அழிந்து போகின்ற ஆத்துமாக்களை தினமும் தினமும் நினைப்பேன்| Alinthu Pokinta Aaththumaakkalai Thinamum Thinamum Ninaippaen Lyrics
அழிந்து போகின்ற ஆத்துமாக்களை
தினமும் தினமும் நினைப்பேன்
அலைந்து திரிகின்ற ஆட்டைத் தேடியே
ஓடி ஓடி உழைப்பேன்
தெய்வமே தாருமே
ஆத்தும பாரமே
இருளின் ஜாதிகள்
பேரொளி காணட்டும்
மரித்த மனிதர்மேல்
வெளிச்சம் உதிக்கட்டும்
திறப்பின் வாசலில்
தினமும் நிற்கின்றேன்
சுவரை அடைக்க நான்
தினமும் ஜெபிக்கின்றேன்
எக்காள சப்தம் நான்
மௌனம் எனக்கில்லை
சாமக்காவலன்
சத்தியம் பேசுவேன்
கண்ணீர் சிந்தியே
விதைகள் தூவினேன்
கெம்பீர சப்தமாய்
அறுவடை செய்கிறேன்
ஊதாரி மைந்தர்கள்
உம்மிடம் திரும்பட்டும்
விண்ணகம் மகிழட்டும்
விருந்து நடக்கட்டும்
Comments