இயேசு கிறிஸ்து என் ஜீவன்சாவது ஆதாயமே| Yesu Kiristhu En Jeevan Saavathu Aathaayamae Lyrics

இயேசு கிறிஸ்து என் ஜீவன்
சாவது ஆதாயமே
வாழ்வது நானல்ல இயேசு
என்னில் வாழ்கின்றார்

இயேசுவை நான் ஏற்றுக்கொண்டேன்
அவருக்குள் நான் வேர்கொண்டேன்
அவர்மேல் எழும்பும் கட்டடம் நான்
அசைவதில்லை தளர்வதும் இல்லை

என்ன வந்தாலும் கலங்கிடாமல்
இடுக்கண் நேரம் ஸ்தோத்தரிப்பேன்
அறிவைக் கடந்த தெய்வீக அமைதி
அடிமை வாழ்வின் கேடயமே

எனது ஜீவன் கிறிஸ்துவுடனே
தேவனுக்குள்ளே மறைந்தது
ஜீவன் கிறிஸ்து வெளிப்படும் நாளில்
மகிமையில் நான் வெளிப்படுவேனே

கிறிஸ்துவுக்குள்ளே இரத்தத்தினாலே
பாவ மன்னிப்பின் மீட்படைந்தேன்
அவரை அறியும் அறிவிலே வளர்வேன்
அவரின் விருப்பம் செய்தே மகிழ்வேன்

Comments

Popular posts from this blog

மனசெல்லாம் மெல்ல மெல்ல மரியே உன் பேரைச் சொல்ல Manasellam mella mella maraiaye un Perai Solla

இறைவனிடம் பரிந்து பேசும் புனித அந்தோணியிரே -Iraivanidam Parinthu Pesum Punitha Anthoniyarey

இறை அன்னையை நோக்கிப் புனித பெர்நார்துவின் மன்றாட்டு