உந்தன் ஆவி எந்தன் உள்ளம் தங்க வேண்டும்| Undhan Aavi Enthan Ullam Thanga Vaendum lyrics
உந்தன் ஆவி எந்தன் உள்ளம் தங்க வேண்டும்
எந்த நாளும் உந்தன் நாமம் பாட வேண்டும்
எந்த நாளும் உந்தன் நாமம் பாட வேண்டும்
உள்ளம் எல்லாம் அன்பினாலே பொங்கவேண்டும்
கள்ளம் நீங்கி காலமெல்லாம் வாழவேண்டும்
பாவமான சுபாவம் எல்லாம் நீங்க வேண்டும்
தேவ ஆவி தேற்றி என்றும் நடத்த வேண்டும்
ஜீவதண்ணீர் நதியாகப் பாய வேண்டும்
சிலுவை நிழலில் தேசமெல்லாம் வாழவேண்டும்
வரங்கள் கனிகள் எல்லா நாளும் பெருக வேண்டும்
வாழ்நாளெல்லாம் பணிசெய்து மடியவேண்டும்
ஏதேன் தோட்ட உறவு என்றும் தொடர வேண்டும்
இயேசு கிறிஸ்து குரலைக் கேட்டு மகிழ வேண்டும்
Comments