தருளும். ரூனெயளர் ஆமென். (தேவையான மன்றாட்டை மௌனமாகக் கூறவும்)

புனித அருளானந்தருக்குச் செபம்

Image
கிறிஸ்துவின் அன்பினால் நிறைந்த புனித அருளானந்தரே, அரண்மனை வாழ்வையும், உலக இன்பங்களையும், உற்றார் உறவினரையும், சொந்த நாட்டையும் துறந்து, தொலை நாடாகிய இந்தியாவுக்கு வந்து, மறவ நாட்டிலே கிறிஸ்துவின் அரசை நிறுவ, எண்ணில்லாத் துன்ப துயரங்களையும் இன்னல் இடைஞ்சல்களையும் பொருட்படுத்தாது, பத்தொன்பது ஆண்டுகளாய் உழைத்து, கணக்கற்ற ஆன்மாக்களை திருமந்தையில் சேர்த்த ஒப்பற்ற வீரரே! உமது குருதியால் புனிதமாக்கப்பட்ட தமிழ்நாட்டின் மக்களாகிய எங்கள் மீது உம் கருணைக் கண்களைத் திருப்பியருளும். புனித சவேரியாரைப் பின்பற்றி மெய்மறையைப் பரப்ப வந்த உத்தம போதகரே! மறவ நாட்டு மாணிக்கமே! எல்லார்க்கும் எல்லாமாக விளங்கி, எங்கள் முன்னோர்க்கு வாழ்வுதரும் நற்செய்தியை அறிவித்தீர். சோர்வின்றி நல்லன செய்யவும், அஞ்சா நெஞ்சத்தோடு ஆபத்துக்களை எதிர்கொள்ளவும், சோதனைகளையும், சாவையும் உறுதியுடன் ஏற்றுக் கொண்டீர். ஓ வீரம் மிகுந்த தியாகியே! இயேசு சபையின் ஒப்பற்ற மறைச்சாட்சியே! உம் அடிச்சுவடுகளைப் பின்பற்றி இந்த நாட்டில் உழைத்து வரும் குருக்களுக்கும் திருத்தொண்டர், துறவியர், வேதியர் அனைவருக்கும் உமக்கிருந்த இறையன்பும், ஆன்ம...

இயேசுவை நோக்கி இரக்கத்திற்கான ஜெபம்

Image
ஆண்வராகிய இயேசுவே, எங்கள் மேல் இரக்கம் வையும். எங்கள் மேல் இரக்கமாயிரும். எங்களைத் தீர்ப்பிடாதேயும். எங்கள் மூதாதையர், எங்கள் சகோதர, சகோதரிகள் வழி வந்த எல்லாக் குற்றங் குறைகளையும், பாவங்களையும், மன்னித்தருளும். எங்களுக்கு வரப்போகும் தண்டனையை விலக்கி விடும். எங்களை உமது சொந்தப் பிள்ளைகளாக ஏற்றுக் கொண்டு உமது ஆவியால் எங்களை வழி நடத்தியருளும்.

ஆபத்தான வேளையில் அன்னையை நோக்கி ஜெபம்

Image
நிரந்தர சகாயத்தின் நேச ஆண்டவளே! மாசணுகாத்தாயே உம்மை நாங்கள் இவ்வீட்டின் ஆண்டவளாகவும், எஜமாட்டியாகவும் தெரிந்து கொள்கிறோம். கொள்ளை நோய், இடி, மின்னல் புயல் காற்றிலிருந்தும் விமானத்தாக்குதல் விரோதிகளின் பகை குரோதத்திலிருந்தும் இவ்வீட்டைப் பாதுகாத்தருளும், மிகவும் அன்புள்ள தாயே! இங்கு வசிக்கிறவர்களை ஆதரியும். அவர்கள் இங்கிருந்து வெளியில் போகும் போதும், உள்ளே வரும் போதும் அவர்களுக்குத் துணையாயிருந்து சடுதி மரணத்தினின்றும் அவர்களை இரட்சியும், எங்களை சகல பாவங்களிலும் ஆபத்துக்களிலும் நின்றும் காப்பாற்றும். இவ்வுலகில் நாங்கள் சர்வேஸ்வரனுக்கு பிரமாணிக்கமாய் ஊழியம் செய்து உம்மோடு கூட நித்தியத்திற்கும் அவரின் இன்பமான தேவ தரிசனத்தை அடைந்து சுகிக்க எங்களுக்காகப் பிரார்த்தித்தருளும் தாயே! - ஆமென்.

