தெய்வீகக் கூடாரமே என் தேவனின் சந்நிதியே தேடி ஓடி வந்தோம்| Theyveekak Koodaaramae En Thaevanin SannithiyaeThaeti Oti Vanthom Lyrics
தெய்வீகக் கூடாரமே என்
தேவனின் சந்நிதியே
தேடி ஓடி வந்தோம்
தெவிட்டாத பாக்கியமே
மகிமை மகிமை மாட்சிமை
மாறா என் நேசருக்கே
கல்வாரி திருப்பீடமே
கறை போக்கும் திரு இரத்தமே
உயிருள்ள பரிசுத்த ஜீவ பலியாக
ஓப்புக் கொடுத்தோம் ஐயா
ஈசோப்பினால் கழுவும்
இன்றே சுத்தமாவோம்
உறைவின்றி பனி போல வெண்மையாவோம்
உம் திரு வார்த்தையினால்
அப்பா உம் சமூகத்தின்
அப்பங்கள் நாங்கள் ஐயா
எப்போதும் உம் திருப்பாதம் அமர்ந்திட
ஏங்கித் தவிக்கின்றோம்
உலகத்தின் வெளிச்சம் நாங்கள்
உமக்காய் சுடர் விடுவோம்
ஆனந்த தைலத்தால் அபிஷேகியும் ஐயா
அனல் மூட்டி எரிய விடும்
தூபமாய் நறுமணமாய்
துதிகளை செலுத்துகிறோம்
எந்நாளும் எப்போதும் எல்லா ஜெபத்தோடும்
ஆவியில் ஜெபிக்கின்றோம்
Comments