உன்னையே வெறுத்துவிட்டால் ஊழியம் செய்திடலாம்| Unnaiyae Veruththuvittal Ooliyam Seythidalaam Suyaththai Saakatiththaal
உன்னையே வெறுத்துவிட்டால்
ஊழியம் செய்திடலாம்
சுயத்தை சாகடித்தால்
சுகமாய் வாழ்ந்திடலாம்
சிலுவை சுமப்பதனால் சிந்தையே மாறிவிடும்
நீடிய பொறுமை வரும் நிரந்தர அமைதிவரும்
பெயர் புகழ் எல்லாமே இயேசுவின் நாமத்திற்கே
கிறிஸ்து வளரட்டுமே நமது மறையட்டுமே
நாளைய தினம் குறித்து கலங்காதே மகனே
இதுவரை காத்த தெய்வம் இனியும் நடத்திடுவார்
சேர்த்து வைக்காதே திருடன் பறித்திடுவான்
கொடுத்திடு கர்த்தருக்கே குறைவின்றி காத்திடுவார்
தன்னலம் நோக்காமல் பிறர் நலம் தேடிடுவோம்
இயேசுவில் இருந்த சிந்தை என்றுமே இருக்கட்டுமே
Comments