மறந்திடாதே நீ, மன்னவன் இயேசுவின்|| maranthedathe nee mannan yesuvin

மறந்திடாதே நீ, மன்னவன் இயேசுவின்
மாண்பினைக் கூற, மறந்திடாதே நீ
சரணங்கள்

1. பாலைவனமதில் வாழுகின்றார் – சிலர்
பட்டண வீதியில் அலைகின்றார்
பார் புகழும்படி நடக்கின்றார் – சிலர்
பகலிர வெதிலும் உழைக்கின்றார் – இவர்களை

2. வான மெட்டும் வண்ண மாளிகையில் – சிலர்
வானரம் வாழ்ந்திடும் கானகத்தில்
வற்றா நதிகளில் மீன் பிடிப்பார் – சிலர்
வயல் வெளிகளில் பயிரிடுகின்றார் – இவர்களை

3. பற்பல தேசத்தில் வாழுபவர் – பலர்
அற்புத அன்பினை அறியாரே
அத்தனை பேருமே அறிந்திடவே – தினம்
அறிவிக்க இயேசுன்னை அழைக்கின்றார் – இவர்களை

Comments

Popular posts from this blog

மனசெல்லாம் மெல்ல மெல்ல மரியே உன் பேரைச் சொல்ல Manasellam mella mella maraiaye un Perai Solla

இறைவனிடம் பரிந்து பேசும் புனித அந்தோணியிரே -Iraivanidam Parinthu Pesum Punitha Anthoniyarey

இறை அன்னையை நோக்கிப் புனித பெர்நார்துவின் மன்றாட்டு