dhinam oru varam vaendum தினம் ஒரு வரம் வேண்டும்
தினம் ஒரு வரம் வேண்டும்
தீர்க்கமாய் தினம் வேண்டும்
தீங்கில்லா உளம் வேண்டும்
தீர்ப்பிடாத மனம் வேண்டும் இயேசுவே
கேட்கிறேன் தேடுகிறேன் தட்டுகிறேன் தெய்வமே
கடுகளவு விசுவாசம் தேவை என்று ஓடி வந்தேன்
கரையாத கல்மனமும் கரைந்திட காத்திருந்தேன்
இனி இறைவார்த்தை விதையாகி இறைவாழ்வு பயிராகி
குறைவில்லா நிறைவாழ்வு நிறைவாக தினம் பெறவே
கேட்கிறேன் தேடுகிறேன் தட்டுகிறேன் தெய்வமே
பறவைகள் பகிர்வது போல் மரங்கள் கனி தருவது போல்
மேகம் மழை பொழிவது போல் நிலவு ஒளி தருவது போல்
இனி இரக்கத்தால் இறைமகனாய் நீதியால் பண்பாளராய்
உண்மையாய் வாழ்ந்திடவே உணர்ந்து உயிர் வாழ்ந்திடவே
கேட்கிறேன் தேடுகிறேன் தட்டுகிறேன் தெய்வமே
Comments