புனித ஜார்ஜியார் ஆலயம் தளவாய்புரம்


ஆலயம் அறிவோம் வரிசையில் இன்று "புனித ஜார்ஜியார் ஆலயம் தளவாய்புரம்" குறித்த தகவல்களை பதிவு செய்கின்றோம். 

💖🐎💖🐎💖🐎💖🐎💖🐎💖🐎💖🐎💖🐎

🐎பெயர் : புனித ஜார்ஜியார் ஆலயம்
🛡இடம் : தளவாய்புரம், நாகர்கோவில்

✳️மாவட்டம் : கன்னியாகுமரி
🔷மறைமாவட்டம் : கோட்டார்
🔴மறைவட்டம் : கோட்டார்

🏆நிலை : பங்குத்தளம்

💐பங்குத்தந்தை : அருட்பணி. ஜோசப் செயில் சிங்

🦋குடும்பங்கள் : 460
❣️அன்பியங்கள் : 12

💥வழிபாட்டு நேரங்கள் :
✝️ஞாயிறு திருப்பலி காலை 06.30 மணி
✝️வார நாட்களில் திருப்பலி காலை 06.00 மணி
✝️வியாழக்கிழமை மாலை 06.00 மணி நவநாள் திருப்பலி

🎉திருவிழா : மே மாதம் 2 வது வெள்ளிக்கிழமை கொடியேற்றப்பட்டு 10 நாட்கள் கொண்டாடப்படுகிறது.

மண்ணின் மைந்தர்கள் : 
💐1. அருட்பணி. A. ஜோக்கிம்
💐2. அருட்பணி. K. மரியதாஸ்
💐3. அருட்பணி. R. சேவியர் புரூஸ்
💐4. அருட்பணி. J. ஜெயச்சந்திர ரூபன் 
💐5. அருட்பணி. கிறிஸ்டோபர் பிரதாப், CSsR

மண்ணின் அருட்சகோதரிகள்:
🌹1. அருட்சகோ. தெரெஸ் செல்லம்மா, புனித அன்னம்மாள் சபை.
🌹2. அருட்சகோ. டொமற்றில் சில்வியா, புனித அன்னம்மாள் சபை.
🌹3. அருட்சகோ. ஜார்ஜினா மேரி, அமலோற்பவ மாதா சபை.
🌹4. அருட்சகோ. எக்ஸ்பெடிட், புனித அன்னம்மாள் சபை.
🌹5. அருட்சகோ. ரெஜிஸ் மேரி, மரியாயின் மாசற்ற இருதய கன்னியர் சபை.
🌹6. அருட்சகோ. ரீற்றா, புனித அன்னம்மாள் சபை. 
🌹7. அருட்சகோ. பிராங்க் மேரி, மரியாயின் மாசற்ற இருதய கன்னியர் சபை.
🌹8. அருட்சகோ. லியோ கார்டியா மேரி, புனித அன்னம்மாள் சபை.
🌹9. அருட்சகோ. மரியோ ரோஸ்லின் ஆலிஸ், 
இயேசுவின் திரு இருதய சபை.
🌹10. அருட்சகோ. லீனா மர்செல்லா ராணி, 
இயேசுவின் திரு இருதய சபை.
🌹11. அருட்சகோ. அன்ரூ பொபோலா மேரி, 
புனித அன்னம்மாள் சபை.
🌹12. அருட்சகோ. அனாக்லெட் மேரி, புனித அன்னம்மாள் சபை.
🌹13. அருட்சகோ. செலின் சேசு தங்கம், இயேசுவின் திரு இருதய சபை.
🌹14. அருட்சகோ. மேரி புஷ்ப ராணி, அமலோற்பவ மாதா வேத போதக சபை.
🌹15. அருட்சகோ. விமலா பிரான்சிஸ்.

👉வழித்தடம் : நாகர்கோவில் காவல்துறை கண்காணிப்பாளர் முகாம் அலுவலகம் அருகே..., பெஸ்கி ஆடிட்டோரியம் எதிர்ப்புறம் சாலையில் இடது பக்கம் தளவாய்புரம் புனித ஜார்ஜியார் ஆலயம் அமைந்துள்ளது.

👉Location map : https://g.co/kgs/Ldo9uf

வரலாறு :
***********
🐎குமரி மாவட்டத்தின் எடத்துவா என அழைக்கப் படுகிறதும், கோட்டார் மறைமாவட்டத்தில் புனித ஜார்ஜியாருக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரே ஆலயமுமாகிய தளவாய்புரம் புனித ஜார்ஜியார் ஆலய வரலாற்றைக் காண்போம்....

