கர்த்தரை நோக்கி அமர்ந்திருப்போம் கவலை மறந்து காத்திருப்போம், Karththarai Nokki Amarnthiruppom Kavalai Maranthu Kaaththiruppom lyrics

கர்த்தரை நோக்கி அமர்ந்திருப்போம்
கவலை மறந்து காத்திருப்போம்

கர்த்தரை நம்பி நன்மை செய்வோம்
நல்லதோர் மேய்ச்சலை கண்டடைவோம்
அவரில் நாம் மகிழ்ந்திருப்போம்
இதய விருப்பம் நிறைவேற்றுவார்

நீதிமான் இரட்சிப்பு நிச்சயமே
நித்தம் அடைக்கலம் கர்த்தர் தாமே
உதவி செய்து காத்திடுவார்
உள்ளத்தில் தங்கி நடத்திடுவார்

 வழிகள் அனைத்தும் கர்த்தருக்கே
ஒப்புவித்து நாம் மகிழ்ந்திருப்போம்
கர்த்தரையே சார்ந்திருப்போம்
அவரே அனைத்தும் வாய்க்கச் செய்வார்

சுயபுத்தியில் சாய்ந்திடாமல்

முழு உள்ளத்தோடு நம்பிடுவோம்

வழிகளெல்லாம் நினைத்திடுவோம்

வாழ்வின் பாதை காட்டிடுவார்

Comments

Popular posts from this blog

மனசெல்லாம் மெல்ல மெல்ல மரியே உன் பேரைச் சொல்ல Manasellam mella mella maraiaye un Perai Solla

இறைவனிடம் பரிந்து பேசும் புனித அந்தோணியிரே -Iraivanidam Parinthu Pesum Punitha Anthoniyarey

இறை அன்னையை நோக்கிப் புனித பெர்நார்துவின் மன்றாட்டு