ஆண்டவர் துணையிருப்பார் ஆபத்து அணுகாது|| Andavar Thunnai Irupar Aabathu Aanugathu

ஆண்டவர் துணையிருப்பார் ஆபத்து அணுகாது
மதில்போல் சூழ்ந்திருப்பார் துன்பங்கள் நெருங்காது
கலங்காதே மனமே கலங்காதே மனமே
அன்பான தேவன் அரவணைப்பார் கலங்காதே மனமே

உன்னைக் காப்பவர் அயர்வதில்லை
உன்கால் இடற விடுவதில்லை
உன்னைக் கைவிட்டுப் பிரிவதில்லை
உன்னோடு உயிராய் இணைந்திருப்பார் --2

பகலின் வெயிலோ இரவின் நிலவோ தீமை செய்யாது அஞ்சாதே
புயலும் மழையும் புவியைச் சூழ்ந்தால்
தீமை செய்யாது திகையாதே
கண்ணான தேவன் எந்நாளும் காப்பார்
கவலையோ கலக்கமோ இனி வேண்டாம் -ஆண்டவர் துணை

வானத்துப் பறவையை காக்கின்றவர்
வறுமையில் உன்னை விடுவாரோ
வயல்வெளி மலரை மகிழ்விப்பவர்
நோயினில் விடுதலை தருவாரே --2

உலகம் ஆயிரம் பேசினாலும் சோர்ந்து வீழ்ந்து போகாதே
தீங்கு செய்வோர் சூழ்ந்து கொண்டால் வாடி வதங்கி போகாதே
இஸ்ராயேல் இறைவன் மாறாத தேவன்
இன்றும் என்றும் உடனிருப்பார் -ஆண்டவர் துணை

Comments

Popular posts from this blog

மனசெல்லாம் மெல்ல மெல்ல மரியே உன் பேரைச் சொல்ல Manasellam mella mella maraiaye un Perai Solla

இறைவனிடம் பரிந்து பேசும் புனித அந்தோணியிரே -Iraivanidam Parinthu Pesum Punitha Anthoniyarey

இறை அன்னையை நோக்கிப் புனித பெர்நார்துவின் மன்றாட்டு