🛡குருசடி புனித அந்தோனியார் ஆலயத்தின் ஒரு பகுதியாக விளங்கிய அழகிய ஊர் தளவாய்புரம்.

💗ஆத்தாபாட்டி என அன்புடன் அழைக்கப்பட்ட தெரசம்மாள் அம்மையார் (1898-1983) தளவாய்புரத்தில்உள்ள சிறுவர்கள், பெரியோர்களை தினமும் சந்தித்து இயேசுவின் போதனைகளை எடுத்துக்கூறி ஆன்மீகப் பணியாற்றியதன் காரணமாக இப்பகுதியில் கிறிஸ்தவம் உயிரோட்டமாக விளங்கியது.

🔴தளவாய்புரத்தில் நிலம் வாங்கப்பட்டு, அதில் புனித ஜார்ஜியார் பெயர் தாங்கிய ஓட்டுக்கூரை செபக்கூடம் 23.11.1956 -ல் கட்டப்பட்டது. இதில் காலை செபமும் மாலையில் ஜெபமாலையும் நடைபெற்று வந்தது.

🌸1966 -ம் ஆண்டு மறைக்கல்வி வகுப்புகள் தளவாய்புரத்தில் துவக்கப் பட்டது.

✝️சுற்றிலும் உள்ள ஆலயங்களில் திருப்பலி நிறைவேற்றப்பட்டு வந்தது போல, தளவாய்புரம் ஆலயத்திலும் திருப்பலி வேண்டும் என்று மக்கள் வேண்டி கேட்டுக்கொண்டே இருந்ததால் அப்போதைய குருசடி பங்குத்தந்தை அருள்பணி. சூசைமரியான் அவர்களின் ஒத்துழைப்புடன், ஜெபக்கூடம் ஆலயமாக மாற்றப்பட்டு, முன்னாள் குருசடி பங்குத்தந்தையும் வேலூர் மறைமாவட்ட ஆயருமான மேதகு அந்தோணிமுத்து ஆண்டகை அவர்களால் 10.08.1971 அன்று ஜெபக்கூடம் புனிதப்படுத்தப்பட்டு,
ஆயரது தலைமையில் முதல் திருப்பலி நிறைவேற்றப் பட்டது. தொடர்ந்து குருசடி பங்கின் கிளைப் பங்காக செயல்பட்டு வந்தது.

🌺தற்போது ஆலயம் அமைந்துள்ள இடமானது, 1987 ஆம் ஆண்டில் 20 சென்ட் மற்றும் 1989 ஆம் ஆண்டு 20 சென்ட் நிலமும் குருசடி பங்கின் சொத்துக்களை விற்ற பணத்திலிருந்து மறைமாவட்ட ஆயரின் ஆணைப்படி அப்போதைய பங்குத்தந்தை அருள்பணி. பெஞ்சமின் அடிகளாரின் பணிக்காலத்தில் ஊர் நிர்வாகத்தினர் முயற்சியால் வாங்கப்பட்டதாகும்.

💎1989 ஆம் ஆண்டு மேலராமன்புதூர் பரிசுத்த திருக்குடும்ப திருத்தலம் தனிப்பங்காக உயர்த்தப்பட்ட போது, தளவாய்புரம் அதன் கிளைப் பங்காக ஆனது. அருள்பணி. S. அருளப்பன் அவர்கள் முதல் பங்குத்தந்தையாக பொறுப்பேற்றார்.

மக்கள் அனைவரும் திருப்பலியில் இணைந்து பங்கேற்க போதிய இடவசதி இல்லாததால், புதிய ஆலயம் கட்ட திட்டமிடப்பட்டு, பங்குத்தந்தை அருள்பணி. மரிய ஜேம்ஸ் அவர்களின் பணிக்காலத்தில், 17.05.1992 அன்று மேதகு ஆயர் லியோன் அ. தர்மராஜ் அவர்களால் அடிக்கல் நாட்டப் பட்டது. மக்களின் முழு ஒத்துழைப்புடன், ஆலயம் கட்டப்பட்டு 29.12.1995 அன்று மேதகு ஆயர் லியோன் அ. தர்மராஜ் அவர்களால் அர்ச்சித்து புனிதப் படுத்தப் பட்டது.