புனித சூசையப்பருக்கு செபம்

Image
  புனித சூசையப்பரே! உம் அடைக்கலம் மிகவும் மகத்தானது. வல்லமை மிக்கது. இறைவனின் சந்நிதியில் உடனடி பலன் அளிக்க வல்லது. ஏனவே என் ஆசைகளையும், எண்ணங்களையும் உம் அடைக்கலத்தில் வைக்கிறேன். உம் வல்லமை மிக்க பரிந்துரையால் உம் திருமகனும் எங்கள் ஆண்டவருமாகிய சேசுவிடம் எங்களுக்குத் தேவையான எல்லா ஆன்ம நலன்களையும் பெற்றுத்தாரும். இதன் வழியாக மறு உலகில் உமக்குள்ள ஆற்றலைப் போற்றி எல்லாம் வல்ல தந்தையாகிய இறைவனுக்கு நன்றியும், ஆராதனையும் செலுத்தக் கடவேன். புனித சூசையப்பரே! உம்மையும் உம் திருக்கரங்களில் உறங்கும் சேசுவையும் சதா காலமும் எண்ணி பூரிப்படைய தயங்கியதில்லை. இறைவன் உம்மார்பில் சாய்ந்து தூங்கும் வேளையில் அவரைத் தொந்தரவு செய்ய விரும்பவில்லை. உம் மார்போடு அவரை என் பொருட்டு இணைத்து அணைத்துக் கொள்ளும். என் பெயரால் அவருக்கு நெற்றியில் முத்தமிடும். நான் இறக்கும் தருணத்தில் அந்த முத்தத்தை எனக்குத் தரும்படி கூறும். மரித்த விசுவாசிகளின் ஆன்ம காவலனே எங்களுக்காக மன்றாடும். - ஆமென்.

viluveleni naa jeevitham nee chethilo padagaane విలువేలేని నా జీవితం నీ చేతిలో పడగానే

Image
విలువేలేని నా జీవితం – నీ చేతిలో పడగానే అది ఎంతో విలువని నాకు చూపితివే జీవమే లేని నాలో నీ – జీవమును నింపుటకు నీ జీవితాన్నే ధారబోసితివే (2) నీది శాశ్వత ప్రేమయా – నేను మరచిపోలేనయా ఎన్ని యుగాలైనా మారదు ఎండిన ప్రతి మోడును – మరలా చిగురించును నా దేవునికి సమస్తము సాధ్యమే (2) పాపములో పడిన నన్ను శాపములో మునిగిన నన్ను నీ ప్రేమతో లేపితివే రోగమే నన్ను చుట్టుకొనియుండగా రోదనతో ఒంటరినైయుండగా నా కన్నీటిని తుడిచితివే (2) ||నీది|| పగలంతా మేఘ స్తంభమై రాత్రంతా అగ్ని స్తంభమై దినమంతయు రెక్కలతో కప్పితివే స్నేహితులే నన్ను వదిలేసినా బంధువులే భారమని తలచినా నా కొరకే బలి అయితివే (2) ||నీది|| సాధ్యమే సాధ్యమే సాధ్యమే నా యేసుకు సమస్తము సాధ్యమే సాధ్యమే సాధ్యమే నా ప్రియునికి సమస్తము (2) ఎండిన ప్రతి మోడును మరలా చిగురించును నా దేవునికి సమస్తము సాధ్యమే (2) ||విలువేలేని||

neelo samasthamu saadhyame నీలో సమస్తము సాధ్యమే

Image
నీలో సమస్తము సాధ్యమే (2) మహొన్నతుడా యేసయ్యా బలవంతుడా యేసయ్యా (2) ఆరాధింతును – నిన్నే స్తుతియింతున్ (4) ||నీలో|| అలసియున్న నా ప్రాణమును సేదదీర్చువాడవు జీవజలపు ఊటనిచ్చి తృప్తిపరచువాడవు (2) ప్రార్థనలన్ని ఆలకించువాడవు నీవు అడిగినవన్ని ఇచ్చేవాడవు నీవు (2) ||మహొన్నతుడా|| శోధన వేదనలలో జయమిచ్చువాడవు బుద్దియు జ్ఞానమిచ్చి నడిపించువాడవు (2) నిత్యజీవం ఇచ్చేవాడవు నీవు మాతో ఉన్న ఇమ్మానుయేలువు నీవు (2) ||మహొన్నతుడా||

