நன்றியால் துதிபாடு நம் இயேசுவே நாவாலே என்றும் பாடு - nantiyaal thuthipaadu – nam Yesuvaenaavaalae entum paadu
நன்றியால் துதிபாடு – நம் இயேசுவே
நாவாலே என்றும் பாடு
வல்லவர் நல்லவர் போதுமானவார்
வார்த்தையில் உண்மையுள்ளார் – நன்றி
எரிகோ மதிலும் முன்னே வந்தாலும்
இயேசு உந்தன் முன்னே செல்கிறார்
கலங்கிடாதே திகைத்திடாதே
துதியினால் இடிந்து விழும்
செங்கடல் நம்மை சூழ்ந்து கொண்டாலும்
சிலுவையின் நிழலுண்டு
பாடிடுவோம் துதித்திடுவோம்
பாதைகள்ன் கிடைத்துவிடும்
கோலியாத் நம்மை எதிர்த்து வந்தாலும்
கொஞ்சமும் பயம் வேண்டாம்
இயேசு என்னும் நாமம் உண்டு
இன்றே ஜெயித்திடுவோம்
Comments