புனித சூசையப்பர் ஆலயம், களிமார்

ஆலயம் அறிவோம் 

 "புனித சூசையப்பர் ஆலயம், களிமார்" குறித்த தகவல்களை பதிவு செய்கின்றோம். 
✝️🎉✝️🎉✝️🎉✝️🎉✝️🎉✝️🎉✝️🎉✝️

🌺பெயர் : புனித சூசையப்பர் ஆலயம் 
🌺இடம் : களிமார், குளச்சல்

🍇மாவட்டம் : கன்னியாகுமரி 
🍇 மாவட்டம் : கோட்டார் 


🍇மறை வட்டம் : குளச்சல்

🌳நிலை : பங்குத்தளம் 
🍀கிளைப்பங்கு : புனித செபஸ்தியார் ஆலயம், நெசவாளர் வீதி, குளச்சல்.

💐பங்குத்தந்தை : அருட்பணி நித்திய சகாயம்

🌹குடும்பங்கள் : 163
🌹அன்பியங்கள் : 8

✝️ஞாயிறு திருப்பலி : காலை 08.00 மணிக்கு 
✝️வார நாட்களில் திருப்பலி : காலை 06.30 மணி

✝️புதன் மாலை 06.00 மணிக்கு புனித சூசையப்பர் நவநாள் திருப்பலி.

👉திருவிழா : மே 01 -ம் தேதியை உள்ளடக்கிய பத்து நாட்கள்.

✝️மண்ணின் மைந்தர்கள் :

💐அருட்பணி ஜினோ மேத்யூ 
💐அருட்பணி ஆல்பர்ட்

💐அருட்சகோதரி மரிய தங்கம் 
💐அருட்சகோதரி ஆசீர் 
💐அருட்சகோதரி ஜான்ஸி சேவியர்.

👉ஆலய இணையத்தளம் : 
http://www.kalimarstjoseph.com/

👉Location map : https://maps.app.goo.gl/1zJ6hEgKPvSXQyc6A

👉வழித்தடம் : கருங்கல் - குளச்சல் 
மார்த்தாண்டம் - குளச்சல் 
நாகர்கோவில் - குளச்சல்.

🎯குளச்சல் பேருந்து நிலையத்தில் இருந்து கருங்கல் செல்லும் சாலையில் சுமார் 200 மீட்டர் தூரத்தில் இவ்வாலயம் அமைந்துள்ளது.

வரலாறு :
**********
🌺16 ஆம் நூற்றாண்டில் புனித சவேரியாரின் மறைப்பரப்பால் குமரி மாவட்டத்தில் பல பகுதிகளிலும் மக்கள் கிறிஸ்தவம் தழுவினர். களிமார் பகுதியில் 210 ஆண்டுகளுக்கு முன்பு, ஜெப மையம் அமைக்க மக்கள் விரும்பினர்.

திரு செல்வமணி என்பவரால் இப்பகுதியில் அரை வட்ட வடிவிலான குருசடியும் பின்னர் சாவடியும் அமைக்கப் பட்டது.

✝️இந்த குருசடியின் பின்புறம் வசித்திருந்த திரு சத்தியநாதன் என்பவர் தாய்ப் பங்கான ஆலஞ்சி தூய சவேரியார் ஆலயத்திற்கு நடந்து சென்று திருப்பலியில் பங்கேற்று, நற்கருணை எழுந்தேற்றத்தின் போது, தாம் கேயோடு கொண்டு செல்லும் துவாலையை (Towel) இரு கைகளிலும் விரித்தபடியே ஏந்தி நின்று ஆசிர்வாதத்தை பெற்று, அத்துவாலையோடு களிமார் விரைவார். களிமாரில் மக்கள் திரளாக குருசடியில் இவரது வருகைக்காக ஆவலுடன் காத்திருக்க, துவாலையை விரித்து இறைவனின் ஆசீர்வாதத்தை அனைவருக்கும் பகிர்வார்.

🍇இவ்வாறு இப்பகுதியில் இறைவனின் மீது நம்பிக்கையும், விசுவாசமும் வளர, இடநெருக்கடி ஏற்பட புதிய ஆலயம் கட்ட 20-07-1938 அன்று பங்குத்தந்தை அருட்பணி தனிஸ்லாஸ் அவர்கள் பெயருக்கு இப்பகுதியை சேர்ந்த குடும்பங்களால் 50 சென்ட் நிலம் இலவசமாகக் கொடுக்கப் பட்டது.

