தூய லூர்து அன்னை திருத்தலம், வில்லியனூர்
"தூய லூர்து அன்னை திருத்தலம், வில்லியனூர்" குறித்த தகவல்களை பதிவு செய்கின்றோம்.
🌲🌺🌲🌺🌲🌺🌲🌺🌲🌺🌲🌺🌲🌺🌲🌺
🍇பெயர் : தூய லூர்து அன்னை திருத்தலம்
🍇இடம் : வில்லியனூர், பாண்டிச்சேரி
🌷மறை மாவட்டம் : புதுவை - கடலூர் உயர் மறை மாவட்டம்
🌷மறை வட்டம் : புதுவை.
🌳நிலை : திருத்தலம்
🍀கிளைப்பங்குகள் :
🌹1. அருட்சகோதரிகள் இல்லம், அரியூர்
🌹2. திருஇருதய ஆண்டவர் ஆலயம், துத்திப்பட்டு
🌹3. தூய ஜெயராக்கினி அன்னை ஆலயம், ஓதியம்பட்டு.
💐பங்குத்தந்தை : அருட்பணி S. பிச்சைமுத்து
💐உதவி பங்குத்தந்தை : அருட்பணி ஜான்பால்
👉திருத்தல தொடர்பு எண் : 0413 2666363
👉Website : www.villianursh
🌲குடும்பங்கள் : 350+
🌲அன்பியங்கள் : 10
🔥ஞாயிறு திருப்பலி : காலை 06.00 மணி, காலை 07.30 மணி மாலை 05.30 மணி
🔥வார நாட்களில் திருப்பலி : காலை 06.00 மணிக்கு
🔥சனிக்கிழமை திருப்பலி : காலை 06.00 மணி, காலை 11.30 மணி, மாலை 06.00 மணி.
🔥மாதத்தின் முதல் சனிக்கிழமை : காலை 05.30 மணி திருப்பலி, காலை 06.30 மணிக்கு சிறிய தேர்பவனி.
காலை 06.45 மணி, 11.30 மணி, மாலை 05.30 மணிக்கும் திருப்பலி. இரவு 07.30 மணிக்கு பெரிய தேர்பவனி, இரவு 09.00 மணிக்கு நற்கருணை ஆசீர், அன்பு விருந்து.
🔥மூன்றாவது சனிக்கிழமை : காலை 06.00 மணிக்கு திருப்பலி, குணமளிக்கும் வழிபாடு, நற்கருணை ஆசீர்.
🔥ஒவ்வொரு மாதமும் மூன்றாம் ஞாயிற்றுக்கிழமை
🙏மண்ணின் மைந்தர்கள் :
💐1. அருட்பணி அருள் தம்பு டோமினிக்
💐2. அருட்பணி சாந்து சிரில்
💐3. அருட்பணி ஜான் சகாய ரவி SJ
💐4. அருட்பணி பிரவின் குமார்.
💐1. அருட்சகோதரி மத்தியாஸ் மேரி FSGA
💐2. அருட்சகோதரி ஞானமரியாயி
🎉திருவிழா : ஈஸ்டர் பெருவிழாவைத் தொடர்ந்து வருகிற சனிக்கிழமை ஆரம்பித்து ஒன்பது (நவ) நாட்கள்.
👉வழித்தடம் : புதுவை - வில்லியனூர்
முருங்கம்பாக்கம
விழுப்புரம் - வில்லியனூர்.
திருத்தல வரலாறு :
***************
🌳பல்வேறு பழ மரங்களும், தோப்புகளும் நிறைந்ததும், பரந்த நெல் வயல்களும், அவற்றின் பாசனத்திற்கு பயன்படும் பல ஏரிகளும் சூழ்ந்த ஊராக 18 ம் நூற்றாண்டில் அழகுடன் விளங்கியது வில்லியனூர். சோழர்கள் காலத்தில் கட்டப்பட்ட கோவில்களும் இங்குள்ளன. மேலும் இராட்சத சக்கரங்களைக் கொண்ட தேர்களும், மடங்களும் கொண்ட பழம் பெருமை வாய்ந்த ஊர்.
