நாதா உம் திருக்கரத்தில் இசைக்கருவி நான் நாள்தோறும் பயன்படுத்தும| Naathaa Um Thirukkaraththil Isaikkaruvi Naan Naalthorum Payanpaduththum
நாதா உம் திருக்கரத்தில்
இசைக்கருவி நான்
நாள்தோறும் பயன்படுத்தும்
உந்தன் சித்தம் போல்
1. ஐயா உம் பாதம் என் தஞ்சமே
அனுதினம் ஓடி வந்தேன்
ஆனந்தமே ஆனந்தமே
2. எங்கே நான் போக உம் சித்தமோ
அங்கே நான் சென்றிடுவேன்
உம் நாமத்தில் ஜெயம் எடுப்பேன்
3. புதுப்பாடல் தந்து ஆசீர்வதியும்
பரவசமாகிடுவேன்
எக்காளம் நான் ஊதிடுவேன்
4. நிந்தைகள் நெருக்கம் துன்பங்களில்
துதி பாடி மகிழ்ந்திருப்பேன்
கிருபை ஒன்றே போதுமைய்யா
5. ஊரெல்லாம் செல்வேன் பறைசாற்றுவேன்
உம் நாமம் உயர்த்திடுவேன்
சாத்தான் கோட்டை தகர்த்திடுவேன்
Comments