நேசரே உம் திரு பாதம் அமர்ந்தேன் நிம்மதி நிம்மதியே| Naesarae Um Thiru Paatham Amarnthaen Nimmathi Nimmathiyae Lyrics

நேசரே உம் திரு பாதம் அமர்ந்தேன்
நிம்மதி நிம்மதியே
ஆர்வமுடனே பாடித் துதிப்பேன்
ஆனந்தம் ஆனந்தமே

அடைக்கலமே அதிசயமே
ஆராதனை ஆராதனை

உம் வல்ல செயல்கள்
நினைத்து நினைத்து
உள்ளமே பொங்குதய்யா
நல்லவரே நன்மை செய்தவரே
நன்றி நன்றி ஐயா

வல்லவரே நல்லவரே
ஆராதனை ஆராதனை

பலியான செம்மறி பாவங்களெல்லாம்
சுமந்து தீர்த்தவரே
பரிசுத்த இரத்தம் எனக்காக அல்லோ
பாக்கியம் பாக்கியமே

பரிசுத்தரே படைத்தவரே
ஆராதனை ஆராதனை

எத்தனை இன்னல்கள் என் வாழ்வில் வந்தாலும்
உம்மை பிரியேன் ஐயா
சித்தமே செய்து சாட்சியாய் வாழ்வேன்
நிச்சயம் நிச்சயமே

இரட்சகரே இயேசு நாதா

ஆராதனை ஆராதனை

Comments

Popular posts from this blog

மனசெல்லாம் மெல்ல மெல்ல மரியே உன் பேரைச் சொல்ல Manasellam mella mella maraiaye un Perai Solla

இறைவனிடம் பரிந்து பேசும் புனித அந்தோணியிரே -Iraivanidam Parinthu Pesum Punitha Anthoniyarey

இறை அன்னையை நோக்கிப் புனித பெர்நார்துவின் மன்றாட்டு