💐சுமார் 1942 ம் ஆண்டு வாக்கில் ஆலயத்தின் பின்புறமாக வசித்த குடும்பத்தினருக்கு அற்புதமான காரியம் நடக்க, புனித சூசையப்பர் சுரூபம் ஆலயத்திற்கு நேர்ச்சையாக கொடுத்தனர். எளிய சூசையப்பர் என்று மக்களால் அன்போடு அழைக்கப்பட புனிதரின் வல்லமையால் பல்வேறு புதுமைகள் நடந்ததால் ஆலயத்தில் இடநெருக்கடி ஏற்பட, சுமார் 30 அடி நீளமுள்ள ஆலயத்தை கட்டனர். மாதத்திற்கு ஒரு முறை திருப்பலி நிறைவேற்றப்பட்டு வந்தது. ஒவ்வொரு மாதமும் திருப்பலி யை மக்கள் திருவிழாவைப் போல சிறப்பாக மகிழ்ந்து கொண்டாடினர். நாள்தோறும் மக்கள் எண்ணிக்கை அதிகரிக்கவே ஆலயம் மீண்டும் ஓடுபோடப்பட்டு விரிவாக்கம் செய்யப்பட்டது.

🍀அருட்தந்தை அம்புறோஸ் அவர்கள் இம் மக்களின் மீது கொண்ட அன்பினால் சிலகாலம் களிமார்-ல் தங்கி நற்செய்தி பணியாற்றினார் என கூறப் படுகிறது .

🌳இவ்வாலயமானது முதலில் ஆலஞ்சி பங்கின் கிளைப் பங்காகவும், பின்னர் குறும்பனை பங்கின் கிளையாகவும், 1950 -ம் ஆண்டு குளச்சல் பங்கின் கிளையாகவும் ஆனது.

🌺குளச்சல் பங்குத்தந்தையர்களின் மேற்பார்வையில் களிமார் ஆலயம் நல்ல வளர்ச்சி கண்டது. 1952 ல் சபைகள் மற்றும் மறைக்கல்வி துவக்கப் பட்டது.

✝️அன்றைய காலகட்டத்தில் "என் பலி" என்னும் திருவழிப்பாட்டு நூல் பயன்படுத்தப்பட்டு, இலத்தீன் முறைப்படி திருப்பலி நிறைவேற்றப்பட்டு வந்தது.

🔥மார்ச் மாதம் புனித சூசையப்பர் வணக்க மாதம்

🔥மே மாதம் மாதா வணக்க மாதம்.

🔥ஜூலை மாதம் திருஇருதய வணக்க மாதம்

🔥அக்டோபர் ஜெபமாலை வணக்க மாதம் 
என்று கிளைப் பங்காக இருந்த போதும் களிமார் ஆலயம் பல்வேறு ஆன்மீக நிலைகளில் வளர்ச்சி பெற்று சிறந்து விளங்கியது.

🌸1953 ம் ஆண்டு அருட்பணி ஜேக்கப் லோப்பஸ் அவர்களால் முதல் வெள்ளி மற்றும் சனி, ஞாயிறு தினங்களில் திருப்பலி நிறைவேற்றப்பட்டு வந்தது.

📚1962 ம் ஆண்டு புனித அன்னாள் சபை அருட்சகோதரிகள் இல்லம் மற்றும் தமிழ், ஆங்கில வழி பள்ளிக்கூடம் துவக்கப் பட்டது.

🍎அருட்பணி ஜோசபாத் மரியா அவர்கள் பணிக்காலத்தில் 05-05-1968 அன்று மறை மாவட்ட முதன்மைப் பணியாளர் அருட்பணி வில்வராயர் அவர்களால் புதிய ஆலயத்திற்கு அடிக்கல் போடப்பட்டது.

1970 ல் அருட்பணி ஹிலாரி பணிக்காலத்தில் பங்கு மக்களின் ஒத்துழைப்புடன் புதிய ஆலய கட்டுமானப் பணிகள் தொடர்ந்து நடைபெற்றது.

🌺1974 ம் ஆண்டு அருட்பணி ஜேசுதாஸ் பணிக்காலத்தில் ஆலய கட்டுமானப் பணிகள் தொடரப் பட்டது. தினசரி திருப்பலி தொடங்கப் பட்டது.

🌺அருட்பணி தொபியாஸ் பணிக்காலத்தில் ஆலய கட்டுமானப் பணிகள் நிறைவு பெற்று மேதகு ஆயர் ஆரோக்கியசாமி அவர்களால் 22-11-1982 அன்று அர்ச்சிக்கப் பட்டது.

🌸1984 ம் ஆண்டு அருட்பணி மரிய ஜேம்ஸ் பணிக்காலத்தில் பங்குப் பேரவை துவக்கப் பட்டது. அருட்பணி செர்வாசியுஸ், அருட்சகோதரி கேன்டிடா ஆகியோரின் முயற்சியில் புனித வார நிகழ்வுகள் இங்கு நடத்தப்பட்டது.

🌸1990 ம் ஆண்டு அருட்பணி செல்வராஜ் அவர்களால் புனித வளனார் கலையரங்கம் கட்டப்பட்டது.

🌹தொடரந்து அருட்பணி கஸ்பார் அவர்கள் பணியாற்றினார். அவரைத் தொடர்ந்து அருட்பணி டயனோசியஸ் காலத்தில் களிமார் தனிப்பங்காக ஆவதற்கான முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டது.

