நம்பத் தக்கவர் நீர் ஒருவர் தானே உண்மையுள்ளவர் நீர் ஒருவர் தானே|| nambaththakavar neer oruvar

நம்பத் தக்கவர் நீர் ஒருவர் தானே
உண்மையுள்ளவர் நீர் ஒருவர் தானே - (2)
பொய் சொல்லிட மனிதன் அல்ல
மனம் மாறிட மனுபுத்திரன் அல்ல - (2)
செய்வதை தடுப்பவன் யாருமில்லை - நீர்

எல்ஷடாய் தெய்வமே சர்வ வல்லமையுள்ளவரே
யெகோவா தேவனே என்னை பெருகச் செய்பவரே

1) என் வாழ்க்கை பயணம் எல்லாம்
முன் செல்லும் மகிமையின் மேகமே
தள்ளாடி நான் நடக்கும்போது
என்னைத் தாங்கிடும் உம் கரம் நான் கண்டேனே
எல்லா ஏசேக்கு சித்னா முடிந்ததே
ரெகொபோத் தொடங்கினதே - எல்ஷடாய்

2) அற்பமான ஆரம்பத்தை
சம்பூரணமாய் மாற்றினீர்
நான் கண்ணீரோடு விதைத்ததெல்லாம்
கெம்பீரமாய் அறுக்க செய்தீர்
எந்தன் (என்) குறைவெல்லாம் நிறைவாக்கி
வறட்சி செழிப்பாக்கி வாழ்நாளெல்லாம் போஷித்தீர் - எல்ஷடாய்

Comments

Popular posts from this blog

மனசெல்லாம் மெல்ல மெல்ல மரியே உன் பேரைச் சொல்ல Manasellam mella mella maraiaye un Perai Solla

இறைவனிடம் பரிந்து பேசும் புனித அந்தோணியிரே -Iraivanidam Parinthu Pesum Punitha Anthoniyarey

இறை அன்னையை நோக்கிப் புனித பெர்நார்துவின் மன்றாட்டு