🍇ஆகவே பாரிஸ் அந்நிய வேத போதக குருக்களை இவ்வூர் மிகவும் கவர்ந்தது. புதுச்சேரி மிஷனின் முதல் ஆயர் மேதகு பிரிகோ அவர்கள் 1778 ஆம் ஆண்டு உழவர்கரை யில் சுதேசி குருக்களுக்கான முதல் குருமடத்தை நிறுவினார். இது 1792 ஆம் ஆண்டு பேராலயத்திற்கு அருகாமையில் கொண்டு வரப்பட்டது. அப்போதைய ஆயர் மேதகு ஷாம் பெனுவா அவர்கள், இந்த குருமடத்தை வில்லியனூரில் அமைக்க விரும்பினார். அதற்கான நிலமும் தேடப் பட்டது. ஆனால் அப்போதைய சூழ்நிலையில் நிலத்தை வாங்க இயலவில்லை.
🌷எனினும் வில்லியனூரில் வாழ்ந்த சிறு அளவிலான கிறிஸ்தவ சமூகத்தினர் இங்கு ஒரு சிற்றாலயத்தை எழுப்ப திட்டமிட்டு, இதற்கான இடத்தைத் தேடினர். சில காரணங்களால் இத் திட்டம் நிறைவேற்றப் படாமல் நீண்டு கொண்டே போனது..!
🏵ஆலயம் கட்ட முதல் பொருளுதவி:
பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த லெப்பின் அவர்கள் புதுவையில் மருத்துவராக பணியாற்றிக் கொண்டிருந்தார்.
அன்னையின் அருளால் நோய்வாய்ப்பட்ட மருத்துவரின் மகள் அற்புத சுகமடைந்தார். ஆகவே நன்றியறிதலாக புதுவை மிஷன் குருவிடம் ஆயிரம் பிராங்குகளை (பிரெஞ்சு நாட்டு பணத்திற்கு பிராங்க் என்று பெயர்) கொடுத்தார். இதுவே வில்லியனூர் ஆலயம் கட்ட முதல் காணிக்கையாக அமைந்தது.
🏵ஆலயம் கட்டப்பட்டது :
வில்லியனூரில் ஆலயம் கட்டாமல் அதன் எல்லைக்கு அப்பாற்பட்ட கணுவாபேட்டை யில் ஆலயம் கட்ட தீர்மானிக்கப்பட
🍇பதிவு செய்யப்பட்ட நிலத்தில் ஆலயம் எழுப்ப முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட
💐புதுமையான லூர்து மாதா சுரூபம் :
புதுவையைச் சார்ந்த ஒரு புண்ணியவதி நிதியுதவி செய்திட, அருட்தந்தை தார்பெஸ் அவர்கள் தமது உறவினரான புனித பெர்னதெத் ன் உதவியை நாட, அவர் லூர்து நகர் கெபியில் நிர்மாணிக்கப்பட
🌺ஒரு ஆண்டு கடல் பயணம் செய்து மாதா சுரூபமானது புதுவை வந்தது. இந்த சுரூபத்தைக் கொண்டு வரும் வேளையில் தரையில் இரண்டு இடங்களில் அதனை வைத்திருந்த பெட்டியுடன் விழுந்தது. மூன்றாவதாக புதுவை மிஷன் வாசற்படியருகே மீண்டும் விழவே..! அனைவரும் 6 அடி உயரம் கொண்ட சுரூபம் சுக்கு நூறாக உடைந்து போயிருக்கும்..!
🙏தேவ அன்னையின் இச்சுரூபம் சாதாரணமானதல்ல..
🌺வில்லியனூருக்கு
மூன்று நாட்கள் புதுவை பெரிய கோவிலில் (தூய ஜென்மராக்கினி மாதா கதீட்ரல்) வைக்கப்பட்ட சுரூபமானது, வில்லியனூருக்கு
🌸வில்லியனூர் செல்ல பெரிய சாலை ஒன்று உண்டு. ஆனால் இப்பகுதியில் கடைசி நேரத்தில் ஓர் கலகம் ஏற்படவே, இப்பகுதி வழியே வரவேண்டிய நிலையில், தேரில் இருந்த லூர்து அன்னையின் சுரூபம் தானாகவே திரும்பி வேறு வழியைக் காட்டியது. இவ்வழியானது மக்கள் அதிகம் நடமாட்டமில்லாத குறுக்கு வழி ஆகும். இவ்வாறாக நள்ளிரவு 12.00 மணிக்கு சுரூபம் வில்லியனூர் வந்தடைந்தது. அருட்தந்தை குய்யோன் தாவீதுநாதர் அவர்கள் ஆலய நடுப்பீடத்தில் அன்னையின் சுரூபத்தை வைத்து அர்ச்சித்தார்.