💐15-05-1997 அன்று களிமார் தனிப்பங்காக உயர்த்தப் பட்டது. நெசவாளர் வீதி புனித செபஸ்தியார் ஆலயமும், இரும்பிலி புனித அந்தோணியார் ஆலயத்தையும் கிளைப் பங்குகளாகவும்; அருட்பணி அருள் தேவதாசன் அவர்கள் முதல் பங்குத்தந்தையாகவும் பொறுப்பேற்று சிறப்பாக வழி நடத்தினார்கள். சில ஆண்டுகளுக்கு பின்னர் இரும்பிலி தனிப்பங்கானது. தேவைப் பட்டவர்களுக்கு பல்வேறு நல உதவிகள் அருட்பணியாளரின் வழிகாட்டுதலில் நிறைவேற்றப் பட்டது. எட்டு அன்பியங்கள் துவக்கப் பட்டன. பழைய ஆலயம் இருந்த இடத்தில் பங்குத்தந்தை இல்லம் கட்டப்பட்டது. வணிக வளாகம் கட்ட அடிக்கல் போடப் பட்டது. பங்குப் பேரவை அலுவலகம் கட்டப் பட்டது.

🍇2002 ம் ஆண்டு அருட்பணி சூசை மரியான் அவர்கள் பங்குத்தந்தையாக பொறுப்பேற்றார்.

🌺இரட்சகர் சபையை சேர்ந்த அருட்பணி சந்தியாகு அவர்கள் இணை பங்குத்தந்தையாகவும், சிறிது காலத்திற்கு பிறகு பங்குத்தந்தையாகவும் பொறுப்பேற்று சிறப்பாக வழி நடத்தினார்கள். ஆலய பீடம் புதுப்பிக்கப் பட்டது.

🏵மேலும் இரட்சகர் சபை மணவாளக்குறிச்சிஇல்லத்தை சேர்ந்த அருட்பணியாளர்கள் தாமஸ் கொச்சேரி, எட்கர் மொரேரோ, கிளமென்ட் ஜோசப், ஜேம்ஸ் சக்கலக்கல், ஜேம்ஸ் ஆகியோர் இவ்வாலயத்தில் பணி புரிந்தனர்.

🌺அருட்பணி கிளமென்ட் அவர்களின் முயற்சியால் ஆர்ச் ஏஞ்சல் வணிக வளாகத்தில் பாக்கு மட்டையில் தட்டு செய்யும் தொழில் துவக்கப் பட்டது. புதன் கிழமை நவநாள் துவக்கப்பட்டது.

🏵தொடர்ந்து அருட்பணி செல்லையன் பணிக்காலத்தில் மாலையில் ஞாயிறு நற்கருணை ஆராதனை துவக்கப் பட்டது. இவரது பணிக்காலத்தில் தற்போதைய குருசடி கட்டப்பட்டு கிறிஸ்து அரசர் சுரூபம் அங்கு மாற்றி வைக்கப்பட்டது.

🎄2015 ம் ஆண்டு அருட்பணி மரிய கிளாட்ஸ்டன் பணிக்காலத்தில் வருடத்திற்கு ஒரு ஏழை குடும்பத்திற்கு கிறிஸ்துமஸ் குடில் என்ற பெயரில் வீடு கட்டி கொடுக்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. இவ்வகையில் இந்த வருடம் (2019) 5வது வீடு கட்டி கொடுக்கப் பட்டுள்ளது தனிச்சிறப்பு.

🌷அருட்பணி கிளாட்ஸ்டன் பணிக்காலத்தில் 15-01-2017 அன்று புதிய ஆலயத்திற்கு அடிக்கல் போடப் பட்டது.

🌷2018 -ம் ஆண்டு அருட்பணி நித்திய சகாயம் அவர்கள் பங்கின் பொறுப்பேற்று, பங்கு மக்களின் அயராத தன்னலமற்ற ஒத்துழைப்புடன் ஆலயப் பணிகளை நிறைவு செய்து, 29-12-2019 அன்று கோட்டார் மறை மாவட்ட ஆயர் மேதகு நசரேன் சூசை அவர்களால் அர்ச்சிக்கப் பட்டது.

🙏தற்போதைய புதிய அழகிய ஆலயமானது, இப் பங்கின் ஐந்தாவது ஆலயம் என்பது குறிப்பிடத் தக்கது.

🏵பதிவு : புனித காணிக்கை மாதா ஆலயம் மாதாபுரம் 
குமரி மாவட்டம் 
குழித்துறை மறை மாவட்டம்.

Comments

Popular posts from this blog

மனசெல்லாம் மெல்ல மெல்ல மரியே உன் பேரைச் சொல்ல Manasellam mella mella maraiaye un Perai Solla

இறைவனிடம் பரிந்து பேசும் புனித அந்தோணியிரே -Iraivanidam Parinthu Pesum Punitha Anthoniyarey

வெற்றி தரும் ஜெபமாலை அன்னை கற்று தந்த ஜெபமாலை பாடல் வரிகள் Vetri Tharum Jebamalai Lyrics