படைப்பு எல்லாம் உமக்கே சொந்தம் || Padaipu Yelam Umakey Sontham
படைப்பு எல்லாம் உமக்கே சொந்தம்
நானும் உந்தன் கைவண்ணம்
குயில்கள் பாடும் கிளிகள் பேசும்
என் வாழ்வு இசைக்கும் உன் ராகமே
இயற்கை உனது ஓவியம்
இணையில்லாத காவியம்
அகிலமென்னும் ஆலயம்
நானும் அதில் ஓர் ஆகமம்
உள்ளம் எந்தன் உள்ளம் அது
எந்நாளும் உன் இல்லமே
இதயம் என்னும் வீணையில்
அன்பை மீட்டும் வேளையில்
வசந்த ராகம் கேட்கவே
ஏழை என்னில் வாருமே
தந்தேன் என்னை தந்தேன் என்றும்
என் வாழ்வு உன்னோடு தான்
Comments