மனதுருகும் தெய்வமே இயேசய்யா மனதாரத் துதிப்பேன் ஸ்தோத்தரிப்பேன், Manadhurugum Deivamae Yesaiya Manathaarath Thuthippaen Sthoaththarippaen lyrics
மனதுருகும் தெய்வமே இயேசய்யா
மனதாரத் துதிப்பேன் ஸ்தோத்தரிப்பேன்
நீர் நல்லவர் சர்வ வல்லவர்
உம் இரக்கத்திற்கு முடிவே இல்லை
உம் அன்பிற்கு அளவே இல்லை
அவை காலைதோறும் புதிதாயிருக்கும்
மெய்யாக எங்களது
பாடுகளை ஏற்றுக்கொண்டு
துக்கங்களை சுமந்து கொண்டீர் ஐயா
எங்களுக்கு சமாதானம்
உண்டு பண்ணும் தண்டனையோ
உம்மேலே விழுந்ததையா ஐயா
சாபமான முள்முடியே
தலைமேலே சுமந்து கொண்டு
சிலுவையிலே வெற்றி சிறந்தீர் ஐயா
எங்களது மீறுதலால்
காயப்பட்டீர் நொறுக்கப்பட்டீர்
தழும்புகளால் சுகாமானோம் உந்தன்
தேடிவந்த மனிதர்களின்
தேவைகளை அறிந்தவராய்
தினம் தினம் அற்புதம் செய்தீர் ஐயா
Comments