🌸அன்று விடியற்காலை 02.00 மணி முதல் காலை 07.00 மணி வரை திருப்பலிகள் தொடர்ந்து நடந்த வண்ணமாக இருந்தது. 08-04-1877 அன்று காலை 07.00 மணிக்கு பேராயர் மேதகு லவுணான் ஆண்டகை புதிய ஆலயத்தை அர்ச்சித்தார். அன்றிலிருந்து வில்லியனூர் புகழ் பெற்ற ஒரு திருத்தலமாக மாறியது.
👉திருயாத்திரை :
ஈஸ்டர் பெருவிழாவை அடுத்து வரும் சனிக்கிழமை கொடியேற்றப்பட்ட
🌹சாத்திப்பட்டு, பணிக்கன்குப்பம்
🌹மேலும் தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும், கேரளா, கர்நாடகா, ஆந்திரா என பல மாநில மக்களும் திருவிழாவிற்கு வருகை தருவார்கள்.
💐மாதா குளம் :
லூர்து மாதா காட்சியளித்த போது நீரூற்றை உருவாக்கியதன் அடையாளமாக ஆலயம் கட்டும் போதே, மண் கரையாலான குளம் அமைக்கப்பட்டது.
🏵புனித நீர் கலக்கும் திருவிழா :
🌺இவ்விழா மாதா குளத்து விழா என்ற பெயரில் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம் முதல் சனிக்கிழமை நடைபெறும். அன்று மாலை வில்லியனூரில் ஏதேனும் ஆயர் தலைமையில் திருப்பலி நிறைவேற்றப்படும
திருப்பலிக்குப்
🙏அன்னையின் புதுமைகள் :
பிற சமயத்தை சார்ந்த சாமி என்பவர் அயல்நாட்டில் வேலை நிமித்தமாக கடலில் படகிலேறி பயணம் செய்த போது, படகு உடைந்து, அவருடன் பயணம் செய்த அனைவரும் தண்ணீரில் மூழ்க, சாமி தண்ணீரில் தத்தளித்தபடி வில்லியனூர் அன்னையிடம் தம்மை காப்பாற்றும்படி
🌳1905 ம் ஆண்டு நாவல் மரத்திலிருந்து விழுந்து, வாயில் நுரை தள்ள அசைவற்று கிடந்த 10 வயது சிறுவன் பல்வேறு சிகிச்சைகள் கொடுத்தும் குணப்படுத்த முடியாமல் கையும் காலும் செயலற்று போன நிலையில், அவனை லூர்து அன்னையிடம் கொண்டு வந்து அவனது தாய் முழந்தாளிட்டு கண்ணீருடன் ஜெபிக்க, அன்னையின் அருளால் சிறுவன் மூன்று நாட்களில் பூரண சுகமடைந்தான்.
🌹1928 ல் கண்ணில் பூப்பட்டு பார்வை குறைவடைந்தவர் அன்னையிடம் வேண்டி, முழு பார்வையும் பெற்றார்.
🌸தீராத நோயினால் அவதிப்பட்ட அருட்தத்தையவர்க
🏵1928 ம் ஆண்டில் மனநலம் குன்றிய பெண் அன்னையின் அருளால் நலன் பெற்றார்.
🍎இவ்வாறு எண்ணற்ற அற்புதங்கள் நாள்தோறும் அன்னையின் திருத்தலத்தில் நடந்து வருகிறது.
