வானம் திறந்து வெண்புறா போல இறங்கி வர வேண்டும் || Vaanam Thiranthu Venpura Pola
வானம் திறந்து வெண்புறா போல இறங்கி வர வேண்டும்
தேவா வல்லமை தர வேண்டும் (2)
யோர்தான் நதிக்கரை அனுபவங்கள்
அப்படியே இன்று நடக்கணுமே (2)
மறுபடியும் நான் பிறக்க வேண்டும்
மறுரூபமாக மாற வேண்டும் (2) –யோர்தான்
வரங்கள் கனிகள் பொழியணுமே
வல்லமையோடு வாழணுமே (2) –யோர்தான்
பாவங்கள் காயங்கள் நீங்க வேண்டும்
பரிசுத்த வாழ்வு வாழ வேண்டும் (2) –யோர்தான்
அற்புதம் அதிசயம் நடக்கணுமே
சாட்சிய வாழ்வு வாழணுமே (2) –யோர்தான்
கண்ணீர் கவலைகள் மறைய வேண்டும்
காயங்கள் எல்லாம் குறைய வேண்டும் (2) –யோர்தான்
Comments