என் இதய தெய்வமே என்னில் எழுந்து வா உன் உறவை எண்ணியே||Yen Idhaiya Devaimey Yenni Yelunthu va
என் இதய தெய்வமே என்னில் எழுந்து வா
உன் உறவை எண்ணியே
உள்ளம் ஏங்குதே உயிரே எழுந்து வா
1. அணைத்துக் காக்கும் தாயின் அன்பும்
ஒருநாள் அழியலாம்
அறவழியில் நடத்தும் தந்தை அன்பும் அழியலாம்
ஆனால் இயேசுவே உன் அன்பிற்கழிவுண்டோ
என் இனிய அன்பே எழுந்து வா
2. வஞ்சம் கூறும் நண்பர் கூட்டம் உலகில் பல உண்டு
தன்னலமே உருவெடுத்து உலவும் நட்புண்டு
ஆனால் இயேசுவே நல் நண்பன் நீரன்றோ
என் இனிய நண்பா எழுந்து வா
3. பொய்மை மலிந்து மெய்மை மெலியும்
நிலையைக் காண்கிறேன்
தீமை நிறைந்த உலகில் இன்று அழிந்து மடிகிறேன்
எந்தன் தெய்வமே உன் அன்பால் ஆள வா
என் உள்ளம் நிறைந்து வாழ வா
Comments