இரத்த கோட்டைக்குள்ளே நான் நுழைந்து விட்டேன்இனி எதுவும் அணுகாது| Raththa Kottaikullae NaanbNuzhaindhu Vittaen Yini Yedhuvum Annugaadhu

இரத்த கோட்டைக்குள்ளே
நான் நுழைந்து விட்டேன்
இனி எதுவும் அணுகாது
எந்தத் தீங்கும் தீண்டாது

1. நேசரின் இரத்தம் என் மேலே
நெருங்காது சாத்தான்
பாசமாய் சிலுவையில் பலியானார்
பாவத்தை வென்று விட்டார்

2. இம்மட்டும் உதவின எபினேசரே
இனியும் காத்திடுவார்
உலகிலே இருக்கும் அவனை விட
என் தேவன் பெரியவரே

3. தேவனே ஓளியும் மீட்புமானார்
யாருக்கு அஞ்சிடுவேன்
அவரே என் வாழ்வின் பெலனானார்
யாருக்கு பயப்படுவேன்

4. தாய் தன் பிள்ளையை மறந்தாலும்
மறவாத என் நேசரே
ஆயனைப் போல நடத்துகிறீர்
அபிஷேகம் செய்கின்றீர்

5. மலைகள் குன்றுகள் விலகினாலும்
மாறாது உம் கிருபை
அனாதி சிநேகத்தால் இழுத்துக் கொண்டீர்
அணைத்து சேர்த்துக் கொண்டீர்

Comments

Popular posts from this blog

மனசெல்லாம் மெல்ல மெல்ல மரியே உன் பேரைச் சொல்ல Manasellam mella mella maraiaye un Perai Solla

இறைவனிடம் பரிந்து பேசும் புனித அந்தோணியிரே -Iraivanidam Parinthu Pesum Punitha Anthoniyarey

இறை அன்னையை நோக்கிப் புனித பெர்நார்துவின் மன்றாட்டு