🔥ஒவ்வொரு மூன்றாம் சனிக்கிழமையும் அன்னையின் அற்புத குளத்தைச் சுற்றி நோயாளிகள் கையில் மெழுகுவர்த்தி ஏந்தி நிற்க, குணமளிக்கும் இயேசுவிடம் அருட்பணியாளர் செபித்துக் கொண்டிருக்கும் போது, மற்றொரு அருட்பணியாளர் ஒவ்வொரு நோயாளியையும் கதிர்பேழையை வைத்து ஆசீர்வதிக்கிறார
👉பாதயாத்திரை :
🌷1977 ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் மாபெரும் சூறாவளி புதுவையை தாக்க இருக்கிறது என எச்சரிக்கை கொடுக்கப்பட, புதுவையின் மக்கள் அனைவரும் கலங்கினர். அப்போதைய பேராயர் மேதகு வெண்மணி செல்வநாதர் அவர்கள் புதுவை நகர மக்களைக் காக்க மாதாவிடம் ஜெபிக்க ஓர் அழைப்பை கொடுத்தார். புதுவை சூறாவளியிலிருந்
🌺இந்த பாதயாத்திரை அடுத்த ஆண்டிலிருந்து பரிகார யாத்திரையாக இன்றளவும் நடந்து வருகிறது.
🌺புனித பெர்னதெத் இறந்து 16-04-1979 அன்று நூறு ஆண்டுகள் நிறைவடைகின்றது.
🌳ஆலய கொடிமரமும் இறையியல் விளக்கமும் :
🌲புதிய கொடிமரமானது 20-04-2014 அன்று வைக்கப்பட்டது.
🌳மண்ணிலே ஆழ கால் ஊன்றி, விண்ணை நோக்கி விருட்சமென உயர்ந்து நிற்கும் கொடிமரம் கடவுளை குறிக்கிறது. கொடியானது மனிதனின் ஆன்மாவைக் குறிக்கிறது. கொடி கயிறானது இறை அருளையும் உறவையும் குறிக்கிறது.
🌺கொடியானது அழகுற அலங்கரிக்கப்பட்
🌺அதுபோல கொடி என்ற மனிதனின் ஆன்மாவானது, கொடி கயிறு என்ற இறை உறவால் கட்டப்பட்டு, கொடிமரம் என்ற கடவுளோடு இணைக்கப்பட்டால்
🌹இவ்வாறு அன்னையின் அருளால் புகழ்பெற்று விளங்கிய திருத்தலத்திற்க
🌷பங்குப் பேரவை :
🌷மரியாயின் சேனை :
🌷இளையோர் இயக்கம் :
🌷புனித வின்சென்ட் தே பவுல் சபை :
🌷புனித பெர்னதெத் கிளைச் சபை :
🌷பீடச் சிறுவர்கள் இயக்கம் :
என பல்வேறு அமைப்புகளும் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன.
👉பங்கில் உள்ள துறவற சபைகள் :
🌹1. இமாகுலேட் சபை.
🌹2. மரியன்னையின் தூய இதய பிரான்சிஸ்கன் சகோதரிகள் சபை.
🌹3. இந்தோச்சா - அரியூர்
🌹4. தீப ஒளி இல்லம் - தொண்டமாநத்தம்
🌹5. புனித லூயிஸ் கொன்சாகோ இல்லம்.
🌹6. சாந்தா கிளாரா இல்லம்.
🌹7. திருக்குடும்ப சபை.
📚கல்வி நிறுவனங்கள் :
🖋1. இமாகுலேட் அரசு உதவி பெறும் பெண்கள் உயர்நிலைப் பள்ளி.
🖋2. இந்தோச்சா மேல்நிலைப்பள்ளி
🖋3. புனித லூர்து அன்னை ஆண்கள் உயர்நிலைப் பள்ளி.
🖋4. இமாகுலேட் தீப ஒளி பள்ளி, தொண்டமாநத்தம்.
🏵விடுதிகள் :
🌺தூய மரியன்னை ஆண்கள் உள்விடுதி
🌺தூய இதய மரியன்னை பெண்கள் உள்விடுதி.
🌺திருத்தலத்தின் சார்பில் மனநல குன்றியவர்கள் காப்பகம் ஒன்று ஊசுட்டேரியில் செயல்படுகிறது.
👉வில்லியனூர் திருத்தலம் உலகிலேயே லூர்து அன்னைக்கு இரண்டாவதாக கட்டப்பட்ட ஆலயம் என்பது குறிப்பிடத் தக்கது.
🙏இத்தகைய சிறப்பு வாய்ந்த புதுமைகள் நிறைந்த, பழமை வாய்ந்த வேண்டும் வரம் தருகிற வில்லியனூர் மாதா திருத்தலத்தை மகிழ்ச்சியான கிறிஸ்து பிறப்பு நாளில் பதிவு செய்ய அருள் புரிந்த இறைவனுக்கு நன்றி..!
Comments