தேவனுக்கே மகிமை தெய்வத்திற்கே மகிமை தேடி வந்து மீட்டவரே | Devanukkae Makimai Devaththirkae Makimai Thaeti Vanthu Meettavarae
தேவனுக்கே மகிமை
தெய்வத்திற்கே மகிமை
தேடி வந்து மீட்டவரே
தினம் உமக்கே மகிமை
ஐயா வாழ்க வாழ்க
உம் நாமம் வாழ்க
உன்னதத்தில் தேவனுக்கே
மகிமை உண்டாகட்டும்
பூமியிலே சமாதானமும்
பிரியமும் உன்டாகட்டும் – இந்தப்
செவிகளை நீர் திறந்து விட்டீர்
செய்வோம் உம் சித்தம்
புவிதனிலே உம் விருப்பம்
பூரணமாகட்டுமே – இந்தப்
எளிமையான எங்களையே
என்றும் நினைப்பவரே
ஒளிமயமே துணையாளரே
உள்ளத்தின் ஆறுதலே – எங்கள்
தேடுகிற அனைவருமே
மகிழ்ந்து களிகூரட்டும்
பாடுகிற யாவருமே
பரிசுத்தம் ஆகட்டுமே – இன்று
குறை நீக்கும் வல்லவரே
கோடி ஸ்தோத்திரமே
கறை போக்கும் கர்த்தாவே
கல்வாரி நாயகனே – பாவக்
Comments