இரக்கம் நிறைந்த தெய்வமே இதயம் திறந்து அழைக்கின்றேன் ||Irakkan Niraintha Deivamey
இரக்கம் நிறைந்த தெய்வமே இதயம் திறந்து அழைக்கின்றேன்
உன்னைப் பாட வருகின்றேன் உன்னை அன்பு செய்கின்றேன் - 2
பொன்னும் பொருளும் எனக்கு இருந்தாலும்
பெயரும் புகழும் என்னைச் சூழ்ந்தாலும்
உதயம் தேடும் மலரைப் போலவே
உயிரின் உயிரே உன்னைத் தேடினேன்
நிலவில்லா வானம் போலவே நீயில்லா வாழ்வும் வாழ்வில்லை
நம்பிக்கையின் நாயகா நலன்களின் தேவா வா
வார்த்தை ஒன்று பேசுமே வளங்கள் எல்லாம் கூடுமே
தேடும் உலக செல்வம் நிறைந்தாலும்
பதவி பட்டங்கள் உயர்வைத் தந்தாலும்
அலைகள் ஓயாக் கடலைப் போலவே
அன்பே உனது அருளை வேண்டினேன்
தாயில்லாக் குழந்தை போலவே
தவிக்கின்றேன் ஏக்கம் போக்குமே
முழுமுதல் இறைவனே மூவொரு வேந்தனே
காலம் கடந்த தேவனே உன் கருணை ஒன்றே போதுமே
Comments