சின்ன சின்ன பூவே சிங்கார பூவே உன்னை அள்ளி அணைப்பேனோ Chinna Chinna poovey Chingara Poovey
சின்ன சின்ன பூவே சிங்கார பூவே
உன்னை அள்ளி அணைப்பேனோ - பாலகா
உன்னை அள்ளி அணைப்பேன் நான்(2)
கன்னி மரிகனியே கார்த்திகை விளக்கே
உன்னை எண்ணி புகழ்வேனோ - என்
உள்ளமெல்லாம் எண்ணி எண்ணி -மகிழ்வேனோ
சின்ன சின்ன பூவே சிங்கார பூவே
தொட்டியில் வாழ வந்த கட்டி கரும்பை
பட்டி தொட்டி எல்லாம் வீசுவது என்ன நியாயமோ(2)
பாலோடு தேன்வார்த்து பஞ்சணையில்
வைக்காததென்ன நியாயமோ
பாலகா நீயே பார்த்தருள்வாய்
கண் திறந்தென்மை காத்தருள்வாய்
சின்ன சின்ன பூவே சிங்கார பூவே
பஞ்சம் பசி பட்டினியில் வாடும் ஏழைகள்
கொஞ்சம் தஞ்சம் என வாழ்ந்திடவா நீ பிறந்ததோ(2)
மாடிவீடு கோடி தேடி வாழும் செல்வர் தம்மை
எல்லாம் பகிர்ந்து கொள்ளவே
பாலகா நீயே பார்த்தருள்வாய்
கண் திறந்தென்மை காத்தருள்வாய்
சின்ன சின்ன பூவே சிங்கார பூவே
சின்ன சின்ன பூவே சிங்கார பூவே
உன்னை அள்ளி அணைப்பேனோ - பாலகா
உன்னை அள்ளி அணைப்பேன் நான்(2)
கன்னி மரிகனியே கார்த்திகை விளக்கே
உன்னை எண்ணி புகழ்வேனோ - என்
உள்ளமெல்லாம் எண்ணி எண்ணி -மகிழ்வேனோ
சின்ன சின்ன பூவே சிங்கார பூவே
Comments