मिशन के लिए विनती

Image
परम प्रिय प्रभु येसु खीस्त, तू ने अपना लहू देकर संसार का उद्धार किया है। तू दीन मनुष्य–जाति पर, जो अभी तक भूल के अंधेरे और मौत की छाया में इस प्रकार पड़ी है दया की दृष्टि फेर, और सत्य का प्रकाश सबों पर पूर्णरूप से चमका। हे प्रभु अपने सुसमाचार के धर्म–प्रचारकों की संख्या बढ़ा। अपनी कृपा के द्वारा उन्हें प्रेरित कर, उनका उत्साह और थकावट सफल कर और आशिष दे कि उनकी कोशिश से सभी अविश्वासी तुझे जानें और तेरी ओर अर्थात् अपने सृजनहार और उद्धारकर्ता की ओर फिरें। भटकने वालों को अपनी शरण में, और विरोधियों को एकमात्र और सच्ची मण्डली की गोद में बुला ले। हे परम प्रिय त्राणकर्ता, पृथ्वी पर अपने अत्यंत अभिलाषित राज्य को शीघ्र स्थापित कर सब मनुष्यों को अपने हृदय की ओर खींच, जिससे स्वर्ग का निरन्तर सुख प्राप्त करके तेरे उद्धार के अनुपम लाभ में सब लोग भागी हों। आमेन। (एक बार ’’हे पिता हमारे’’, ’’प्रणाम मरिया’’ इत्यादि)

कुँवारी मरियम से ’’स्मरण कर’’ प्रार्थना

Image
हे अत्यन्त धर्मिष्ठ कुँवारी मरियम ! स्मरण कर कि आज तक यह कभी सुनने में नहीं आया कि तेरा कोई भी शरणागत तुझ से सहायता माँगकर तथा परमेश्वर के पास तेरी प्रार्थना की मदद चाहकर तुझ से अनसुना छूट गया हो। हे कुँवारियों में श्रेष्ठ कुँवारी ! हे मेरी माता ! इसी विश्वास को लेकर मैं तेरी शरण में दौड़ा आया हूँ। मैं शोकपूर्ण पापी तेरे सम्मुख उपस्थित हूँ। हे परमेश्वर की माता ! मेरी प्रार्थना अनसुनी न करना, किन्तु कृपा करके उस पर ध्यान देना। आमेन।

सन्त यूसुफ़ से पवित्र कलीसिया के लिए विनती

Image
हे सन्त युसुफ़, हम अपने दुख और कष्ट में आपके शरण लेते हैं। आपकी भी अति पवित्र दुलहिन की सहायता पहले माँग कर, हम बडे आसरे से आपकी रक्षा चाहते हैं। आप तो ईश्वर की माँ, निष्कलंक कुँवारी से पपित्र प्रेम द्वारा संयुक्त रहे। अपने पिता के प्रेम से बालक येसु को प्यार किया है। आपके उस महान प्रेम का स्मरण कर, हम हाथ जोड़कर आपसे यह विनती करते हैं कि ख्रीस्त ने अपने लहू से जिन लोगों को बचाया है, उन पर आप दयादृष्टि कीजिए। आप हमारी सब आवश्यकताओं में हमें अपनी शक्ति और सहायता द्वारा संभालें। हे पवित्र घराने के ईमानदार रक्षक, येसु ख्रीस्त की चुनी हुई सन्तानों की रक्षा कीजिए। हे अति प्रेमी पिता, धर्म की भूलचुकों से और हर बुराई से हम बच जाएँ। हे अति शक्तिमान रक्षक, शैतान की चढ़ाइयों के समय, स्वर्ग से हमें सहायता दीजिए। जैसे आपने बालक येसु को मरण की जोखिम से बचाया था, वैसे ही अब ईश्वर की पवित्र कलीसिया को शत्रुओं के फ़ंदों और हर विपत्ती से बचाइए। हम सबों को सुरक्षित रखिए। ऎसा कीजिए कि हम आपकी सहायता द्वारा, आपके समान पवित्र जीवन के बाद पवित्र मरण और स्वर्ग का अनन्त सुख प्राप्त करें। आमेन।

