குழந்தை இயேசு நவநாள்
தொடக்கப் பாடல்: அற்புதக் குழந்தை இயேசுவே! அடியோர் மேல் இரக்கமாயிரும். (மும்முறை) தொடக்கச் செபம்: அற்புதக் குழந்தை இயேசுவே! எங்களை ஆசீர்வதித்து வரவேற்கக் கரம் விரித்துக் காத்திருக்கின்றீர். செபத்தின் வழியாக உம்மை வாழ்த்தி வணங்க எங்களுக்கு உதவி புரியும். நீரே எங்கள் ஆண்டவர். நீரே எங்கள் மீட்பர். எங்களைப் பற்றி உமக்கு அதிக அக்கறை உண்டு. எங்கள் மன்றாட்டுக்களைக் கேட்க நீர் எங்களோடு எப்போதும் இருக்கின்றீர். எனவே, எங்கள் குரலுக்குச் செவிசாய்த்து, எங்கள் மன்றாட்டுக்களைக் கருணை கூர்ந்து அளித்தருளும். வல்லமை மிக்க உமது உதவியைத் தாழ்ந்த உள்ளத்தோடு கெஞ்சிக் கேட்கிறோம். தந்தையோடும், தூய ஆவியாரோடும், இறைவனாக என்றென்றும் வாழ்ந்து ஆட்சி புரியும் இயேசுவே. ஆமென். விண்ணப்ப ச் செபம்: அற்புதக் குழந்தை இயேசுவே! அமைதியற்ற எங்கள் உள்ளங்களில் மேல் உமது கருணைக் கண்களைத் திருப்பியருளுமாறு தாழ்ந்து பணிந்து, வணங்கி வேண்டுகிறோம். இரக்கமே உருவான உம் இனிய இதயம், எங்கள் செபத்தைக் கனிவோடு ஏற்று, உருக்கமாக நாங்கள் மன்றாடிய இந்த வரங்களை அளித்தருளும்படி உம்மைப் பணிவோடு கெஞ்சி மன்றாடுகிறோம்....