புனித ஆரோக்கிய மாதா ஆலயம், முன்சிறை


ஆலயம் அறிவோம்  "புனித ஆரோக்கிய மாதா ஆலயம், முன்சிறை" ஆலயத்தை குறித்த தகவல்களை பதிவு செய்கின்றோம். 
🏵🏵🏵🏵🏵🏵🏵🏵🏵🏵🏵🏵🏵🏵🏵🏵

🌺பெயர் : புனித ஆரோக்கிய மாதா ஆலயம் 
🌺இடம் : முன்சிறை (புதுக்கடை)

🌺மாவட்டம் : கன்னியாகுமரி 
🌺மறை மாவட்டம் : குழித்துறை.

🌺நிலை : பங்குத்தளம்
🌺கிளை : புனித செபஸ்தியார் ஆலயம், செபஸ்தியார்புரம் (ஓச்சவிளை)

🌺பங்குத்தந்தை அருட்பணி : சேவியர் புரூஸ்

🌺குடும்பங்கள் : 900
🌺அன்பியங்கள் : 15

🌺ஞாயிறு திருப்பலி : காலை 06.45 மணிக்கு.

🌺திருவிழா : செப்டம்பர் 08 ம் தேதியை உள்ளடக்கிய பத்து நாட்கள்.

ஆலய வரலாறு :

🌷குமரி மாவட்ட மக்கள் சின்ன வேளாங்கண்ணி என அன்போடு அழைக்கும் புனித ஆரோக்கிய அன்னை ஆலயம், புதுக்கடை நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது.

🍓இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்னர் கொச்சி ஆயர் இல்லத்திலிருந்து அருட்பணியாளர் ஒருவர் இறை வார்த்தையை போதித்துக் கொண்டு புதுக்கடை பகுதிக்கு வந்துள்ளார். இப்பகுதி மக்கள் ஆர்வத்துடன் அவரிடம் இறைச் செய்தியை கேட்டனர். அருட்பணியாளர் புதுக்கடையிலிருந்து புறப்படும் போது மரியன்னையின் சுரூபம் ஒன்றை மக்களிடம் கொடுத்துச் சென்றார். மக்கள் மரியன்னையின் சுரூபத்தை வைத்து இறைவனை வழிபட்டு வந்தனர்.

🦋1914 ஆம் ஆண்டில் ஆலயம் கட்டப்பட்டு திருப்பலி நிறைவேற்றப்பட்டு வந்தது. 1972 ஆம் ஆண்டு முதல் ஆலய விரிவாக்கப் பணிகள் படிப்படியாக நடைபெற்று வந்தது.

🦋07.10.2000 அன்று கோட்டார் மறை மாவட்ட ஆயர் மேதகு லியோன் அ. தர்மராஜ் அவர்களால் தனிப் பங்காக உயர்த்தப் பட்டது.

மண்ணின் மைந்தர்கள்

💐அருட்பணி. ஜெரின் நவாஸ்

💐அருட்சகோதரி செல்சுஸ்மேரி
💐அருட்சகோதரி ஜோஸ்பின் மேரி
💐அருட்சகோதரி தெரஸ் அமலோற்பவம்
💐அருட்சகோதரி லூர்து மேரி 
💐அருட்சகோதரி ரெத்தினம் 
💐அருட்சகோதரி றோஸ்மேரி
💐அருட்சகோதரி ஜாய்ஸ் 
💐அருட்சகோதரி அல்போன்சாள்
💐அருட்சகோதரி அருள்மேரி 
💐அருட்சகோதரி விக்டோரியாள்
💐அருட்சகோதரி அபிதா. (இது 2005 ஆம் ஆண்டு வரையிலான மண்ணின் மைந்தர்கள் பட்டியல்)

💥தற்போது பழைய ஆலயமானது இடிக்கப்பட்டு புதிய ஆலயப் பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றது. குழித்துறை மறை மாவட்டத்தின் வேங்கோடு மறை வட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமாக இவ்வாலயம் விளங்குகின்றது. மேலும் ஆலயத்திற்கு சொந்தமான புனித ஆரோக்கிய மாதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிகல்விப் பணியில் சிறந்து விளங்குகின்றது.

💥 புதுக்கடை பேருந்து நிலையத்திற்கு அருகில் இந்த ஆலயம் உள்ளது.

Comments

Popular posts from this blog

மனசெல்லாம் மெல்ல மெல்ல மரியே உன் பேரைச் சொல்ல Manasellam mella mella maraiaye un Perai Solla

இறைவனிடம் பரிந்து பேசும் புனித அந்தோணியிரே -Iraivanidam Parinthu Pesum Punitha Anthoniyarey

இறை அன்னையை நோக்கிப் புனித பெர்நார்துவின் மன்றாட்டு