Theivam Unnaith Thedi - தெய்வம் உன்னைத் தேடி
தெய்வம் உன்னைத் தேடி! நெஞ்சில்! ராகம் கோடி!
நீயே என் வாழ்வின் தெய்வம்! நீயின்றி வேறேது சொந்தம்!
தாங்கும்! எந்தன் உள்ளம்! பொங்கும்! அன்பின் வெள்ளம்!
வானில் உலவும் நிலவும்! இங்கு தேய்ந்துப் போகலாம்!
தேனில் கலந்த மலரும்! இங்கு காய்ந்து வீழலாம்! (2)
உயரில் கலந்து உறவும்! இங்கு உடைந்து போகலாம்!
விழியில் விழுந்த நினைவும்! இங்கு வழிகள் மாறலாம்! (2)
காலம் தேயலாம் உன்! கருணை மாறுமோ!
வாசம் போகலாம் உன்! பாசம் தீருமோ! இயேசுவே!
தெய்வம் உன்னைத் தேடி! நெஞ்சில்! ராகம் கோடி!
சாய்ந்து கொள்ள தோள்கள் தினம் தந்த தெய்வமே!
சோர்ந்துப் போகும் கால்கள் பலம் தந்த செல்வமே! (2)
முள்ளில் விழுந்து அழுதேன்! நீ உறவில் தேடினாய்!
அள்ளி அன்னையாய் எடுத்தாய்! உன் சிறகில் மூடினாய்! (2)
நதிகள் காயலாம் உன்! நட்பு காயுமோ!
நண்பர் பிரியலாம் உன்! அன்பு மாறுமோ! இயேசுவே!
தெய்வம் உன்னைத் தேடி! நெஞ்சில்! ராகம் கோடி!
நீயே என் வாழ்வின் தெய்வம்! நீயின்றி வேறேது சொந்தம்!
தாங்கும்! எந்தன் உள்ளம்! பொங்கும்! அன்பின் வெள்ளம்!
Comments