என் உள்ளம் கவியொன்று பாடும் உந்தன் அன்பொன்றே அது என்றும் நாடும்

என் உள்ளம் கவியொன்று பாடும் - உந்தன்
அன்பொன்றே அது என்றும் நாடும் - 2
இன்பங்கள் நதியான வெள்ளம்
இதயத்தை சூழ்ந்தோடிக் கொள்ளும்
ஆனந்த கவிபாடித் துள்ளும் - 2

உன்னோடு ஒன்றாகும் நேரம்
உலகங்கள் சிறிதாகிப் போகும் - 2
நான் என்பதெல்லாமே மாறும்
பிறர் சேவை உனதாக ஆகும்
எல்லாமே சமமாக எல்லோரும் நலமாய் - 2
அன்போன்றே ஆதாரமாகும்
விண் இன்று மண் மீது தோன்றும்

பிறர் காணும் இன்பங்கள் எங்கள்
இதயத்தை இசை மீட்டிச் செல்லும் - 2
வரம் என்று உனைக் கேட்பதெல்லாம்
உறவென்னில் உயிர் வாழத்தானே
என் சாயல் அன்று உன் சாயல் இன்று - 2
உன் முன்னே யாம் எல்லாம் ஒன்று
என்றாகும் நன்னாளும் தோன்றும்

Comments

Popular posts from this blog

மனசெல்லாம் மெல்ல மெல்ல மரியே உன் பேரைச் சொல்ல Manasellam mella mella maraiaye un Perai Solla

இறைவனிடம் பரிந்து பேசும் புனித அந்தோணியிரே -Iraivanidam Parinthu Pesum Punitha Anthoniyarey

இறை அன்னையை நோக்கிப் புனித பெர்நார்துவின் மன்றாட்டு

மூவேளை மன்றாட்டு