🌷1996-98 காலகட்டத்தில் ஆலயத்தின் முன்புறம் அழகிய கான்கிரீட் கொடிமரமும், ஆலய வளாகத்தில் கலையரங்கமும் கட்டப்பட்டது.

💧1998 ஆம் ஆண்டில் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டது.

🌈09.12.2009 அன்று மேதகு ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் அவர்களால் புதிய குருசடி அர்ச்சிக்கப் பட்டது. மேலும் இதேநாளில் பங்குத்தந்தை அருள்பணி S. அருளப்பன் அவர்கள் முன்னிலையில் திருமண மண்டபம் கட்ட அடிக்கல் நாட்டப் பட்டது.

⚖️நியாயவிலை கட்டிடம் கட்டப்பட்டு 05.04.2015 ல் திறக்கப் பட்டது.

✳️03.04.2017 அன்று பங்குத்தந்தை இல்லத்திற்கு அடிக்கல் போடப்பட்டு, 45 நாட்களில் கட்டி முடிக்கப்பட்டது.

🔵பங்குத்தந்தை அருள்பணி. A. S. சகாய ஆனந்த் அவர்களின் முயற்சி மற்றும் தளவை மக்களின் விடாமுயற்சியாலும் 20.05.2017 அன்று தளவாய்புரம் தனிப்பங்காக உயர்த்தப் பட்டது. முதல் பங்குத்தந்தையாக அருள்பணி. ஜோசப் செயில் சிங் அவர்கள் பணிப் பொறுப்பேற்றார்.

🌈11.05.2018 அன்று வெண்கலத்தால் ஆன புதிய கொடிமரமும், புனரமைக்கப்பட்ட புனித சவேரியார் குருசடியும், புதிய வாசக பீடமும் மேதகு ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் அவர்களால் அர்ச்சிக்கப் பட்டது.

☂️ஆலய அரங்கத்தின் முன்னால் நிழற்கூடம் (பெரிய ஷெட்) 16.05.2019 ல் அமைக்கப் பட்டது.

🌟புனித ஜார்ஜியார் ஆலய வெள்ளிவிழா நினைவாக, ஆலயம் மெருகூட்டப்பட்டு 2020 ம் ஆண்டு டிசம்பர் 28 மற்றும் 29 ம் தேதிகளில் வெள்ளிவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

பங்கில் உள்ள குருசடிகள் :
🍓புனித சவேரியார் குருசடி 
🍎புனித ஜார்ஜியார் குருசடி.

பங்கின் பங்கேற்பு அமைப்புகள் :
🍇1. அன்பிய ஒருங்கிணையம்
🍇2. பக்தசபைகளின் ஒருங்கிணையம்
🍇3. மறைக்கல்வி மன்றம் 
🍇4. திருவழிபாட்டுக் குழு
🍇5. கத்தோலிக்க சேவா சங்கம், ஆண்கள் 
🍇6. கத்தோலிக்க சேவா சங்கம், பெண்கள் 
🍇7. புனித வின்சென்ட் தே பவுல் சபை 
🍇8. கிறிஸ்தவ வாழ்வு சமூகம் 
🍇9. மரியாயின் சேனை (7 பிரசீடியங்கள்)
🍇10. கோல்பிங் இயக்கம் 
🍇11. கிறிஸ்தவ தொழிலாளர் இயக்கம் 
🍇12. பாலர் சபை 
🍇13. சிறார் இயக்கம் 
🍇14. இளம் கிறிஸ்தவ மாணவர் இயக்கம் 
🍇15. இளைஞர் இயக்கம் 
🍇16. கல்விக்குழு
🍇17. பெண்கள் கிராம முன்னேற்ற சங்கம் 
🍇18. பாடகற்குழு 
🍇19. பீடச்சிறார்கள் 
🍇20. நற்செய்தி பணிக்குழு.

👉தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் : பங்குத்தந்தை அருள்பணி. ஜோசப் செயில் சிங்.

Comments

Popular posts from this blog

மனசெல்லாம் மெல்ல மெல்ல மரியே உன் பேரைச் சொல்ல Manasellam mella mella maraiaye un Perai Solla

இறைவனிடம் பரிந்து பேசும் புனித அந்தோணியிரே -Iraivanidam Parinthu Pesum Punitha Anthoniyarey

இறை அன்னையை நோக்கிப் புனித பெர்நார்துவின் மன்றாட்டு