मृतकों के लिए प्रार्थना

Image
हे ईश्वर, जीवन के स्वामी, हम अपने परिवार के सभी मृत भाइ-बहनों (विशेष कर ...... ) की याद करते हुए, उनकी आत्माओं को तेरे समक्ष लाते हैं। हमारी प्रार्थना सुन और उन्हें अनन्त शांति और ज्योति के राज्य में पहुँचा कर तेरे प्रत्यक्ष दर्शन करने एवं तेरे सन्तों तथा दूतों के साथ तेरी स्तुति करने योग्य बना। हमारे प्रभु ख्रीस्त के द्वारा। आमेन। (पिता हमारे ..., प्रणाम मरिया..., पिता और पुत्र ...)

शोधकाग्नि की आत्माओं के लिए विनती

Image
हे येसु, जो आत्माएं तुझे प्यार करती हैं, और जिन्हें तू प्यार करता है, उनके लिए हम तुझसे प्रार्थना करते हैं। जो दाण्ड उनको उठाना है सो ठीक है। उससे तू उन्हें अपने दर्शन के योग्य बनाता है। तौभी तू चाहता है कि उनका दुख घटाने के लिए हम लोग तेरी दया का नाम लें। दया करके हमारी यह विनती सुन। हम यह कृपा माँगते हैं – उन आत्माओं की विशेष याद कर, जिन्होंने अपने जीवन में भक्तिपूर्वक तेरे हृदय की सेवा की और उसकी बडाई बढाने के लिए काम किया था। हे प्रिय येसु, यह मत होने दे कि वे और देर तक तुझ से दूर रहें। तेरा हृदय उनको प्यार करता है। उन्हें उस आनन्द में रख ले जिसको छोड वे और कुछ नहीं चाहती और जिसको तूने अपना अनमोल लहू बहा कर उनके लिए कमाया है। आमेन।

माता मरियम की माला-विनती

Image
पिता और पुत्र और पवित्र आत्मा के नाम पर। आमेन प्रेरितों का धर्मसार स्वर्ग और पृथ्वी के सृजनहार, सर्वशक्तिमान् पिता परमेश्वर पर मैं विश्वास करता हूँ। ......... हे पिता हमारे.... प्रणाम मरिया.... (यह तीन बार बोलें) पिता और पुत्र और पवित्र आत्मा की बढ़ाई होवे..... आनन्द के पाँच भेद (सोमवार और शनिवार को) 1.गब्रिएल दूत मरियम को सदेंश देते हैं। 2.मरियम एलिज़बेथ से भेंट करती हैं। 3.हमारे प्रभु येसु जन्म लेते हैं। 4.बालक येसु मंदिर में चढ़ाए जाते हैं। 5.बालक येसु मन्दिर में पाये जाते हैं। ज्योति के पाँच भेद (गुरुवार को) 1.यर्दन नदी में येसु बपतिस्मा ग्रहण करते हैं। 2.काना के विवाह भोज में येसु अपने आप को प्रकट करते हैं। 3.मन–परिवर्तन के आवान के साथ येसु ईश्वर के राज्य की घोषणा करते हैं। 4.येसु का रूपान्तरण हो जाता है। 5.पास्का रहस्य की सांस्कारिक अभिव्यक्ति के रूप में येसु यूखरिस्त की स्थापना करते हैं। दु:ख के पाँच भेद (मंगलवार और शुक्रवार को) 1.बारी में येसु की प्राणपीड़ा। 2.येसु कोड़ों से मारे जाते हैं। 3.येसु को काँटों का मुकुट पहनाया जाता हैं। 4.येसु अपना क्रूस ढ़ोते हैं। 5.येस...

When the thought of you wakens in us

Image
God our heavenly Father, when the thought of you wakes in our hearts, let its awakening not be like a startled bird that flies about in fear. Instead, let it be like a child waking from sleep with a heavenly smile.