இயேசுவின் கரங்களைப் பற்றிப் கொண்டேன் நான்| Yesuvukkaay Avamaanam Aettuk Kontaen Inivarum Palan Mael Nokkamaanaen Lyrics

இயேசுவின் கரங்களைப் பற்றிப் கொண்டேன் நான்
இயேசுவின் கரங்களை பற்றிக் கொண்டேன்
எதற்கும் பயம் இல்லையே
இனியும் கவலை எனக்கிலையே

அல்லேலூயா அல்லேலூயா

இயேசுவுக்காய் அவமானம் ஏற்றுக் கொண்டேன்
இனிவரும் பலன் மேல் நோக்கமானேன்
அழிந்து போகும் பாராட்டு வேண்டாமே
அரவணைக்கும் இயேசு போதும் போதுமே

அதிவிரைவில் நீங்கும் இந்த உபத்திரவம்
அதிகமான கனமகிமை உண்டாக்கும்
காண்கிண்ற எல்லாமே அநித்தியம்
காணாதவைகளோ நித்தியம்

பகைவர்க்கு அன்பு காட்டிடுவேன்
வெறுப்பவர்க்கு நன்மை செய்திடுவேன்
சபிப்பவர்க்கு ஆசி கூறிடுவேன்
தூற்றுவோருக்காக ஜெபித்திடுவேன்

கர்த்தரையே முன் வைத்து ஓடுகிறேன்
கடும் புயல் வந்தாலும் அசைவதில்லை
எதையும் தாங்குவேன் இயேசுவுக்காய்
இனியும் சோர்ந்து போவதே இல்லை

ஆட்கொண்ட தேவனை நம்புகிறேன்
அவருக்குள் வேர் கொண்டு வளருகிறேன்
கோடைக்காலம் வந்தாலும் அச்சமில்லையே
வறட்சிக் காலம் வந்தாலும் கவலையில்லையே

Comments

Popular posts from this blog

மனசெல்லாம் மெல்ல மெல்ல மரியே உன் பேரைச் சொல்ல Manasellam mella mella maraiaye un Perai Solla

இறைவனிடம் பரிந்து பேசும் புனித அந்தோணியிரே -Iraivanidam Parinthu Pesum Punitha Anthoniyarey

இறை அன்னையை நோக்கிப் புனித பெர்நார்துவின் மன்றாட்டு