என்னை சுமப்பதனால் இறைவா உன் சிறகுகள் முறிவதில்லை

அள்ளி அணைப்பதனால் இறைவா அன்பு குறைவதில்லை
ஆயிரம் மின்னல் இடித்திட்ட போதும் வானம் கிழிவதில்லை
ஆயிரம் மயில்கள் நடந்திட்ட போதும் நதிகள் அழுவதில்லை
கருவை சுமக்கும் தாய்க்கு என்றும் குழந்தை சுமையில்லை
கருவிழி சுமக்கும் இருவிழி அதற்கு இமைகள் சுமையில்லை
மதுவை சுமக்கும் மலர்களுக்கென்றும் பனித்துளி சுமையில்லை
வானை சுமக்கும் மேகத்துக்கென்றும் மழைத்துளி சுமையில்லை
அகழும் மனிதரை தாங்கும் பூமிக்கு முட்கள் சுமையில்லை
இகழும் மனிதரில் இறங்கும் மனதிற்கு சிலுவைகள் சுமையில்லை
உலகின் பாரம் சுமக்கும் தோள்களில் நானொரு சுமையில்லை
உயிரை ஈயுமுன் சிறகின் நிழலில் என் இதயம் சுமையில்லை

Comments